Thursday, November 30, 2006

ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு..

இது நான் ஒரு தபா ஹிந்தி எக்சாம் எயுதனப்ப நடந்த காமடி..

நம்ப ஹிஸ்டரில நடந்த இம்பார்டன்டான விஷயம்...
ஒன்ஸ் அப்பான் ய டைம்... இன் மத்யமா எக்சாம்....

நம்ப பேரு ஒண்ணா அரை பிளேடா இருக்கலாம், ஆனா நான் ஸ்ட்ரெயிட்டு பார்வார்டு...
காப்பி, பிட்டு எல்லாம் ஒளிச்சி வச்சி எயுத மாட்டேன்..
ஸ்ட்ரெயிட்டா டேபிள் மேல வச்சே எயுதுவேன்... (ஸ்ட்ரெயிட்டு பார்வர்டு.. ஹி.. ஹி).

இந்த இந்தில மத்யமாவ மட்டுமே மூணு தடவ எயுதியும் முடிக்க முடியாம போச்சி..

மேட்டருக்கு வருவோம்...

மூணாவது தடவய நான் எக்சாம் ஹால்ல உக்காந்து கொஸ்டினு பேப்பர பாக்க சொல்லதான்... எனக்கு ஞானோதயம் வந்திச்சு..
இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இந்திய படிக்கணுமான்னு...

நான் தமிலன்..
ஹிந்தி ஒயிக..

இதுக்கு மேல நான் ஹிந்தி பரீட்சை எயுதற மாதிரி இல்லன்னு பேப்பர மடிச்சி உட்காந்துக்னேன்.

இந்த ஹிந்தி பரீட்ச கீதே இத அஞ்சாங் கிளாஸ் பையன்ல இருந்து அறுவது வயசு தாத்தா வரிக்கும் எயுதுவாங்கோ...

பக்கத்துல பார்த்தா ஒரு பையன் படு சீரியஸா எயுதுறான்.. பதிமூணு வயசு இருக்கும்.. பரவாயில்ல... பையன் நல்லாவே படிச்சி இருப்பான் போல கீதுன்னு பார்த்தா.. புடிச்சாரு பாரு சூப்பருவைசரு..

பையன் அட்டையில ஒரு ஃபுல் கட்டுரைய எயுதி கொண்டாந்துக்கிறான் போல...

சூப்பருவைசரு புட்சதும் பையன் உட்டாம் பாரு ஒரு பிட்டு "சார், இது இந்த பரீட்சைக்கு எயுதுனது இல்ல சார். பிராத்மிக் பரீட்சைக்கு எயுதுனது. " அப்படின்னு..

சூப்பர் வைசரு அட்டய வாங்கி புரட்டி பொரட்டி பாத்து முயிக்கிறாரு. அவருக்கு இந்தி தெரியாது போல.

பக்கத்ததுல இருந்த காலேஜ் பொண்ணு ஒண்ணு கிட்ட அட்டய கொடுத்து இது எந்த பரீட்சக்கானது சொல்லுன்னு குடுத்தாரு..

அட பேக்கு...
அந்த பொண்ணும் இது தான் சாக்குன்னு பட்சிச்சி, பட்சிச்சி, அஞ்சி நிமிஷம் பட்சிட்டு...
இது இந்த பரீட்சைது இல்லன்னு சொல்லுது...

இந்த மாங்காவும் அத நம்பி, அந்த பையன்கிட்டயே திருப்பி தர ஒரே காமடி...

அந்த பையன் வேற, என்ன பாத்து "பிட்டு ஏதாவது வேணுமா"ன்னு கேக்கறான்..

நோ, தாங்ஸ் தம்பின்னு சொல்லிக்னேன்.

இப்படியெல்லாம் இந்த பரீட்சய எயுதி நான் கியிக்க போறது ஒண்ணுமில்ல அப்படின்னு நமக்கு ஞானோதயம் வந்து ஒரு மணி நேரம் ஆச்சே...

