Tuesday, September 11, 2007

கடைசியாய் சில வார்த்தைகள்

கடைசியாய் சில வார்த்தைகள்


பெரியாரின் சமூக பணிகளுக்காக பெரிதும் கடன்பட்ட தமிழர்களில் ஒருவனான நான் பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார் என்றதும் தமிழுணர்வு மேலோங்கி நான் ஒரு பதிவிட்டதும்

தமிழனுக்கு காலமெல்லாம் பாடுபட்ட பெரியார் தமிழின் உன்னத இலக்கியத்தை ஏனப்படி சொன்னார் என்று கேள்வியெழுப்பியதும்

பெரியார் தமிழ் என்ற இரண்டு குறிச்சொற்களை கொண்டு கூகுளிய போது பெரியார் தமிழுக்கு எதிரான சொன்னவை மட்டுமே கிடைத்தன பாராட்டி சொன்னவை ஒன்றுமே கிடைக்கவில்லையென்பதும்

பெரியாரின் புகழ்பாடும் நூற்றுக்கணக்கானவர்கள் நிறைந்த வலையுலகில் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் பெரியார் தமிழ்ப்பணியே ஆற்றவில்லையா அல்லது பெரியாரின் தமிழ்ப்பணிகளை யாருமே ஆவணப்படுத்தவில்லையா என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது

பெரியாரை விமர்சித்தவுடன் எனது பின்னணியை ஆராய்ந்து கண்டுபிடித்த (!!!!) சில அனானி பின்னூட்டங்கள் இதோ
எனது சாதியை கண்டுபிடித்த அனானி(கள்) வாழ்க

வலையுலகில் எதையும் விமர்சிக்க வேண்டுமெனில் சாதிப்பெயரை சொல்லிவிட்டுதான் விமர்சிக்க வேண்டுமெனில்

எனது சாதி மனித சாதி

மீண்டும் வரலாம் என்று எனக்கு இருந்த கடைசி ஆசையையும் துறந்து

இந்த வலைப்பூவை சாதிக்கு தின்னக்கொடுத்து

குறைந்த பட்சம் பின்னூட்டிய அனானி(கள்)யாவது எனது வெளியேற்றத்தில் மகிழ்வார் என்ற மகிழ்வோடு மொத்தமாய் விடை பெறுகிறேன்

பின்னூட்டப் பெட்டியை மட்டுறுக்காமல் திறந்து விட்டேன்
அனானி(கள்) வந்து ஆசைதீர வேண்டிய சாதி பெயரை சொல்லி திட்டிக்கொள்ளவும்

(எனது கடைசி முற்றுப்புள்ளியை போன முற்றும் பதிவிலேயே போட்டு விட்டதால் இந்த பதிவில் முற்றுப்புள்ளிகள் இல்லை)


நன்றிகளுடன் மொத்தமாய் விடைபெறும்
அரைபிளேடு

16 comments:

said...

இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. உங்க பதிவிலேயே எனக்கு ஆரியக் குஞ்சு என்ற அழகான பெயர் கிடைக்கவில்லையா. பதில் சொல்லாமல் இப்படித் திட்டும் நாகரிகம்தானே நம்மை மேலும் வெறுப்படைய செய்கிறது. நீங்க பாட்டு ஒரு ப்ரேக் எடுத்துக்கிட்டு திரும்பி வாங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு
உங்களுக்கு வந்திருப்பதெல்லாம் ஜுஜூபி திரும்ப வருவதும் வராததும் உங்கள் முடிவு.
அரை பிளேடு என்ற பெயர் பார்த்து பல பதிவுகளை படிக்காமல் போய்விட்டேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமாம் இப்ப எதுக்கு 'கடைசி' ன்னு 'அறம்' பாடிக்கிட்டு இருக்கீங்க?

உங்களைத் திட்டுனவங்க யாராவது சொந்தப் பேருலே தைரியமா எதிரே வந்து சொன்னாங்களா?
வலை உலகில் இது இப்ப ரொம்பவே சகஜமாப் போச்சு.
லீவு எடுத்துக்கிட்டுப் போய், கொஞ்ச நாளில் திரும்ப வாங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ப்ளேடு, மொக்கையா இருக்கே ரீஸனு.

இதுக்கெல்லாம் கவலப்பட்டா ஆவுமா?

மூணாங்க்ளாஸ் ஃபெயிலாயிட்டு ஏதோ ஒரு ப்ரவுஸிங் செண்டர்ல ஒக்காந்துட்டு, வரவன் போறவன் செருப்ப பாத்துக்கர ஒரு ஒரு பரதேசி, தனக்கு தெரிஞ்ச தமில்ல ஏதோ ஒளறிருக்கான்.
அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு பதில் சொல்றதே பெரிய விஷயம்.

