Thursday, December 20, 2007

மாமு... மாமு... போலீஸ் மாமு....

நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது.
எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.
காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.
பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்.
"நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே."
"சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும் நிஜமாகவே பார்க்கவில்லை நான்.
"போர்டு பார்க்கலைன்னா என்னா. இது ஒன்வேன்னு தெரியாதா."
"தெரியாது சார். நான் கொஞ்சம் புதுசு."
"சரி. சரி. ஐம்பது ரூபா கொடுத்துட்டு நகரு."
"ஃபைனா சார்.".
"ஆமா. கொடுத்துட்டு போயிட்டே இரு."
"சரி. சார். தர்றேன். ரிசிப்ட் கொடுப்பீங்களா."
"ரிசிப்டா..."
"ஆமா சார். நான் ஃபைன் கட்டுனதுக்கு ரிசிப்ட்."

அந்த டிராபிக் போலீஸ் என்னை வித்தியாசமாக பார்த்தார்.
"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்காரு. அவர்தான் ரிசிப்ட் கொடுக்க முடியும். அவர் வர நேரமாகும். நீ ஃபைன கொடுத்துட்டு நகரு."
"பரவாயில்லை சார். நான் இருந்து ரிசிப்ட் வாங்கிகிட்டே போறேன்." யோசித்தார்.
"சரி. கொஞ்சம் நில்லு."
கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வண்டியின் பின் ஏறிக்கொண்டார். "பனகல் பார்க் பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு விடு."

அந்த அலுவலகத்திற்கு வெளியே வண்டியை நிறுத்தி இருவருமாய் உள்ளே சென்றோம்.
இன்னொரு போலீஸ்காரரிடம் கொண்டு நிறுத்தினார்.
"என்னய்யா."
"சார். ஒன்வேயில வந்ததுக்காக பிடிச்சேன்."
"சரியா. இங்க ஏன் கூட்டி வந்த."
"ஒன்வேயில வந்ததுக்கு ஃபைன் கட்டணும்னு சொன்னேன். ரிசிப்டு கேக்கறாரு."
அவர் என்னை பார்த்தார்.
"என்ன நீங்க பிரஸ்ஸா."
"இல்லை சார். ஒன்வே. ஃபைன் கட்டுன்னு சார் சொன்னாரு. சரி ரிசிப்டு கொடுங்கன்னு கேட்டேன்."
"எங்க வேலை பார்க்கறீங்க."
சொன்னேன். மேற்கொண்டு என் அலுவலகம் எங்கே வீடு எங்கே என்ற விசாரணைகள்.
"இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்காரு. அவருதான் ரிசிப்டு தரணும். சரி. இந்த பேப்பருல உங்க அட்ரஸ் வண்டி நம்பர் எழுதுங்க."
அவர் கொடுத்த வெள்ளைத்தாளில் எனது முகவரியும் வண்டி எண்ணையும் எழுதினேன்.
"சரி பணத்தை கொடுத்துட்டு போங்க. ஈவினிங் இந்த பக்கமாதானே போவீங்க. வந்து ரிசிப்டை வாங்கிட்டு போங்க."
ஐம்பது ரூபாயை கொடுத்தேன். "தாங்ஸ் சார்."
நேரத்தை பார்த்தேன். 10:15.

அச்சோ. அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. அலுவலகம் சென்றதும் இருந்த ஆணிகளை பிடுங்கி கிளம்பும் போது இரவு 8:30.
இதற்கு மேல் எங்கே சென்று நான் ரிசிப்டு வாங்குவது. அப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.

இன்று வரை எனக்கு தெரியாத விஷயம். ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு. அதற்கு ரிசிப்ட் உண்டா.
அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.

Wednesday, December 19, 2007

ஒரு போர்வீரனின் கதை..

எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன். இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.
இது சொர்க்கமா. இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.
இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.

இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே. இது என்ன கசக்கிறது. மீண்டும் மயங்குகிறேன்.

இம்முறை கண்களை திறக்கிறேன். ஏதோ தெளிவாக உணர்கிறேன். சிரித்தபடி அந்தப் பெரியவர்.

"ஐயா. நான் யார். நீங்கள் யார். இது எந்த இடம்."

"பொறுமை தம்பி. மிகவும் களைத்திருக்கிறாய்.".

"இல்லை ஐயா. இப்போது மிகவும் தெம்பானவனாக உணர்கிறேன். தாங்களே என்னைக் காப்பாற்றி போஷித்தவர் என்று அறிகிறேன். ஆயின் எதுவும் நினைவில் இல்லை. தாங்கள் விளக்க முடியுமா."

"தம்பி. நீ நமது தேசத்தின் குதிரை வீரன். நானொரு சாதாரணத்துறவி. இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் நீ காட்டிய வீரத்தை நினைத்தால் எனக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது."

"ஆம். ஐயா நினைவுக்கு வருகிறது. நமது பகையரசன் கிழக்கு கோட்டையில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் நமது படைப்பிரிவு கிளம்பியது. குதிரைவீரர்களும் காலாட் படையினரும் பல எந்திரப் பொறிகளுடன் கிளம்பினோம். கோட்டையின் மதில் சுவரை தாக்கியழித்து கோட்டையை கைப்பற்ற யுத்தமும் துவங்கினோம். நினைவுக்கு வருகிறது. ஆயின் யுத்தம் என்னவானது. நாம் வென்றோமா ?"

"துரதிர்ஷ்ட வசமாக இல்லை தம்பி. மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்தது. நமது வீரர்கள் மதிலை உடைத்து உள் போந்தார்கள். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நானும் உங்கள் உடனிருந்தேன். கோட்டையை முற்றுகையிட்டு எரியூட்டினோம். என்னமாய் போரிட்டாய் தம்பி நீ. கிட்டத்தட்ட வெல்லும் தருணத்தில் பகைவனின் வடதிசைப் படைகள் வந்து சேர்ந்தன. எண்ணிக்கையில் குறைவான நமது படை அழித்து தள்ளப்பட்டது. நான் பின் வாங்கினேன். போரில் காயம் பட்ட நீ மயங்கி விழுந்தாய். உனது குதிரை உன்னை நமது எல்லையில் கொண்டு வந்து சேர்த்தது. உன்னைக் காப்பாற்றி சிகிச்சையளித்தேன்."

"ஐயா. ஏன் அவ்வாறு செய்தீர்கள். புறமுதுகு காட்டியன் என்ற பழி எனக்கு தேவையா. அந்த யுத்தத்திலேயே நான் வீரமரணம் அடைந்திருக்கக்கூடாதா."

"தம்பி. தேசம் இன்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. அதை வீணில் போக்காதே. அந்த யுத்தத்தில் நாம் தோற்றிருக்கலாம். ஆனால் நமது சேதத்தை விட பகைவனின் சேதம் இருமடங்கு அதிகம். கிழக்குக் கோட்டையை முற்றிலும் எரியூட்டிவிட்டோம். பகையரசன் புலம் பெயர்ந்து இப்போது மேற்குக் கோட்டையில் இருக்கிறான். நமது அரசரும் மேற்குக் கோட்டை மீதான படையெடுப்புக்கு படைகளை திரட்டி வருகிறார்."

"நல்ல செய்தி ஐயா. நானும் படைப்பிரிவில் சென்று சேர விரும்புகிறேன்."

"மகிழ்ச்சி. அடுத்த ஐந்து தினங்களுக்கு ஊர்க்காவல் படையில் இரு. அரசரின் செய்தி வந்ததும் படையினருடன் சென்று சேர்வாய்."

"மிக்க நன்றி ஐயா."

--------

அடுத்த ஐந்து நாட்களும் ஊர்க்காவல் படையில் ஊரைச் சுற்றி வந்தேன். அந்த ஐந்து தினங்களும் ஐந்து மணித்துளிகளாய்ப் பறந்து மறைந்தன.

இந்த தேசத்தின் மக்கள்தான் இந்த போர்க்காலத்தில் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். வீரர்களுக்கு வேண்டிய தானியம் உழவர்களின் மிகுந்த உழைப்பில் தேவைக்கு அதிகமாகவே வந்து சேர்ந்து கொண்டிருந்தது.

போருக்கு தேவையான வண்டிகள் இயந்திர பொறிகள் செய்வதற்கு நாட்டின் தெற்குப்பகுதி காடுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அங்கு நான் சென்ற போது நான் கண்ட காட்சிகள் என் கண்களை அகலத்திறப்பனவாய் இருந்தது.
கொல்லர்களின் உலைக்களத்தில் வால்களும் வேல்களும் வெகுவாக தயாராகிக் கொண்டிருந்தன. காட்டை ஒட்டிய துறைமுகத்தில் மரக்கலங்கள் கம்பீரமாக நின்றிருந்தன.

அந்தத் துறவியை அங்கு சந்தித்தேன்.
"தம்பி அந்த மரக்கலங்களை பார்த்தாயா. இந்த முறை யுத்தம் தரையிலல்ல கடலில்." புன்னகைத்தார்.
"கப்பல்களில் வீரர்கள் கிளம்புகிறோம். படைப்பிரிவு எதிரி பார்க்காத இடத்தில் கரையில் இறங்கி பகைவனின் கோட்டையை நோக்கி முன்னேறும். அதே நேரத்தில் கப்பல்கள் கடற்கரை பிரதேசங்களை தாக்கி அழிவு ஏற்படுத்தும். எதிரிப் படைகள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படும் போது காவல் அதிகமில்லாத கோட்டையை நம்படை மோதி கைப்பற்றும்."
"திட்டம் வெகு அருமை ஐயா."
"நம் அரசரை என்னவென்று நினைத்தாய்."

------------

எதிரியின் மண்ணில் வந்து இறங்கிகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கப்பல் பயணம் அத்துனை சுகமானதாக இல்லை. இந்த நேரத்தில் நமது கப்பல் படை எதிரியின் கடலோர கிராமங்களை அலைகழித்துக் கொண்டிருக்கும். எதிர்பார்த்தது போல் எதிரி்ப் படைகள் கோட்டையை சுற்றி அதிகம் இல்லை.

கோட்டையைத் தாக்க துவங்கினோம். எந்திரப் பொறிகள் கோட்டையை நோக்கி கவண் கற்களையும் தீப்பந்தங்களையும் வீசின. வெளிப்போந்த வீரர்களை என்னுடனான குதிரைப்படை எதிர்கொண்டு மோதியது. தலைகளை வெட்டி வீசி முன்னேறிக் கொண்டிருந்தேன். கோட்டை எரியத் துவங்கியது. திட்டமிட்டபடி என் தலைமையிலான சிறு படைப்பிரிவு கோட்டையின் பின்வாசலை நோக்கி முன்னேறியது.

நினைத்தது சரியே. தப்பித்து வடக்குக் கோட்டைக்கு செல்வதற்காக பகையரசன் நான்கு மெய்க்காப்பாளர்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்.

"விடாதீர்கள். தாக்குங்கள்" பாய்ந்தோம்.

எனது வேல் பகையரசனின் மார்பில் பாய்ந்தது. வேகமாக குதிரையை செலுத்திக் கொண்டு வாளை சக்கரவாகமாக சுழற்றினேன்.
பகையரசனின் தலை கணத்தில் துண்டானது.

"வெற்றி. வெற்றி."

------------


"யூ ஆர் விக்டோரியஸ்" என்று என் கணினித் திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எட்டு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த மைக்ரோசாஃப்டின் "ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்" தந்த அலுப்புடன் தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.
தூக்கத்திலும் கனவு.

இம்முறை கப்பல் தலைவனாக "கலபதி"யாக பத்துக் கப்பல்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறேன்.
எதிரியின் துறைமுகத்தையும் அதனருகில் இருக்கும் கோட்டையையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை.
"தளபதி கோட்டையின் சுவரிலிருந்து பீரங்கிகள் குண்டு மழை பொழிகின்றன. இரண்டு கப்பல்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டன. என்ன செய்வது."
என்ன செய்யலாம். தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

Sunday, December 16, 2007

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சை

குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.
"தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.

8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)
10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).

12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது.

முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்து நான் வைத்திருந்த ஒரு படத்தை நண்பன் திருப்பதி வெங்கடாசலபதி என்று கண்டு பிடித்து சொன்னது நினைவுக்கு வருகிறது.
திருப்பதி சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்.