என்ன அப்பவே ஒயுங்கா படிச்சு இருந்தா, ஹிந்தி படம் பாத்தா பிரியும்..
ஏதாவது ஹிந்தி பொண்ணுகிட்ட கடல போட முடியும்... இதுக்கு மேல இந்த இந்திய வச்சு நாம இன்னா பண்ண போறோம் சொல்லு..

Wednesday, November 29, 2006

குவார்ட்டர் இல்லாமல் நான் இல்லை


அமெரிக்கா நமக்கு புச்சுப்பா...

இங்க இறங்கனதும் நமக்கு ஒண்ணுமே பிரியலபா..

நாம இங்க வந்து இறங்கனதும்.. நம்ம ஃபிரண்ட கால் பண்ண வேண்டி இருந்திச்சி..

இங்க கீற பப்ளிக் போன பாத்தா அதுல 50 செண்ட் காயின் வேணும்னு எயுதி கீது..

நாம ரொம்ப இன்டலிஜன்ட இல்ல... 1 டாலருக்கு 100 செண்ட் அப்பிடின்னு நமக்கு தெரியாதா இன்னா...

நம்ம கிட்ட கீறதோ நோட்டுங்கதான்... சில்லற கூட 1 டாலர் 5 டாலர் நோட்டுதான்..

50 செண்ட் காயினுக்கு எங்க போறது...

அங்க இருந்த கடயில போயி 1 டாலர் நோட்ட நீட்டி இரண்டு 50 செண்ட் காயின் வேணும்னு கேட்டா.. 50 செண்ட் காயினே இல்லன்றான்...

சரி இந்த கடயிலதான் இல்லண்ணு இன்னொரு கடயில கேட்டா அவனும் இல்லன்றான்...

சரி போன்ல பார்த்தா வெளிநாட்டுக்கு பேச 1 டாலர் போட்டுகிறான்.
சரின்னு கடைக்கு போயி 1 டாலர் நோட்டு காகிதத்த கொடுத்து 1 டாலர் காயின வாங்கிக்குனு வந்துக்னேன்.

அத்த போட்டா 1 டாலர் காயினு மெசினுக்குள்ளாறயே போக மாட்டேங்குது.. நம்ம ஊருல பெரிய ஒரு ரூபா சின்ன ஒரு ரூபா இருக்குமே. அந்த மாறி பெரிய 1 டாலர் காயின கொட்துட்டானா இன்னா...

எவனயாவது கேட்கலாம்னாலும் இவங்க இங்லீஷ் நமக்கு பிரிய மாட்டேங்குது..

அரை மணி நேர அவஸ்தைக்கு பின்னால நம்ம ஊரு ஆளு மாறி ஒருத்தன பார்த்தனா... அப்பாடா சரின்னு ஓடி புடிச்சி அவன கேட்டா.. க்யான்னு திருப்பி கேக்கறான்..

சரி உடு... நம்ப இந்தியா காரனா இருந்தா போதும்... நம்ப இண்டியன் இங்லீஷ் பேசுனா போதும்னு, அவன கேட்டேன்...


அவன் நம்ப உலக மகா டவுட்ட கிளியர் பண்ணான். புண்யவான்.
இங்க 50 செண்ட் காயின்னு ஒண்ணு கிடையவே கிடையாது...
அமெரிக்கால குவார்ட்டருன்னா 25 செண்ட்.


மெசினு 50 செண்ட் கேட்டா இரண்டு குவார்ட்டரு போடனும்னு சொல்லி 1 டாலருக்கு நாலு குவார்ட்டரு குடுத்ததுக்கப்புறம்.. அந்த குவார்ட்டற போட்டு போன பேசி.. போன உசிரு திரும்பி வந்ததுடா சாமி...

இதனால இன்னா சொல்லிக்கிறன்னா, அமெரிக்கால போன்ல இருந்து, துணி தோய்க்கற மெசின்ல இருந்து எல்லாத்துக்கும் குவார்ட்டரு தேவப்படுது... குவார்ட்டரு உட்டாதான் எல்லாமே ஒர்க் ஆகுது...

