"நாம பிரிஞ்சிடலாம்" சொன்னவளை பார்த்து சிலையாக உட்கார்ந்திருந்தான் அவன்.
"ஐ யம் சீரியஸ். எனக்கு உங்ககூட தொடர்ந்து வாழ்ந்து குப்பை கொட்ட முடியும்னு தோணலை."
"ஏன். நாம லவ்பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஐ ஸ்டில் லவ் யூ."
"எஸ். லவ் பண்ணினோம். கல்யாணத்துக்கு முன்னே நான் பார்த்த நீங்க வேற. இப்ப நான் பார்க்கிற நீங்க வேற.".
"அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்."
"யூ ஆர் ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியும் கவிதை எழுதினீங்க. என் மேல இருக்க காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு நினைச்சேன். ஆனா கவிதை மேல இருக்கிற காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது".
"பிரச்சனை அதுதானா. நான் கவிதை எழுதறதையே விட்டுடறேன்."
"பிரச்சனை அது இல்லை. நீங்கதான்."
"நானா. கல்யாணமாகி இந்த ஆறு மாசத்தில எப்பவாவது உன்னை எதாவது சொல்லியிருப்பனா. நீ சொல்ற மாதிரிதானே கேட்டுக்கறேன்."
"பிரச்சனையே அதுதான். நீங்க சொல்லி நான் கேட்கணும். இங்க தலைகீழா இருக்கு. நான் சொல்றதை எல்லாம் நீங்க கேட்டுக்கறீங்க."
"அதுல என்ன தப்பு. அதுதானே பெண்சுதந்திரம்."
"சுதந்திரம்னா என்னோட கருத்தை நீங்க கேட்டுக்கணும். உங்க கருத்தையும் சொல்லணும். இரண்டுல எது நல்லதோ அதை நீங்க செய்யணும். யூ நீட் டு கைட் மி."
"நீ சொல்றது வித்தியாசமா இருக்கு. நான் எப்பவாவது உன்னை அதிர்ந்து எதாவது சொல்லியிருக்கனா. இன்ஃபேக்ட் நீதான் ஒரு சில சமயங்கள்ல என்னை திட்டியிருக்க. அப்ப கூட நான் அமைதியாதான் இருந்திருக்கேன்.".
"நான் ஏதாவது தப்பு பண்ணினா நீங்க சொல்லணும்ன்றதுதான் நான் எதிர்பார்க்கிறது. இந்த ஆறு மாத வாழ்க்கையில என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாயிருக்கு."
"நான் என்ன தப்பு செய்யறேன். நீ கேட்கறது எல்லாம் வாங்கி தர்றேன். அப்பப்ப வெளியில போய் சாப்பிடறோம். நேத்து கூட வெளிய போனோம்.".
"சரிதான். இல்லைன்னு சொல்லலை. நேத்து நாம வெளிய போனப்ப நான் போட்டிருந்த டிரஸ் கலர் சொல்லுங்க பார்ப்போம்."
"...."
"சொல்ல மாட்டீங்க. கவனிக்கலை. நான் என்னை நீங்க வெளிய கூட்டிட்டு போகணும்னு விரும்பலை. என்னை கவனிக்கனும்னுதான் விரும்பறேன்."
"நியாபகம் இல்லாதது தப்பா."
"நியாபகம் இல்லாததுன்னு இல்லை. எதையும் கவனிச்சு பார்த்தா மறக்காது. நீங்க.. உங்க வேலை. உங்க இலக்கியங்கள்... உங்க உலகம் தனி. இதுல நான் தேவையில்லாம இருக்கேன்னு தோணுது."
"அப்படியெல்லாம் இல்லை. என் உலகமே நீதான்."
"பொய். உங்களுக்கு நான் தேவையில்லை.".
"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். தண்ணியடிக்கிறேனா.. இல்லை கண்டபடி ஊர் சுத்தறேனா."
"அப்படியிருந்தா கூட பரவாயில்லையே. திருத்திடலாம். நீங்க தனிரகம். நீங்க நல்லவர்தான். இல்லைன்ல. ஓவர் நல்லவராயிருக்கீங்க. அதுதான் பிரச்சனை. கெட்டவனை திருத்திடலாம். நல்லவனை திருத்தமுடியாது."
"....."
"நீங்க சாஃப்ட்ன்றதாலதான் உங்களை பிடிச்சிருந்தது. ஆனா இவ்வளவு ஓவர் சாஃப்டான ஆளா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. இப்படி இருந்தீங்கன்னா நீங்க வாழ்க்கையில முன்னேறவும் மாட்டீங்க."
"என்னதான் சொல்ல வர்ற.."
"உங்க கூட தொடர்ந்து வாழ விரும்பலை. நாம பிரிஞ்சிடலாம்".
அவர்கள் பிரிந்து போனார்கள். அவன் இப்போது கூட அதிர்ந்து பேசமுடியாதவனாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.
Wednesday, November 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
இப்படியும் பிரிவார்களா என்று கேட்டீர்களானால், மனம் மிகச் சிக்கலானது. மனம்தான் மனிதனை எத்துனை பாடுபடுத்துகிறது.
