Friday, November 17, 2006

வல்லவன் புரட்சி டைரக்டரு சிம்பு

வல்லவன்

இந்த படத்த பத்தி இன்னா சொல்றது நைனா..

சிம்பு சும்மா ஒரு புரட்சி பண்ணி கீறாரு பாரு படத்துல...
புல்லரிக்குதுப்பா..

நயன்தாரா நல்லா கீதா.. நம்மாளுக்கு அது மேல ஒரு இது வந்துடுது..

அப்பால பாத்தா அந்த பொண்ணு மூணு வயசு பெரிசா போச்சி..
சரிதான் மாமு.. சச்சின் டெண்டுல்கர், காந்தி எல்லாம் மேரேஜு பண்ணலியா வயசு அதிகமா இருந்தாலும் அப்படின்னு பார்த்தா..

காலேஜ்ல அது வாத்தியாரம்மா, நம்மாளு ஸ்டூடண்டு...

சரி புரட்சி இங்க முடியும்னு பார்த்த இன்னும் கீது..
காதல தாண்டி கசமுசா ஆயிடுது..

அப்பால பொண்ணுக்கு உண்ம தெரியோ...
அது போடான்னு சிம்புவ சொல்லோ..
சிம்பு துரத்தோ..

டப்புனு கட் பண்ணா ஒரு ப்ளாஜ்பேக்கு..

சிம்பு ஸ்கூல் படிக்க சொல்ல லவ்வு...
ஸ்கூல் படிக்கிற ரீமா சென் (!!) கூட..


திடீர்னு ரீமா நீலாம்பரியா மாற நம்பாளு படையப்பாவா மாறறாரு...


நீலாம்பரி கொஞ்ச நாள் ஒளிஞ்சிருந்து, நம்ப ஆளு லவ் பண்றாருன்னதும் கிளம்பி வறாங்க...


எல்லாத்தையும் தாண்டி நம்ப ஆளு எப்படி ஜெயிக்கிறார்தான் கத...

இந்த கதைய இவ்ளோ பொறுமையா உட்கார்ந்து பாக்க வெச்சதுக்கே சிம்புவ பாரட்டலாம்..

நயன்தாராவோ.. ரீமாவோ இல்லண்ணா நாமளாவது இந்த படத்தை முழுசா பார்க்கறதாவது..

புரட்சி இய்க்குனர் சிம்பு வாய்க...

யோவ் சங்கரு, பார்த்துக்க உன்னிய அடிக்கிற மாறி படம் எடுக்கறதுக்கும் இங்க ஆளு கீது...

5 comments:

said...

அண்ணாத்தே விமர்சனத்துல கீசிடிங்க போங்க :)).. நல்ல கிழிச்சி போட்டிங்க ..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பராச் சொன்னேப்பா!

படத்துக்கு நீ எவ்வளவோ பெட்டரு நைநா!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிம்புவுக்கு லிட்ட்ல் சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் கொஞ்சம் ஓவர்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

காத்தாலே விமர்சனம் பிரிச்சி மேயுதுங்கோ..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ப விமர்சனத்த பாராட்டிக்ன சந்தோஷ், ஆவி அண்ணாச்சி, செந்தழல் ரவி எல்லாருக்கும் தாங்ஸ் சொல்லிக்கிறேன்பா.

மருதநாயகம் அவர்களே, லிட்டில் சூப்பர் ஸ்டாருன்னு நாமளா சொல்றோம். சிம்பு அவராவே சொல்லிக்கிறாரு.. ஹி... ஹி.. உங்களுக்கும் நம்ப பேஜை கண்டுக்னதுக்கு தாங்ஸ்



-------------------------------------------------------------------------------------------------------------