அதனாலதான் சொல்லிக்கிறேன்... குவார்ட்டரு இல்லாம நான் இல்லை.


வரலாற்று சிறப்பு வாய்ந்த பிளேடு கதை...


ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாரு.. அவருக்கு நாலு பசங்க..
அவங்க பேரு
பிளேடு,
பிளேடு பிளேடு,
பிளேடு பிளேடு பிளேடு,
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.


அப்பா ஒரு நாள் இன்னா பண்ணாரு பெரிய பையன் பிளேடுவ கூப்டாரு...

"பிளேடு நைனாக்கு பிளேடு வோணும்.. வாங்கியாடா"ன்னாரு..பிளேடு கடைக்கு போனானா..
ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல..

பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு வை கூப்டாரு...

"பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் இன்னும் வரல.. நீ போய் பிளேடுக்கு இன்னாச்சி பாரு" அப்படின்னாரு...
பிளேடு பிளேடு கடைக்கு போனானா..

ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடுவும் வரல..

பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு...


"பிளேடு பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு, பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...
பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..

ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..

பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு...

"பிளேடு பிளேடு பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... சரின்னு நம்ப பிளேடு பிளேடு பிளேடுவையும் அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு,பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..

ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..

பொறுத்து பாத்த நைனா பொங்கியெழுந்து இந்த இந்த புள்ளங்கள பெத்ததுக்கு பிளேடுங்கள பெத்து இருக்கலாம்னு தலயில அடிச்சிக்குனு அவரே போய் பிளேடு வாங்கினு வந்துக்னாரு.

அப்பாலிகா இந்த பிளேடு ஃபேமிலி அவங்க ஃபேமிலி பாட்டை பாடி ஒண்ணாயிட்டாங்க. அவ்ளோதான்பா கதை..

யாருப்பா அது கையில பிளேடோட உன்னை கீசிட்டுதான் மகனே மறுவேலன்னு கிளம்பி வர்றது...

இதப்பாருங்க இது ஒரு ஃபேமிலி ஸ்டோரி.. நாளிக்கே தமில் சினிமால நம்ம வடிவேலு நட்சார்னா நீங்க உயுந்து உயுந்து சிரிப்பீங்கோ...

அதனால இந்த கதய லைட்டா எட்துகோங்கோ..

கத கேட்ட எல்லாத்துக்கும் உங்க பொறுமய பாராட்டி ஒரு தாங்ஸ்.

Tuesday, November 28, 2006

மாவீரன் அரைபிளேடு


நம்மளுக்கு எவ்ளோ தெகிறியம் கீதுன்றது ஊருக்கே தெரிஞ்சதுப்பா..

நம்ப கிட்ட வாலாட்ட ஒருத்தருக்காவது தெகிறியம் கீதுன்றே..

வெளியே சொல்லிக்காம நமக்கும் உள்ளுக்குள்ள பயம் ஒண்ணு கீது...

எம்மாம் பெரிய ஆளா இருந்தாலும் எல்லார்க்கும் எதுக்காச்சும் பயம் இருக்கும்பா...

நம்பளுக்கு இந்த ஆவி... பாவி... இதுக்கல்லாம் பயம் கிடையாது...
(ஆவி அண்ணாச்சி, அம்மணி கேட்குதா)....

நம்பளுக்கு பயம் எல்லாம் எதுலடான்னா... இந்த கரப்பான் பூச்சி கீதே அதுங்கிட்டதான்....

எம்மாம் பெரிய ஆளு தம்மாம் பூச்சிக்கு பயப்பட்றதா...

இனி நமக்காச்சு இந்த கரப்புக்கு ஆச்சுன்னு ஒரு தபா பொங்கி எயுந்துட்டேன்...


ஹிட் டுன்னு ஒண்ணு கடயில விக்குதே அத வாங்கிக்குனு... கரப்பான் வேட்டைக்கு கிளம்பிட்டேன்...

கரப்பான வேட்டையாடு விளையாடு...


ஒரு செட்டப்பா ரெடியாயாச்சு.... மூஞ்சில ஒரு கர்ச்சீப்பு... நாம கரப்பான் வேட்டைக்கு இல்ல... எல்லா வேட்டைக்கும் இதே கெட்டப்புதான்..


ஆபரேஷன் கரப்பான் ஸ்டார்ட்டு...


தேடு... பிடி... மருந்த அடி...


இன்னாடாது.. நாம சும்மா இருக்க சொல்ல இங்க அங்க பறக்கற கரப்பான் நாம மருந்த கையில எடுத்ததும் இந்த ஆட்டம் காட்டுது..

அவ்ளோ ஈஜியா வுட்ருவோமா என்னா...

மூளய போட்டு திங்க் பண்ணதுல கரப்பான் பூச்சி மேலன்னு இல்ல எங்கல்லாம் கரப்பான் வருமோ அங்கல்லாம் மருந்து அடிக்க வேண்டியது தான்..

பெட் ரூம், சமயல் ரூம், பாத்து ரூம் எல்லாத்துலயும் அடிச்சாச்சி...

சுத்தி வந்து பார்த்தா ரெண்டு கரப்பான் மல்லாந்து கைய கால உதறுது...

ஹா.. ஹா.. எங்கிட்டியேவா... இப்ப பார்த்தியா....

இந்த சக்ஸஸை கொண்டாட வேணா...

ஓப்பன் தி பிரியாணி.... வாங்கிக்குனு வந்து வெச்ச பிரியாணி பொட்டலத்த காலி பண்ணிட்டு கவுந்து படுத்தா...

கனவு... கரப்பான் பூச்சியா தொறத்துது...
எயுந்திருக்க முடியல..

கஷ்டப்பட்டு கண்ண தொறக்கிறேன்..

கண்ணெதிர்க்கோ வெள்ள கோட்டு போட்ட கரப்பான் ஒண்ணு.. சே.. இல்லப்பா இது டாக்டரு...

"மிஸ்ட்ரு அரபிளேடு... நல்ல வேள உங்கள டைமுக்கு இங்க கொண்டாந்தாங்கோ.. பொழச்ச... ஏன் கரப்பான் பூச்சி மருந்து கலந்த பிரியாணி சாப்பிட்டு தற்கொல பண்ணிக்க பாத்த".....

அட பாவிகளா... கரப்பான துரத்தற ஆர்வத்துல ஒரு பாட்டிலு மருந்தயும் வீடு ஃபுல்லா தொளிச்சு... ஆர்வக் கோளாறுல பிரியாணி மேலயும் தொளிச்சு...
அதே பிரியாணிய சாப்புட்டு...

விளக்கமா சொல்லி ஒரு வழியா ரிலீஸ் ஆகி..

வீட்டுக்கு வந்தா...

வாங்க மாவீரரேன்னு வாசல்லேயே நிக்குது கரப்பான் ஒண்ணு...

கரப்பான் போச்சோ இல்லியோ.. கரப்பானோட பயம் நமக்கு பூட்சி.. இப்பல்லாம் கரப்பான பாத்தா நம்ம தோஸ்த்த பாக்கற ஃபீலிங்குதான்...

மாவீரர் கரப்பான் வாயுக....

Thursday, November 23, 2006

தேங்ஸ் கிவிங் டே - அமெரிக்காவில் அரைபிளேடு...இந்த அமெரிக்காலே நமக்கு ஒண்ணுமே புரியலபா..

புச்சா ஒரு பண்டிகை பேரு சொன்னாங்கப்பா..

தேங்ஸ் கிவிங் டேவாம்..

இன்னாடாது.. தேங்ஸ் சொல்லிக்கிறதுக்கு ஒரு நாளா.. அதுல இன்னா பன்னுவாங்கோ.. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தாங்ஸ் சொல்லிக்குவாங்களா..

நம்ம தோஸ்த் கிட்ட கேட்டம்பா... அவரு சொன்னாப்ல... இது அமேரிக்கா டிரடிஷனு... இது அவங்க பண்டிகை..