"முருகனோ" இல்லை "சீனுவாசனோ"... டப்பு இச்சினவாடே தேவுடு. :)

"டா வின்சி கோட்"க்கு இணையான மர்மம் திருப்பதியிலும் இருக்கின்றதோ என்னவோ.

"டாவின்சி கோடில்" ஏசுவுக்கு மனைவியும் மகளும் உண்டு என்ற வாட்டிகன் ரகசியத்தை ஐசக் நியூட்டன் முதல் டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.

Saturday, December 15, 2007

அவள் செத்தேயாக வேண்டும்

அவள் செத்தேயாக வேண்டும்.

ராஜேஷிற்கு தன் மனைவி ராதாவை கொன்றேயாக வேண்டும்.

"யோசி. யோசி.
இருக்கும் வெறியில் அவளை கத்தியால் பலமுறை குத்தி கண்ட துண்டமாக வெட்டி போட்டு கொலை செய்யலாம்.
வேண்டாம். என் கைகளுக்கு விலங்கு வருவதை நான் விரும்பவில்லை."

"யோசி. ராஜேஷ். கேஸ் அடுப்பு வெடிப்பது எல்லாம் பழைய டெக்னிக். உண்மையிலேயே அடுப்பு வெடித்தால் கூட வரதட்சணை கேஸ் என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது."

"அவள் வெளியே செல்லும் போது... ஒரு லாரி வைத்து மோதி ஆக்சிடெண்ட் என்று ஜோடித்து விடலாமா ?
வேண்டாம். நாளை விசாரணையில் லாரி டிரைவர் உளறிவிடக் கூடும்."

"அடியாள்கள் வைத்து கொலை செய்யலாம். ஆனால் நாளைக்கு அவர்களே நம்மை மீண்டும் பிளாக் மெயில் செய்தால்...."

"யோசி. பீ கிரியேடிவ். வேண்டியது ஒரு கொலையல்லாத கொலை."

"எத்தனை சினிமாக்கள்.... எத்தனையோ வழிகள் காட்டுகிறார்கள். ஆனால் எதுவும் வேலைக்காகாது...
ஆசையில் பிரகாஷ்ராஜ் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து கொலை செய்வாரே... அந்த மாதிரி ஏதாவது."

"ரைட். இப்படி செய்தால் என்ன. அவள் தினமும் வழக்கமாய் சாப்பிடும் மாத்திரைகள்.
இந்த மாத்திரை எக்ஸ்பையர் ஆனா ரொம்ப டேஞ்சரஸ். உயிருக்கே கூட ஆபத்து என்று அவளுடைய மாத்திரையை பற்றி டாக்டர் சொன்னாரில்லையா...
எக்ஸ்பையர் ஆன மாத்திரைகளா மாற்றி வைத்தால்.
வாவ். கிரேட்.

எக்ஸ்பையர் ஆன மாத்திரை டப்பா ஒன்று இருக்கிறது.
மாற்றி வைத்தால்... தினமுமா எக்ஸ்பைரி டேட் பார்த்து விட்டு மாத்திரை சாப்பிடுவாள்.
நாளைக்கு போலீஸ் கேஸ் என்று வந்தால் எக்ஸ்பையரி ஆன மாத்திரை சாப்பிட்டதால் மரணம் என்று எளிதாக முடிந்துவிடும்.
அதுதான் சரி. ".

----------

"கிரேட் சார். வித்தியாசமா திங்க் பண்றீங்க. வில்லன் தன்னோட மனைவிய இந்த மாதிரி வித்தியாசமா கொல்றான்றது எடுபடும். பாருங்களேன் இந்த கான்செப்டுக்கே படம் நல்லா ஓடும்". புகழ் பெற்ற அந்த வில்லன் நடிகர் டைரக்டரை பாராட்டினார்.
"தாங்ஸ் சார்."
"ஸ்டார்ட் கேமரா."

