Tuesday, December 19, 2006

மே ஐ ஹெல்ப் யூ கேட்ட விதி

விதி வலியதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அது அன்னிக்கு என்னை பாத்து சிரிச்சுக்னு இருந்தது.

இடம் மும்பை டொமஸ்டிக் ஏர்போர்ட். லோக்கல் ஃபிளைட்டு கிங் பிஷர்ல ஏறி இறங்கியாச்சு. அடுத்து விர்ஜின் அட்லாண்டிக்கை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டு போயி புடிக்கணும்.

மும்பையில இந்த இரண்டு ஏர்போர்ட்டு கொஞ்சம் தூரம். ஏர்போர்ட்லயே அதுக்கான வண்டிங்க இருக்கும் அப்படின்னு சொன்னாங்க.

நானும் சரின்னு ஏர்போர்ட்டை விட்டு வெளிய வர்றேன். வெள்ளையும் சள்ளையுமா சட்டை ஃபேண்ட போட்டுக்குட்டு ஒருத்தன். நானும் ஏர்போர்ட் அத்தாரிட்டின்ன நினைச்சிட்டேன்.

"வேர் யூ ஹாவ் டு கோ சார். "

"இன்டர்நேஷனல் ஏர்போர்ட்" அன்னிக்கு சனி என் நாக்குல உட்காரல. டான்ஸே ஆடிக்கிட்டு இருந்தான்.

"மே ஐ ஹெல்ப் யூ. சார்.. "

நோன்னு சொல்லியிருக்க வேண்டியதுதான.. "யூ ஆர்.." இழுத்தேன்...

"ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்.. "

என்னோட பேக்கேஜை வாங்கினான் அவன். ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளி வெளியே வேகமாக வந்து.. கையில் எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.. துரத்திக்கொண்டே நான்..

"வேர் யூ ஆர் டேகிங் மை பேக்கேஜ்.. "

ஏர்போர்ட்டுக்கு வெளியே.. "வெயிட் சார்.. அவர் வெஹிக்கிள் வில் கம் ஹியர்.. "

முப்பது செகண்டில் ஒரு ஓட்டை கருப்பு டாக்சி வந்து சற்று தூரம் தள்ளி நின்றது..

"வெயிட்.. வெயிட்.." எனது கத்தலை பொருட் படுத்தாது பேக்கேஜிகளை எடுத்துக் கொண்டு ஓடினான் அவன்.

காரின் டிக்கியில் வைத்து சாத்தினான்.

தொடர்ந்து சென்று பிடித்தேன்..

காரில் இருந்தவனும் இறங்கினான். "டிரான்ஸ்போர்ட சர்வீஸ் சார்." அவன் ஒரு பிரிண்டட் அட்டையை எடுத்தான்.

"சீ திஸ் சார். ஆர்டினரி சர்வீஸ் டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 500 ருபீஸ். ஏசி கார் 1000 ருபீஸ்"

அடப்பாவிகளா.

"ஐ டோன்ட் நீட் திஸ். கெட் மீ அவுட் ஆஃப் திஸ். "

"க்யா கஹ் ரஹா ஹை சாப். யூ கேம் டு அவர் சர்வீஸ். சீ திஸ் இஸ் மாடரேட் சர்வீஸ். ஆத்தரைஸ்டு. வீ வில் கிவ் யூ ரிசிப்டு ஆல்ஸோ. "

எனக்கு ஃபிளைட் பிடிக்க இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது.

"ஹெள மச்" மீண்டும் நாக்குல சனி.

"500 சார்"

நான் ஒரு 1000 ரூபாய் நோட்டை நீட்ட, வாங்கி பார்த்தவன் மூலையில் கிழிந்திருக்கிறது என்றான். மொதல்ல ஒழுங்கா தானடா இருந்தது.. நீயே கிழிச்சிட்டியா..

"திஸ் வில் கோ.. ட்ரைவ் திஸ் கார் டு போலீஸ் ஸ்டேஷன்.. "

என்ன நினைத்தான் தெரியவில்லை. 500 ரூபாய் பாக்கி கொடுத்தான். கூடவே ஒரு ரிசிப்டும்.

மற்றவன் அதற்குள் மற்றொரு டாக்சியை நிறுத்தி ஏதோ பேசினான். சற்று நேரத்தில் என்னைக் கேட்காமலே என் பெட்டிகள் டாக்சி மாறின. இருவருமாக சேர்ந்து என்னை அந்த காரில் ஏற்றினார்கள். காணாமல் போனார்கள்.

அந்த கார் கிளம்பியது. எனது பெட்டிகள் என்னுடனேயே இருக்கின்றன என்பதே எனக்கு நிம்மதியாக இருந்தது.

அந்த டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். என்னை இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் இறக்க சொல்லி விட்டு அவனுக்கு 150 ரூபாய் கொடுத்ததாக அவன் சொன்னான்.

எனக்கு எனது ஃபிளைட்டுக்கு நேரமாகி கொண்டிருந்தது. ஒரு நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பெட்டிகளோடு பத்திரமாக வந்து இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இறங்கியதும் மூச்சு வந்தது.

அடப்பாவிகளா ஒருத்தன் முகத்துல அப்பாவின்னு எழுதி ஒட்டி இருந்தா எப்படியெல்லாம்டா ஏமாத்துவீங்க...

மொழி தெரியாத, இடம் தெரியாத ஊர்ல ஒருத்தன் மாட்டிக்கிட்டா இப்படியா. ஏதோ சாமி நாம செஞ்ச புண்ணியம் இத்தோட போச்சே..

ஃபிளைட்டுல ஏறி உட்காந்து நான் பாத்த படம் ப்ளஃப் மாஸ்டர். அபிஷேக் பச்சன் மாட்டியவர்களிடம் எல்லாம் கண்ட மேனிக்கு பொய் சொல்லி ஏமாற்றி கொண்டிருந்தார். சினிமாவில் சிரிப்பாக இருந்தது... நிஜத்தில்...

இப்படிக்கு ஏமாந்த அப்பாவி
அரைபிளேடு

24 comments:

said...

அந்தோ பரிதாபம்....

நல்ல வேளை நீங்க போலிஸ்னு சொன்னவுடனே அவன் 500 ருபாய்ல உட்டான். மும்பைல இன்னும் பல ஏமாத்து வேள நடக்குதுன்னு சொன்னாங்க.. அதான் நான் போன தடவ இந்தியா போனப்ப, மும்பை வழியாதான் டிக்கட் கொடுத்தாங்க. அப்புறம் எனக்கு டெரக்ட் ஃப்லைட்தான் வேணும்னு கேட்டதால ஐ எம் தி எஸ்கேப்...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அடப்பாவிகளா ஒருத்தன் முகத்துல அப்பாவின்னு எழுதி ஒட்டி இருந்தா எப்படியெல்லாம்டா ஏமாத்துவீங்க//

அரை பிளேடு, உங்களுக்குமா அப்பாவி முகத்தில் ஒட்டி இருக்கு?:-)
கையில் பிளேடுடன் போகும் உங்களுக்கே இந்த கதின்னா, எங்களைப் போன்ற நிஜ(!) அப்பாவிகளின் நிலை என்னவோ?:-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனுதாபத்துக்கு தாங்ஸ் ஜி..

ஏமாந்தாலும் ஒரு லெசன் கிடச்சிச்சே அதுல...

இனிமே இன்னும் உஷாரா இருப்போம் இல்ல.. :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Hello, Very sad and let me give your one of the similar experience happened in Madras and it came in newspaper as well. One middle aged man travelled from one of the gulf city to Madurai via Madras. As soon as he got the immigration clearance from Madras International Terminal, he didnt know where the domestic terminal was located so he approached an auto driver and he demanded first IRS.500/- then they mutually agreed for IRS.300/-. The auto driver took him and take a left turn from the international airport heading towards Tambaram and take a u turn near Chrompet and headed to Domestic Terminal. This poor man some how felt that the location was the same and the trees and side by haordings are the same. As soon as he get down, he immediately informed the police and the driver got arrested.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு அப்ப வருத்த பட்டிருபியே ஹிந்தி எக்ஸாம ஒழுங்க எழுதியிருகலாமுனு.