இதுல லீவு வுட்டுக்குனு பேமிலி எல்லாம் ஒண்ணா கூடி வான் கோழிய வறுத்து திம்பாங்க..

இதுக்கு வான்கோழி வறுவல் தினம்னு இன்னொரு பேருகூட கீது அப்படின்னாரு..

இன்னாடா இது... வான்கோழிய வறுத்து திங்க ஒரு பண்டிகை அதுக்கு ஒரு லீவா அப்படின்னு ரோசிக்க சொல்லோ நம்ம தோஸ்துங்க நியூயார்க்ல தேங்ஸ் கிவிங்குக்கு ஒரு பரேடு கீது... வர்றியான்னாங்கோ.. சரி இன்னாதான் கீது பாப்பமோன்னு நானும் ஜாயின் பண்ணிக்கினம்பா..

இந்த பரேடு வருஸா வருஸம் இதே டைம்ல நடக்கும்.. இப்ப எம்பதாவது தடவய நடக்குது.. இன்னிக்கு எப்படியும் முப்பது லட்சம் பேரு இத பாப்பாங்க அப்படின்னு தோஸ்து சொல்ல நானும் தலய ஆட்டிக்கினேம்பா..


ஆனா சும்மா சொல்ல கூடாது நைனா, செம ஜனம்..
வயக்கமா வண்டி போற ரோட்ட சும்மா ரண்டரை மைலுக்கு புட்சி கட்டிட்டு நியூயார்க் போலீஸ் நிக்குது..

எட்டி எட்டி பாத்தாலும் ரோடே தெரில...
இதுக்குள்ள பரேடு ஆரம்பிச்சு பபூன்லாம் வறாங்கோ..
பெரிசா ஒரு பலூன்.. அதுல மேசிஸ் 80வது தேங்க்ஸ் கிவிங்டே பரேடு அப்படின்னு எயுதி கீது..

இம்மாம் சொல்லோ மழ வேற ஆரம்பிச்சிட்சி.. ரொம்ப இல்லேன்னாலும் சவசவன்னு.. இந்த அமேரிக்காகாரங்களுக்கு இன்னா பொறுமபா.. அந்த மழயிலகூட அப்படியே நிக்கிறாங்கோ.. ஒண்ணு ரெண்டு பேரு குட புட்சிக்கினாங்கோ.. அவங்களயே மய ஒண்ணும் பண்ணாதப்போ நம்பள இன்னா பண்ணும் இந்த மய.. நாமெல்லாம் புயல்லய பூந்து புறப்படற ஆளு... இது பிசாத்து மய... நானும் அங்கியே ஸ்டடியா நின்னுக்னேன்...

அடுத்து பெரிய பெரிய பலூனா வருது... அப்புறம் நம்ம சுதந்திர தின ஊர்வலத்துல வருமே அந்த மாதிரி டெகரேட் பண்ண வண்டிங்கோ.. டிஜைன் டிஜைனா டிரஸ் போட்ட புள்ளங்கோ, ஆளுங்கோ..

இதுல நாம பின்னாடி கீறமோ... ஒண்ணுந் தெரில.. எட்டி எட்டி பாக்க வேண்டி இருஞ்சி... கொஞ்ச நேரத்துல கிடச்ச கேப்புல பூந்து மின்னாடி பூட்டேன்... அரைபிளேடா கொக்கா..

நான் மின்னாடி போனதுமே வந்தது பாரு ஒரு பலூன் வான்கோழிய வறுத்து வச்ச மாதிரி... அடுத்து பாண்டு, திரும்பி பொண்ணுங்கோ.. திரும்பி பலூனா வருது..
இன்னா இன்னாமோ பொம்ம பலூனுங்க.. எம்பக்கத்துல ஒரு சின்ன பையன் வேற.. ஒரோர் பொம்ம வரசொல்லயும் கூவிக்கிறான்..
ஒண்ணு வர சொல்ல கார்பீல்டுன்னு கத்தறான்.. அப்பாலிக்கா ஸ்கூபி டூஊஊ.. அம்டி டம்டி.. ஸ்னூப்பி... பிகாச்சு... பொட்டாட்டோ எட்டு.. ஸ்பாஞ்சி பாப்பு.. எல்லா பலூன் பொம்மைக்கும் குரல் கொட்துக்னே வந்தானா.. நம்பளுக்கும் இதான் அது போலன்னு ஏதோ பிரிஞ்ச மாறி இருஞ்சி..

அப்புறம் சொல்லணும்னா நெறய பாண்டு வாத்தியகாரங்களா வராங்கோ.. கொஞ்ச நேரம் நின்னு நல்லா பாண்டு வாசிங்கிறாங்கோ...
அப்புறம் ஸ்கூல்னு பேனர் போட்டு நிறய பொண்ணுங்கோ கையில ஜிகினா தாள வச்சிக்குனு டான்ஸ் போடுதுங்கோ.. இதுக்கு இன்னாமோ பேரு சொன்னாங்கப்பா.. ஆங்... சியர் லீடர்ஸூ...

அப்புறம் நியூயார்க் போலீஸ்காரங்க ஒரு பரேடு உட்டாங்க... துப்பாக்கி வெச்சிக்குனு... குதிர மேலெல்லாம்.. நான் கொஞ்சம் பேக் வாங்கிக்கினேன்... இன்னாதான் சொல்லு நம்மளுக்கு போலீஸ்னா கொஞ்சம்... ஹி.. ஹி...

திரும்பி எல்லாமே திரும்பி திரும்பி வருது... பபூனுங்கோ.. வண்டிங்கோ. பலூனுங்கோ... பாண்டு வாத்தியம்.. சியர் லீடர்ஸு.. டிபரேண்டா டிரஸ்பண்ண ஆளுங்கோ, குயந்தைங்கோ... எல்லாமே நல்லா கீது..

இவ்ளோ மழயிலயும் அவங்கோ போயிக்கினே கீறாங்கோ... இந்த சனங்கோ பாத்து சவுண்டு உட்டுக்கினே கீறாங்கோ... ரொம்ப நல்லா இருஞ்சிப்பா...

அப்பாலிகா வந்தாரு பாரு சாண்டா கிளாஸ் தாத்தா... பெரிய வண்டில.. அவரு வந்தா கிரிஸ்மஸ்ஸெ வந்தா மாரியாமில்ல..

அத்தோட ஷோ முடிஞ்சிகிச்சி... மொத்தமா மூணே மணிநேரந்தான்..

அட அமெரிக்கா மகாசனங்களே... இத்த போய் இத்தினி பெரிசா பேசிக்கினு கீறிங்களே..

நாங்க நடத்துவோம் பாரு எங்க கட்சிங்களுக்கு மாநாடு பரேடு... பத்து மணிநேரம்.. இத விட பத்து மடங்கு ஆளுங்கள நடக்க வுட்டு ஒவ்வொரு அறுவது அடிக்கும் அறுவது அடில கட்அவுட்டு, பேனர்லாம் வச்சி.. அதுக்கு மின்னாடி இதெல்லாம் பிசாத்து... ஒரு தபா வந்து பாருங்கோ... அவ்ளோதான் சொல்லிக்கினேன்..

நீங்க இன்னா சொல்லிக்கிறீங்கோ....

Wednesday, November 22, 2006

எப்பிடிங்கள்ள இருந்து தப்பிக்கறது எப்பிடி...

நாட்ல இன்னா நடக்குதுன்னா நைனா, யாராவது புச்சா எதாவது பலகாரம் செஞ்சாங்கன்னு இல்ல கண்டு புட்சாங்கண்ணு வெச்சிக்கோ அத சாப்டு முடிச்ச கையோட அத எப்படி செய்யிறதுன்னு குமுதம் சினேகிதிக்கோ, இல்ல அவள் விகடனுக்கோ எயிதி வுடுவாங்கோ..