நீங்க என்னன்னா வுட்டுட்டுப் போறேங்கறீங்க?

டூ ஸில்லி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆல் இன் தெ கேம்!

ஒரு பிரேக் போட்டுட்டு மறுபடியும் வாங்க அரைபிளேடு!

எனக்குக் கூட சமீபமா இது மாதிரி ஒரு மிரட்டல் வந்திருக்கு!-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னை விட உங்களை அதிகமா திட்டிட்டாங்களோ?

அய்யா அரைபிளேடு,
நீங்க தொடர்ந்து பதிவு எழுதறதும் எழுதாததும் உங்களுடைய தமிழார்வம், சேவை மனப்பான்மை, தைரியம், நேர்மை, ஒழுக்கம், சமூக ஒற்றுமை போன்ற அடிப்படை குணங்களை பொறுத்து இருக்கு.

அப்றம் உங்க வசதி.

கதவு இன்னும் திறந்துதான் இருக்குது.

உள்ள வாங்க! வாங்க!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜாதி இல்லேன்னு சொல்றவங்கதான் முதல்ல ஜாதி பார்ப்பாங்களாம்.இது சத்யராஜ் அமைதிப்படையில சொன்னது. திராவிட குஞ்சுகளுக்கு செந்தமிழ்தான் தாய் மொழி போல. இதுக்கு போலியே பரவாயில்லேப்பா. தைரியாமா போலிதான்னு திட்டுவாரு. இந்த இடைஞ்சான் குஞ்சுகள்தான் ஆட்டம் போடுது. என்னைக்குதான் நல்ல மொழி கத்துக்குமோ, பெரியார் வழி நடக்குமோ..-------------------------------------------------------------------------------------------------------------
said...

ignore & take it easy...-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு..

சில அரை லூஸ்களின் அரைவேக்காட்டுத்தனமான கூச்சலைப் பொருட்படுத்த வேண்டாம். உங்கள் எண்ணங்களை உங்கள் தளத்தில் வெளிப்படுத்துவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை..

மறுக்காமல் ஒரு சிறிய இடைவெளி எடுத்து உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு திரும்பி வாருங்கள்..

இந்த அரை லூஸ் குஞ்சுகள் என்றென்றைக்கும் வளரப் போவதில்லை. குஞ்சுகளாகவேத்தான் இருக்கப் போகின்றன. நமக்கெதற்கு பயம்..?-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானிகளே திட்டுவதாக இருந்தால் என்னைத்தான் திட்ட சொன்னேன்

பிறரை திட்ட இது இடமில்லை

அனானி பின்னூட்டங்கள் நீக்கப் படுகிறது-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி ஆப்சன் நீக்கப்பட்டது

பெட்டி பதிவர்களுக்காக திறந்தே கிடக்கிறது

நன்றி வணக்கம்-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு,

சாதிக்கு அப்பாற்பட்டு எல்லோரும் ரசிக்கும்படி இதுவரை எழுதிவந்துள்ளீர்கள். நன்றி...

முகம் காட்ட பயப்பட்டு அனானி போர்வையில் வந்து வாந்தி எடுத்துள்ள இழி பிறவிகளுக்கு மரியாதை அளித்து போகிறேன் என்கிறீர்... என்போன்ற உண்மையான ரசிகனுக்கு என்ன பதில்?

~மாறன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

'கடைசியாய்' இன்னொருமுறை யோசித்து, கடைசியாய் ஒரு நல்ல முடிவைச் சொல்லவும்.

Its absurd, if you are going away, because of those stupid remarks.

I would really like to see more posts - both comic, and some occasional serious ones :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னை விட யாராவது அதிகம் திட்டு வாங்கியிருக்க முடியுமா? இழிபிறவிகள் எங்குதான் இல்லை? நீங்கள் பாட்டுக்கு வாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

யோவ் வெக்கமா இல்லயா உனக்கு? எவனோ மூஞ்சி தெரியாத மூணு பேரு திட்னா ஓடி பூடுவியா? உன் வூட்டுக்கு மூணு மொட்ட கடுதாசி வந்தா வூட்ட பூட்டிட்டு ஓடிடுவியா? போடா கொய்யாலன்னு திரும்பி வா மாமே.

(அதுக்குன்னு நம்ம டோண்டு சார் பேச்சல்லாம் கேட்ராதபா. அந்த ரேஞ்சுக்கு வசைய வாங்கி கட்ரதுலாம் யுக்தி நு சொல்லி நம்மாள லாம் தாக்கு புடிக்கமுடியாது :) )-------------------------------------------------------------------------------------------------------------
said...

டோண்டு சார் சந்தோஷமா இருக்குமே தொணைக்கு ஆள்வந்து மாட்னதுல.-------------------------------------------------------------------------------------------------------------