"ராதா. நீ இன்னைக்கு மாத்திரை சாப்பிடலை."
"நல்ல வேளை நியாபகப் படுத்தினீங்க."
ராதா மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை விழுங்கினாள்.
அவன் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

Wednesday, December 12, 2007

"நச்சு" பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன்லி)"சேகர். ஒரு ஐடியா வேணும்." கேட்ட ராஜனை பார்த்தான் சேகர்.

"சொல்லு ராஜன். எதுக்கு ஐடியா வேணும்."

"ஒரு ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்".

"இவ்வளவுதானா. மேட்டர சொல்லு. "

"மேட்டர் அவ்வளவு ஈஸி இல்லை. பொண்ணு கல்யாணம் ஆனவ."

"இவன் வேற. கல்யாணம் ஆன பொண்ணை கவுக்கறதுதாண்டா ஈஸி. நான் எத்தனை பேரை கவுத்திருக்கேன் தெரியுமா."

"தெரியும். அதனாலதான் உன்கிட்ட ஐடியா கேட்கிறேன்."

"சரி. மேல சொல்லு."

"பொண்ணு நாம இருக்கிற ஏரியாதான்."

"நான் பார்த்து இருக்கனா."

"நீ இந்த ஏரியாவுக்கு குடிவந்து ஒரு வாரம்தான் ஆகுது. பார்த்து இருப்பன்னுதான் நினைக்கிறேன். புருசன் குடிகாரன். அவளுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு தெரியுது."

"மேட்டரு சுளுவாவும் போலதான் தெரியுது."

"பொண்ணு என்னை பாக்குற கண்ணுல ஏக்கம் தெரியுது. சிக்னல் கிடைக்குது. ஆனா எப்படி பிக்கப் பண்றதுன்னுதான் தெரியலை."

"பேசிப் பேசிதாண்டா மேட்டர முடிக்கணும். அந்த மாதிரி நான் எத்தனை மேட்டர் முடிச்சிருப்பேன் தெரியுமா."

"பேசிட்டேண்டா. வேலைக்கு ஆகலை. நீ எனக்கு புதுசா வாழ்க்கை தர்றதா இருந்தா சரி அப்படின்னு சொல்லுறா."

"வாழ்க்கை தரப்போறியா என்ன. தாகம் எடுக்குதுன்னா எவனாவது கிணறையே வாங்குவானா என்ன."

"அதேதாண்டா என் பிரச்சனை. தொடணும். ஆனா தொடரக்கூடாது."

"அவ்வளவுதான. வாழ்க்கை தரேன்னு சொல்லு. ஏன் கூட வா. உன்னை காலமெல்லாம் வச்சு காப்பாத்துறேன்னு கதை விடு. கிளப்பிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஒரு வாரம் சுத்திட்டு கழட்டி விட்டுடு."

"ஐடியா நல்லாதான் இருக்கு. ஒர்க் அவுட் ஆகுமா."

"கரெக்டா காயை நகர்த்து. எல்லாம் கரெக்டா நடக்கும். இப்ப இன்னொரு ரவுண்டு ஊத்து." சேகர் சிரித்தான்.

"சியர்ஸ்" இருவரும் சிரித்தார்கள்.

--------------

காலையில் எழுந்த சேகர் அருகிலிருந்த கடிதத்தை படித்தான்.
"அன்பில்லாத கணவருக்கு,
உங்கள் குடிப்பழக்கத்தாலும் கெட்ட சகவாசங்களாலும் தவறான நடத்தையாலும் உங்களை மிகவும் வெறுக்கிறேன்.
உங்கள் நண்பர் ராஜன் நல்லவர். எனக்கு நல்ல வாழ்க்கை தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அவரோடு நான் போகிறேன்.
இனி எந்த காலத்திலும் உங்கள் முகத்திலும் விழிக்க விரும்பாத
சரோஜா."

"அடப்பாவி ராஜன்" அலறினான் சேகர்.

(கதை நச்சென்று முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் இத்தோடு முடித்துக் கொள்ளவும்)

-----------------------------

அவள் சென்று ஏழாவது நாள். எழுபதாவது முறையாக கடிதத்தை படித்த சேகர் மீண்டும் அழத் தொடங்கினான்.

(விட்டு சென்ற காதலி/மனைவியின் கடிதத்தை ஒருவன் படித்து அழுவதுதான் "நச்" முடிவென்று நினைப்பவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.)