இது ஒரு உளவியல் சிறுகதை. அவ்வளவே.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
நான் படித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று - அவ்வளவு தான் பகிர்ந்துக் கொள்ள முடியும் - நாகூர் இஸ்மாயில்
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பழமொழி சொல்லுவாங்க 'கழுதையை கட்டிக் கொண்டால் கழுதையின் முன்னால் போனால் கடிக்கும், பின்னால் சென்றால் உதைக்கும்'
நன்றாக எழுதி இருக்கிங்க,
சில பெண்கள், ஆண்கள் தங்களை அடக்கி ஆளவேண்டும் அது தான் ஆண்மை என்று நினைப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
//நான் படித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று - அவ்வளவு தான் பகிர்ந்துக் கொள்ள முடியும் - நாகூர் இஸ்மாயில்
//
நன்றி நாகூர் இஸ்மாயில்.
-------------------------------------------------------------------------------------------------------------
கோவி.கண்ணன்
//நன்றாக எழுதி இருக்கிங்க,
சில பெண்கள், ஆண்கள் தங்களை அடக்கி ஆளவேண்டும் அது தான் ஆண்மை என்று நினைப்பார்கள்.
//
நன்றி.
ஆளுபவன் ஆண் என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. அதிலிருந்து ஆண் வெளியே வருவது பெண்ணுரிமைக்கு ஏதுவானதாக இருந்தாலும் சில பெண்களால் ஏற்கமுடியாததாக இருக்கிறது.
திரைப்பபடங்களும் சமூகமும் கட்டியமைக்கும் நாயக பாவம் இதற்கு காரணமாக இருக்குமோ.
ஐந்து பேரை அடித்து போட்டுவிட்டு "எங்கிட்ட வச்சிக்காத" என்று தன்னை நோக்கி வசனம் பேசும் நாயகன் மேல் கதாநாயகிக்கு காதல் வருவது ஏன்.
//முன்னால் போனால் கடிக்கும், பின்னால் சென்றால் உதைக்கும்//.. :)))
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப நல்லா எழுதுறீங்க... ஒரு பக்கம் கதையில் இவ்வளவு அழமா? சூப்பர்!! நானும் இப்படி எதாச்சு எழுதுனு நினைக்கிறேன். ஆனா.. ஒன்னும் உருபடியா வரமாட்டேங்குது!! ஹாஹா.. உங்க கதைக்கு என் வாழ்த்துகள்!!! தொடர்ந்து இருந்துங்க.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
Thamizhmaagani..
//ரொம்ப நல்லா எழுதுறீங்க... ஒரு பக்கம் கதையில் இவ்வளவு அழமா? சூப்பர்!! நானும் இப்படி எதாச்சு எழுதுனு நினைக்கிறேன். ஆனா.. ஒன்னும் உருபடியா வரமாட்டேங்குது!! ஹாஹா.. உங்க கதைக்கு என் வாழ்த்துகள்!!! தொடர்ந்து இருந்துங்க.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//
நன்றி தமிழ்மாங்கனி.
தமிழ்வலைப்பதிவுகளில் மிக நீளமாக இருந்தால் படிக்கப்படாமல் போய்விடும் என்பதுதான் சுருக்கமாக எழுத வைக்கிறது :))
தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத நடைபிடிபடும்.
தொடர்ந்து வரவும். மிக்க நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
Nice story!!
Very well written!! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நல்லாயிருக்கு மாம்ஸ்.. நல்லா கவனிச்சா.. நெறய கருத்துக்கள் இருக்கு.. ஆழமா கவனிச்சியிருக்கிங்க..
ஆமா நெசமான கதையா?..
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பா....
-------------------------------------------------------------------------------------------------------------
நல்ல கதை :)
-------------------------------------------------------------------------------------------------------------
//Nice story!!
Very well written!! :-)
//
தாங்ஸ் சிவீஆர். :))
-------------------------------------------------------------------------------------------------------------
ரசிகன்...
//நல்லாயிருக்கு மாம்ஸ்.. நல்லா கவனிச்சா.. நெறய கருத்துக்கள் இருக்கு.. ஆழமா கவனிச்சியிருக்கிங்க..
ஆமா நெசமான கதையா//
நன்றி ரசிகன்.
நிசக்கதையெல்லாம் இல்லை. :))
கருத்துக்களை கவனிச்சதுக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
//நல்ல கதை :)//
நன்றி கோபிநாத். :))
-------------------------------------------------------------------------------------------------------------
அரைபிளேடு சார்,
உங்கள் கற்பனை கதை படமாகுதாம்.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
கோவி.கண்ணன் said...
//அரைபிளேடு சார்,
உங்கள் கற்பனை கதை படமாகுதாம்.
:)//
//
இதில் கணவன் (பார்த்திபன்) ரொம்ப நல்லவராக இருப்பதால் அவரை விவகாரத்து செய்ய விரும்பும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் சாயா.. (என்னாது?)
//
நல்லகணவனை அவன் நல்லவன் என்பதற்காக விவாகரத்து செய்யும் மனைவி. ஆகா. நம்ம கதையேதான். சுட்டுட்டாங்கய்யா. சுட்டுட்டாங்க. காப்பி ரைட்ஸ் வாங்கணும் போல இருக்கே :))))
நன்றி கோ.வி.கண்ணன்.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment