உறவுகளில் திருமணத்துல எனக்கு எப்பவும் ஒரு கன்ஃபியூசன் உண்டு...
இன்னான்னு கேக்கறீங்களா...
என்ன என்ன முறையில உறவில் திருமணம் பாஸிபிள்.... அக்கார்டிங் டு அவர் பாரம்பரியம்...
ஓரு ஆணுக்கான ஆப்சன்ஸ்....
1) அக்காள் மகளை திருமணம் செய்தல்.
2) அப்பாவின் தங்கை/அக்காளின் மகள்.
3) அம்மாவின் தம்பி/அண்ணணின் மகள்.
தெளிவாத்தான இருக்கு என்ன கன்பியூசன் அப்படின்றீங்களா...
ஸ்டடி த ஃபாலோயிங் சினாரியோ...
ஓரு ஆண் தன் அக்காள் மகளை கல்யாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான்.
அந்த பையனுக்கு அப்பாவின் அக்கா = அத்தை.
அதே பையனுக்கு அம்மாவின் அம்மா = ஆயா.
அந்த குழந்தை அப்பாவின் அக்காவை அத்தையாக கருதுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அத்தையின் இரண்டாவது மகள் அப்பாவை வைத்து பார்த்தால் அத்தை மகள். கட்டும் முறை.
அம்மாவை வைத்து பார்த்தால் அம்மாவின் தங்கை சின்னம்மா. அச்சச்சோ...
அப்படின்னா....
அப்பா அக்கா மகளென்று கல்யாணம் செய்த பெண் பையனின் அம்மா...
அப்பாவின் அக்காவான அத்தையின் மகள் என்ற முறையில் பையனுக்கும் கல்யாணம் செய்யும் முறை....
அப்பாவுக்கும் பையனுக்கும் ஒரே பெண் முறைப்பெண் !!!!!!!!!!!!!
ஓ... நோ.... கன்பியூசன்...
யாராச்சும் வந்து எனது கன்பியூசனை கிளியர் பண்ணுங்களேன்.
Thursday, September 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
திருமணத்தில் அனானி ஆப்சனே சிறந்த ஆப்சன். :)
-------------------------------------------------------------------------------------------------------------
வழக்கத்தில் என்ன முறை இருக்கிறதென்றால், பெண் அழகாக இருந்தால் கட்டும் முறை, அல்லது தங்கை முறை. ஒரு குழப்பமும் இல்லையே...

repeat!!!

haranprasanna super...
-------------------------------------------------------------------------------------------------------------
ஹாய்,
மனுஷனுக்கு இப்படித் தான் கன்ஃபியூசன் வரனும். பலே..பலே...
-------------------------------------------------------------------------------------------------------------
//அப்பாவுக்கும் பையனுக்கும் ஒரே பெண் முறைப்பெண் !!!!!!!!!!!!!
ஓ... நோ.... கன்பியூசன்...//
தலையை சுத்துது !
:))
-------------------------------------------------------------------------------------------------------------
ஹரன்பிரசன்னா...
சிம்பிள் சொல்யூசன்... :)
ஆனா கல்யாணம்ன்றது வெறும் அழகை பார்த்துதான் பண்றதா... அழகில்லாதவங்க என்ன பண்ணுவாங்க பாவம்...
இந்த மனச பாக்குறது மனச பாக்குறதுன்னு ஏதோ ஒண்ணு சொல்றாங்களே.... அதை எப்படி பாக்குறது அப்படின்றத பத்தி உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா... :)
-------------------------------------------------------------------------------------------------------------
Super அரை!!
ஓசை செல்லாவோட பதிவை படிக்க ட்ரை பண்ணி நொந்து போய் இங்க வந்தேன் .. you didnt disappoint me!
-------------------------------------------------------------------------------------------------------------
கமெண்டிய அனானிகளுக்கு நன்றி...
நமக்கு ரிபீட் போட்ட அனானி :)
ஹரன்பிரசன்னாவுக்கு ஜே போட்டா அனானி :)
மற்றும் டிஸ்அப்பாயின்ட் ஆகாத அனானி :)
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க சுமதி...
இந்த கன்பியூசனுக்கு உங்ககிட்ட ஏதாச்சும் சொலுயூசன் இருக்கா :)
-------------------------------------------------------------------------------------------------------------
கோவியாரே..
நமக்கு இந்த டவுட்டு ரொம்ப நாளாவே இருக்குங்க...
இப்படி ஒரு ஜெனரேஷன் கேப் கல்யாணத்துல இருந்தா கன்பியூசன் வரத்தானே செய்யும்..
யோசிச்சா தலை சுத்துது...
பார்ப்போம் யாராச்சும் இதை கிளியர் பண்ணுவாங்கன்னு நம்பி இங்க கேட்டு இருக்கேன்...
உங்களுக்கு புரிஞ்சுச்சுன்னா கிளியர் பண்ணுங்களேன்... :)
-------------------------------------------------------------------------------------------------------------
Arai Blade,
Neenga muzhusaave kuzhappitteenga.:))
many many uRavu muRaikaL ithilirunthu varume...
paarungaLEn....
athai+paatti
appavoda thambi
chiththappa+mama
appavoda ANNA
periyappa+mama
appavoda thangai
athai+chinna paatti
appavoda appa
thaththa+koLLuth thaththa...
confusion thaan...:))
ammavukku paattiye maamiyaar.
thalai maththiramaa suththum..
ulakame suththuthu.
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க வல்லிசிம்ஹன்...
ஆமாங்க நிஜமாவே பயங்கர குழப்பம்தான்.
சொந்த அம்மா வழி பாட்டியே மாமியார் !!!!
நேர் பேரனே பாட்டிக்கு கொள்ளு பேரன்.
அக்காவோட பேரன் தனக்கும் பேரன் அப்படின்னு எடுத்துக்கிட்டா.... அப்பாவுக்கு பையனே பேரன்.
பையனுக்கு அப்பாவே தாத்தா !!!!!
சுத்துது... சுத்துது.... தலை சுத்துது.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
மேல இருக்கற கட்டுரை ஆணியப் பார்வையா இருக்கு....
பெண்ணிய பார்வையில யோசிப்போம்.... ஏதாச்சும் கிளியர் ஆகுதான்னு பார்ப்போம்.
பெண்ணுக்கு உள்ள உறவுமுறை திருமண ஆப்சன்...
1) அம்மாவின் தம்பி. (தாய்மாமன்)
2) அம்மாவின் அண்ணன்/தம்பி (தாய்மாமன்) மகன்.
3) அப்பாவின் அக்கா/தங்கையின் மகன்.
ஸ்டில் நாட் கிளியர்...
இன்னாங்க இது ஒரு பொண்ணு தாய்மாமனையும் கட்டலாம். தாய்மாமன் பையனையும் கட்டலாம்னா...
நம்ம கலாச்சாரத்துல ஏதோ பெரிய ஓட்டை இருக்க மாதிரி தெரியுதே....
எனி படி.. குட் யூ பிளீஸ் கிளியர் மி ஆன் திஸ்.
-------------------------------------------------------------------------------------------------------------
TOTAL CONFUSION
-------------------------------------------------------------------------------------------------------------
//பொண்ணு தாய்மாமனையும் கட்டலாம். தாய்மாமன் பையனையும் கட்டலாம்னா...
//
இப்பதான் நீங்க சுறுக்கமாக தெளிவாக சொல்லி இருக்கலாம்.
தாய்மாமனும் அவரது பையனும் ( கட்டி இருந்தால் அவளுக்கு மகன்) முறையா ?
என்ன கொடுமை அரைபிளேடு சார் !
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க இசக்கிமுத்து...
கன்பியூசனோ கன்பியூசன்தான் :)
-------------------------------------------------------------------------------------------------------------
கோவியாரே...
வேற வேற ஆங்கிள்ள யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த உறவுகளின் திருமணத்துல உறுத்தல்தான் இருக்கு.
தன்மகரந்த சேர்க்கையை விட அயல்மகரந்த சேர்க்கைதான் சிறந்ததுன்னு தாவரவியல்ல படிச்சதா நியாபகம்...
தாவரங்களுக்கே இப்படின்னா மனிதர்களுக்கு..
-------------------------------------------------------------------------------------------------------------
அயல் மகரந்தச் சேர்க்கைதான் தீர்வு. அதி் குழுப்பமில்லை. இந்த அயல் நிஜமான அயலாக இருக்க வேண்டும், அதாவது சாதி. மதம் தாண்டிண அயலாக.. எப்படி நம்ம முழு பிளேடு.
-------------------------------------------------------------------------------------------------------------
there are only 2 groups in tamil tradition. pankaali ie annan thambi murai. muraimaikkararkal ie maaman machan murai. ponnu kodukkal vaankal eppovum muraimaikkararkalidam thaan. pankalakalukkul illai. ippadi paarthaal, oruthatuku thankai, makal, akkaa, athai ellaam orae maadhiri ie +. maaman makal , akkaa makal, athai makal, ammaa, sithi, ellaam -.
entha oru ponnaiyum kattanum enraal intha + / - multiplication logic use panni thaan paarppaanka. for example maaman makal murai enraal avalai kattalaam. aanaa avaloda makal unakku makal murai aavathaal katta mudiyaathu. ithukku maela vayasu konjamaavathu kooda irukkanum. appuram kaasu sothu, padippu ,adnthasthu, jaathakam ellaam paarthu thaan kalyanam pannuvaanka
-------------------------------------------------------------------------------------------------------------
தலீவா...ஏமி இது கன்ப்யூசன்?
இந்தக் காலத்துல
அம்மா, அப்பா - மம்மி டாடி ஆயிட்டாங்க!
மத்தவங்க எல்லாம் ஆண்டி,அங்கிள்-ன்னு standardize ஆயிடிச்சி! :-))
கூடப் பொறந்தவங்களை Hey Dude ன்னு கூப்பிடுதுங்க!
அப்புறம் எதுக்கு கன்ப்யூசன்!
ஒன்லி ஆண்டி,அங்கிள் தான்! :-)))
-------------------------------------------------------------------------------------------------------------
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
ஒரு மண்ணும் பிரியல!!
இவ்வளவு குழப்பத்தோட ஒரு கல்யாணம் தேவையா???
இந்த கேள்வியை நீங்க பாலசந்தர் கிட்ட கேட்க வேண்டியது!!
எதுக்கு எங்களை மாதிரியான "அப்பாவி" பதிவர்கள் கிட்ட கேட்குறீங்க??? :(
-------------------------------------------------------------------------------------------------------------
ஜமாலன்
//இந்த அயல் நிஜமான அயலாக இருக்க வேண்டும், அதாவது சாதி. மதம் தாண்டிண அயலாக//
முற்றிலும் சரி.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கில விளக்கமளித்த அனானி. புரிந்தது நன்றி.
ஆனாலும் அடிப்படை குழப்பம் போகவில்லை.
தாய்மாமனை கட்டுவதா அல்லது தாய்மாமன் மகனை கட்டுவதா என்று ஒரு பெண் எதைக்கொண்டு முடிவெடுக்கிறாள். வயதை வைத்து மட்டுமா.
(எ.கா) 45 வயது தாய்மாமனுக்கு 23 வயதில் ஒரு பையனும், 25 வயதில் மற்றுமொரு தாய்மாமனும் இருப்பதாக கொண்டால்... அந்த பெண்ணுக்கு இருவருமே கட்டும் முறை என்று வருமே.
மீண்டும் கன்பியூசன். :)

Romba yosikkireenga.
ippadi ellam yosikka koodadu.
-------------------------------------------------------------------------------------------------------------
கே.ஆர்.எஸ்.
மாமா மாமி, ஆண்டி அங்கிளாகலாம். அம்மா மம்மியாகி, அப்பா டாடியாகி டம்மியாகலாம். அதனால் அடிப்படை உறவுகள் மாறிவிடுமா என்ன.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
சி.வீ.ஆர்.
:)
பாலச்சந்தரை விடுங்க... அவர் அதிகம் படம் பண்றதில்லை...
சிம்பு புதுசா எடுக்கற கெட்டவன் படத்துல அத்தைய லவ் பண்ற மாதிரி கதையாம். அத்தையா நடிகை சங்கீதா.
படம் வந்ததும் அதை பார்த்தாவது நம்ம டவுட்டு கிளியர் ஆவுதான்னு பார்ப்போம். :)
-------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கில விளக்கமளித்த அனானி. புரிந்தது நன்றி.
ஆனாலும் அடிப்படை குழப்பம் போகவில்லை.
தாய்மாமனை கட்டுவதா அல்லது தாய்மாமன் மகனை கட்டுவதா என்று ஒரு பெண் எதைக்கொண்டு முடிவெடுக்கிறாள். வயதை வைத்து மட்டுமா.
(எ.கா) 45 வயது தாய்மாமனுக்கு 23 வயதில் ஒரு பையனும், 25 வயதில் மற்றுமொரு தாய்மாமனும் இருப்பதாக கொண்டால்... அந்த பெண்ணுக்கு இருவருமே கட்டும் முறை என்று வருமே.
மீண்டும் கன்பியூசன். :)
Yes. Both are eligible. What is the confusion? Aan paavam padam paartheenkalaa? athula Pandiyaraajan VK Ramasami kittae kaetpaaru. nee enka ammavai kattikkittappo naan unka ammavai katta koodaathaannu. naan sonna logic padi ithu correct thaan. innum aazhamaa yosicheenkannaa maamiyaar marumakal problethukku kooda ( Not talking abt sex) ithum oru reason. Yaarum appadi ellaam panna koodaathu panna maattaanka. Intha +/- mattum vachi kalyaanam pannurathu illai. graamathula ellorayum pankali illaatti maman machannu thaan kooppiduvaanka. maamaa nnu koopiduravankali ellaam kalyaanam panna mudiyaathu. aanaa muraipponnunkalai kindalaa paesurathu casual. thankachinkaltta paesurappo oru kattuppaadoda paesvaanka. kindalil kooda kattuppaadu irukkum. aanaa muraipponnunkaltta paesurappo konjam jollu vittu paesuvaanka. sila samayam double meaning koooda irukkalaam. aanaa ellaam iru limit thaan.

Post a Comment