--------------------------

எட்டாவது நாள்.....
காலிங் பெல் அடித்தது...

கதவைத் திறந்தான் சேகர்.
சரோஜாவும் ராஜனும்.

"நீ... நீ.... நீங்க."


"என்னை மன்னிச்சிடுங்க. அந்த கடிதம், நான் காணாமல் போனது எல்லாம் நாடகம்" - சரோஜா.

"என்ன... என்ன.. சொல்றே நீ..."

"நீங்க ஒழுக்கக் கேடா இருக்கறதும் அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறதும் தப்புன்னு உங்களுக்கு புரிய வைக்கணும்னு நினைச்சேன்.
ராஜன் அண்ணா ஹெல்ப் பண்ணினார்."

"அண்ணனா."

"ஆமா. சேகர். உன்னை சொல்லித் திருத்த முடியலை. ஒரு ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுக்கணும்னு சரோஜா கொடுத்த ஐடியாதான் இது." - ராஜன்.

"அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிற உங்களுக்கு... உங்க வீட்டிலேயே இப்படின்னதும் தாங்க முடியலை இல்லையா. இப்பவாவது உணர்ந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அதுக்காகத்தான் இந்த நாடகம்." - சரோஜா.

"இப்ப நான் புரிஞ்சிகிட்டேன். இனியும் தறிகெட்டு அலைய மாட்டேன்.
சரோஜா, என்னை மன்னிச்சிடு."

திருந்திய சேகரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சரோஜாவும் ராஜனும்.


(அப்பாடா. கதை உண்மையிலேயே நச்சுன்னு முடிஞ்சிச்சின்னு சொல்லுறவங்க, பெண்ணியவாதிகள் துணிச்சலான சரோஜாவை பாராட்டிவிட்டு கதையை இத்துடன் முடித்துக் கொள்ளவும்.)


------------------------------

"ஹல்லோ சரோஜா."

"ஹலோ ராஜன். எப்படி இருக்கீங்க. நேர்ல பார்க்க முடியலை. போன் மட்டும் பண்ணறீங்க."

"எனக்கும் பார்க்கணும் போல இருக்கு."

"நேர்ல வாங்களேன். எனக்கும் பார்க்கணும். அந்த ஒரு வாரம். என் வாழ்க்கையில மறக்க முடியாத வாரம். அவரும் நம்பிட்டாரு.".

"ஹா... ஹா.. இப்ப அநியாயத்துக்கு நல்லவனாயிட்டான்."

"உங்களை இனி பார்க்க முடியாதா."

"சே. சே. அப்படியெல்லாம் இல்லை. நம்ம கதை ஒரு வாரத்துல முடிஞ்சிடுற சிறுகதையா என்ன. தொடர்கதை... தொடரலாம்."

அவள் சிரித்தாள். அவனும்.


(இந்த "நச்சு" முடிவு போதும் என்பவர்கள் கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்.)

-----------------------------------------------------


அலறியடித்து எழுந்தான் சேகர்.
அத்தனையும் கனவா. "தான் ராஜனிடம் பேசியது. சரோஜாவின் கடிதம். அவள் திரும்பிவந்தது. தொலைபேசிப் பேச்சு" அத்தனையும் கனவா.
அருகில் தூங்கிக்கொண்டிருந்த சரோஜாவின் முகத்தைப் பார்த்தான். என் சரோஜா அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவும் கனவு.
நான்தான் தவறானவன்.
இனி இவளுக்கு ஒழுங்கானவனாக இருப்பேன் என்று முடிவெடுத்தான்.

(எப்படி எப்படியாவது கதையை எழுதி கடைசியில் அத்தனையும் கனவு என்று முடித்தால் இன்னொரு "நச்" சிறுகதை ரெடி...
எல்லாம் சேகரின் கனவு என்று சொல்லி விட்டதால் கதையை மேலும் வளர்க்க முடியாது என்பதால்... முற்றும்.)

--------------------------------------------------

Wednesday, December 05, 2007

அன்புள்ள ஸ்ரீராமருக்கு - பக்தன் அரைபிளேடு எழுதுவது

அன்புள்ள ஸ்ரீராமருக்கு,

பக்தன் அரைபிளேடு எழுதுவது.
நலம் நலமறிய ஆவல்.