டெக்னாலஜி அட்வான்ஸா பூட்டதுனால இப்பல்லாம் இன்டர்நட்டுல பேஜு போட்டு எயுதிக்கிறாங்கப்பா..
இன்னா இன்னா மேட்டரு நடக்குதுப்பா...ஒருத்தரு சுடத்தண்ணி வெக்கோ கத்தி கொட்கறாரு..
ஒருத்தரு பச்ச தண்ணி வெக்கோ சொல்லி தறாரு..

ஆப்பம், சிக்கனு, ஆம்லெட்டு, அப்பளம், பச்சி, முறுக்கு, தோச, நூடுல்ஸு வெரைட்டி காட்டிட்டாங்கபா...

நம்மளுக்கு தெரிஞ்சது இன்னான்னா இதெல்லாம் பட்சி இத செய்யாம தப்பிக்கிறது எப்படின்றதுதான்...

எங்காளு ஒருத்தரு இப்படிதான் வெந்தய குயம்பு பத்தி புஸ்தகம் பட்சிக்குனு தொடங்குனாருபா...

கட்சிலே என்னா பன்டாருடான்னா வெந்தயம்னு நினச்சு வெள்ளை எள்ளை கொட்டிட்டாரு...

படா பேஜாரா போச்சிப்பா...

அப்பால அது எள்ளுன்னு தெரிஞ்சி போயி...
ஹி.. ஹி.. நான் தெரிஞ்சுதான் வெச்சேன்.. இது வெள்ள எள்ளு குயம்புன்னு ஒப்பேத்திக்கினாருப்பா..

அத்தோட உட்டாரான்னா இல்லப்பா..

வெள்ள எள்ளு குயம்பு வெப்பது எப்படின்னு புஸ்தகத்துக்கு எயுதி போட்டு அதும் பப்ளிஜ் ஆயி... ரெண்டு மாமிங்கோ நல்ல சமய குறிப்புன்னு லட்டர் போட்டு... காமெடிதான் போ..

இதனால இன்னா சொல்ல வரன்னா மகாஜனங்களே..

சமய குறிப்பு எயுதுங்கோ... படிங்கோ... அது உங்க எயுத்துரிம, படிப்புரிம..

ஆனா செஞ்சி பாக்காதீங்கோ.. ஏன்னா தற்கொலயும் கொலயும் சட்ட விரோதம்...

வெல்லம் போட்ட வெள்ள பூண்டு குயம்பு வெப்பது எப்படின்னு பட்சியா.. காமடியா கீதேன்னு சிரிச்சிக்கனும்... அத வுட்டுட்டு நான் இத்த வெச்சிக்கிறேன்னு துன்னு பாத்து சொல்லுன்னு அடுத்தவுங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது..

இன்னா பிரிஞ்சதா...

Friday, November 17, 2006

கவித எயுதுறேன்

அடுத்து இன்னா எயுதலாம்னு தாடைய சொறிஞ்சதுல கவித எயுதுனா என்னான்னு தோணிச்சிபா..
இன்னா சிரிக்கிற... எயுத மாட்டேன்னு நினைக்கிறியா...
நம்மளுக்குள்ளயும் ஒரு கவிஞ்சரு ஒளிஞ்சி கீறாருபா..

சாம்பிளுக்கு ஒண்ணு உடறேன் புட்சிகோ.
லவ்ஸு கவிததான்..


கண்ணு ஒண்ண நினக்க சொல்ல
ஒலகம் மறந்து போச்சி
ஒனக்கு ஒண்ணுண்ணா எம்மனசு
ஒடிஞ்சி போச்சி
பன்னு கூட துன்னலடி
பத்து நாளா
பாவி படுத்திறியே
பாளும் மன்சு இன்னா செய்யும்..
ஜாலம் காட்டாத
ஜல்தியா வந்துடு.நல்லா கீதாபா.


வல்லவன் புரட்சி டைரக்டரு சிம்பு

வல்லவன்

இந்த படத்த பத்தி இன்னா சொல்றது நைனா..