அச்சச்சோ. தப்பா நினைச்சிடாதீங்க. இந்த கடுதாசி உங்க கோவிலை பத்தியோ இல்லை பாலத்தை பத்தியோ இல்லை.

இது பர்சனல் மேட்டர்.

அது வந்துங்க நமக்கு வேண்டப்பட்ட ஜோசியர் ஒருத்தர் நான் சாமியே கும்பிடறது இல்லை. அதனாலதான் வாழ்க்கையில கொஞ்சம் கஸ்டப்படறேன்னு சொன்னார்.
"ஸ்ரீராம ஜெயம்" ஆயிரத்து எட்டு தடவை எழுது நல்லது நடக்கும்னு சொன்னாரு.

சரி நல்லது நடக்கும்னா நாம ஏன் வேணாம்ன்றது.
எழுதுவோம்னு பார்த்தா 1008 தடவையா. நமக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.

அதனால ஒரு தடவை டைப் பண்ணி மிச்சம் 1007 தடவையும் காபி பேஸ்ட் செஞ்சிருக்கேன்.
டைம் ஈஸ் மணி. யூ நோ.
கீழே இருக்கு. கரெக்டா 1008 இருக்கான்னு எண்ணி பார்த்துக்கங்க.

அப்புறம் நீங்க செய்ய நினைக்கிற "நல்லதை" அமெரிக்கன் டாலர்ல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே. இண்டியன் ருப்பீல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.

இல்லை இந்த ஆயிரத்தெட்டு பத்தாதுன்னு நீங்க ஃபீல் பண்ணீங்கன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை.
காபி பேஸ்ட்தான். லட்சத்தி எட்டு தடவையோ, கோடியத்து எட்டு தடவையோ கூட போட்டுடலாம்.
இல்லாட்டி என்னோட கம்யூட்டரோட 120 ஜிபி யும் "ஸ்ரீராம ஜெயம்" காபி பேஸ்ட் பண்ணியே ஃபில் பண்ணி வைக்கிறேன்.

அப்புறம் நீங்க கடவுள். உங்களுக்கு என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர்லாம் தரவேண்டியதே இல்லை. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
ப்ளீஸ் தயவு செஞ்சி நீங்க செய்ய இருக்கற "நல்லதை" நீங்களே டைரக்டா டெப்பாஸிட் செஞ்சிருங்க.

தாங்யூ ஸ்ரீராம்.

அன்புள்ள பக்தன்,
அரைபிளேடு.

ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்

----------------------------------------------------------------

அன்பு பக்தன் அரைபிளேடுக்கு,

உனது பக்தியை மெச்சினோம்.
1008 தானா என்று எண்ணி பார்க்க எனக்கும் நேரமில்லை.
ஆனால் உனது பக்தியை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு பணம் தரமுடியாத பரிதாப நிலையில் நான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெங்கடாசலபதியாக வந்து குபேரனிடம் சங்க நிதி, பதும நிதியில் வாங்கிய கடனே இன்னும் கட்டி முடிக்கவில்லை.
(சங்க நிதி, பதும நிதி இரண்டிற்கும் கன்வர்ஷன் ரேட்டில் இண்டியன் ருப்பீயில் மதிப்பு வேறு ரொம்ப ரொம்ப அதிகம்.)

பக்திக்கு ஈடாய் பணம் என்ற டிராக்சாக்ஸனை நான் விட்டு ரொம்ப நாள் ஆகிறது. கட்டுப் படியாவதில்லை.

இருந்தாலும் உனது பக்திக்காக என்னால் முடிந்தது உனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறேன்.
இதை உனது கணினியை உபயோகித்து 1008 ரூபாயாக காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பத்தாது என்று நீ ஃபீல் பண்ணினால் இலட்சத்தியெட்டு ரூபாயாகவோ அல்லது கோடியத்தியெட்டு ரூபாயாகவோ கூட காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

உனக்கு என் ஆசியும் அன்பும் என்றும் உண்டு.

அன்புடன்,
ஸ்ரீராம்.