சிம்பு சும்மா ஒரு புரட்சி பண்ணி கீறாரு பாரு படத்துல...
புல்லரிக்குதுப்பா..

நயன்தாரா நல்லா கீதா.. நம்மாளுக்கு அது மேல ஒரு இது வந்துடுது..

அப்பால பாத்தா அந்த பொண்ணு மூணு வயசு பெரிசா போச்சி..
சரிதான் மாமு.. சச்சின் டெண்டுல்கர், காந்தி எல்லாம் மேரேஜு பண்ணலியா வயசு அதிகமா இருந்தாலும் அப்படின்னு பார்த்தா..

காலேஜ்ல அது வாத்தியாரம்மா, நம்மாளு ஸ்டூடண்டு...

சரி புரட்சி இங்க முடியும்னு பார்த்த இன்னும் கீது..
காதல தாண்டி கசமுசா ஆயிடுது..

அப்பால பொண்ணுக்கு உண்ம தெரியோ...
அது போடான்னு சிம்புவ சொல்லோ..
சிம்பு துரத்தோ..

டப்புனு கட் பண்ணா ஒரு ப்ளாஜ்பேக்கு..

சிம்பு ஸ்கூல் படிக்க சொல்ல லவ்வு...
ஸ்கூல் படிக்கிற ரீமா சென் (!!) கூட..


திடீர்னு ரீமா நீலாம்பரியா மாற நம்பாளு படையப்பாவா மாறறாரு...


நீலாம்பரி கொஞ்ச நாள் ஒளிஞ்சிருந்து, நம்ப ஆளு லவ் பண்றாருன்னதும் கிளம்பி வறாங்க...


எல்லாத்தையும் தாண்டி நம்ப ஆளு எப்படி ஜெயிக்கிறார்தான் கத...

இந்த கதைய இவ்ளோ பொறுமையா உட்கார்ந்து பாக்க வெச்சதுக்கே சிம்புவ பாரட்டலாம்..

நயன்தாராவோ.. ரீமாவோ இல்லண்ணா நாமளாவது இந்த படத்தை முழுசா பார்க்கறதாவது..

புரட்சி இய்க்குனர் சிம்பு வாய்க...

யோவ் சங்கரு, பார்த்துக்க உன்னிய அடிக்கிற மாறி படம் எடுக்கறதுக்கும் இங்க ஆளு கீது...

நாம இங்க இன்னாத்துக்கு கீறோம்னா

எல்லாத்துக்கும் ஒரு கும்புடு வுட்டுக்கிறேன் நைனா...

எல்லாரும் நல்லா கீறிங்களா ?

எல்லாரும் ஏதேதோ எயுதுறீங்கோ..
அத்த எல்லாம் பட்சதுல நமக்கு ஒரே பீலிங்கா பூட்சி..

ஏண்டா சோமாறி, நீயுந்தான் கீறியே.. உன்னோட கருத்து கொளுகை எல்லாம் இந்த மாதிரி வெளியே சொல்லிக்கினியான்னு நம்ம மனசாட்சி கேட்குதுப்பா...
நான் யார்னு கேக்குறியா...நம்ப பாக்கியம் ராமசாமி அப்புசாமி கதைங்கல்ல நம்மளை பத்திசொல்லி இருப்பாரு..

அதான் நம்ப வாத்தியார் பாஷை அதாம்பா மெட்றஸ் பாஷை இது அழிஞ்சிக்குனு வருதுப்பா..


இப்பல்லாம யாரு நம்ம லங்குவேஜு பேசறாங்க..

நம்ம கமலு மட்டும் எப்பவாச்சும் பம்மல் கே சம்பந்தம் மாதிரி படத்துல அப்ப அப்ப பேசறாரு... குமுதத்துல நம்ப தோஸ்து அர்சு எப்பவாச்சும் குரல் கொடுக்கிறாரு....


அதனால முன்னால சொன்னா மாதிரி நம்ம ஹிஸ்டரி கர்த்து கொளுகை அததான் இங்க எயுத போறேன்...

அப்பப்ப வந்து கண்டுக்க நைனா.