அப்பாட. இப்ப என்ன விட அதிகமா ஏமாந்தவன பாத்துட்டேன்.
நான் பராவாயில்ல 10கீ.மீட்டருக்கு 300ரூபாய்கிட்டதான் செலவழிச்சேன்.

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கேஆர்எஸ் அவர்களே

/***கையில் பிளேடுடன் போகும் உங்களுக்கே இந்த கதின்னா****/

பிஸ்டலை வெச்சிகிட்டு சுத்தற பயபுள்ளிங்க இருக்கற ஊர்ல நாம பிளேட வச்சிக்கிட்ட இன்னா பண்ண முடியும் சொல்லுங்க... :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானிமஸ் அவர்களே

கரீக்டா சொன்னீங்க. பயணிங்களோட அவசரத்தை யூஸ் பண்ணி காசு பண்ற வேல எல்லா இடத்துலயும் நடக்குது. நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க வேண்டியதுதான். ம்ம்... பட்டாதான தெரியது...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாடோடி

லாங்குவேஜி தெரிஞ்சா மட்டும் பத்தாது. கொஞ்சம் உஷாரும் வோணும். அது நமக்கு கம்மி.

/*****அப்பாட. இப்ப என்ன விட அதிகமா ஏமாந்தவன பாத்துட்டேன்.
*****/

இப்பிடி ஒரு சந்தோஷமா உங்களுக்கு. சரி நம்மளால நாலு பேரு சந்தோஷமா இருந்தா சரிதான் :))))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

namba gentleman padathula varumae...moonae theru daampaanu..adu daan nyaabagam varudu.

mumbai la naanum inda taxi aalunga kitta padaada paadu pattu irukkiraen. bashai therila na salnaava uruvittu daan anuppuvaanunga.

but nalla comedy touchoda ezudi irukeenga..rasithaen..innoru vaati mumbai pona engalukku udanae sollunga :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சரி பரவால லக்கேஜ் போகம இருந்துச்சே!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல அனுபவம்...சரி 1000 க்கு வந்தது 500 ஒட போச்சேனு மனச தேத்திக்க வேண்டியதுதான் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்க ஏமாந்த கதையை உங்களுகே உரிய நகைச்சுவையுடன் ரசிக்கும் படியாக எழுதியிருகிறீர்கள்.

\"அடப்பாவிகளா ஒருத்தன் முகத்துல அப்பாவின்னு எழுதி ஒட்டி இருந்தா எப்படியெல்லாம்டா ஏமாத்துவீங்க...\"

இது தான் கொஞ்சம் ஒவர் காமெடியா தெரியுது!!! உங்க முகம் அவ்வளவு அப்பாவிதனமாக இருக்குமான்னு நம்ப முடியலையே!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

யேய் யா, தட் இஸ் ஜஸ்ட் 10 டாலர்ஸ், தட்ஸ் கூல்..

:)

நம்ப மக்கள்கிட்டே இந்த மாதிரி பேசி சாமாளிச்சீங்களா இல்லையா...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன அரை ப்ளேடு!!!
இப்படி ஆயிடுச்சா?? பாம்பேல ஆட்டோ எல்லாம் ஏமாத்தவே மாட்டாங்கனு சொன்ன்ங்க!!! அதுக்கு பதிலா டாக்ஸியா??? எப்படியோ நல்ல படியா வந்து சேர்தீங்களே அதுவே போதும்!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கிட்டு அவர்களே...

நம்ப இந்த மேட்டர இங்க எதுக்கு எயுதிக்கறம்னா இத்த படிச்சிட்டு நாலு பேரு உஷாரா இருந்தா சரின்னு தான்...

வந்து கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்..

திரும்பியும் மும்பை பக்கமா நானா...

தப்பி தவறி வந்தன்னா சொல்றேன்.... :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமா வெட்டி

எனக்கு பயமெல்லாம் இந்த பயலுங்க லக்கேஜை டாக்சியோட கடத்திட்டா இன்னா பண்றதுன்னு தான்...

இவ்ளோ ஃபிராடு பண்றவங்களுக்கு அத்த பண்றதுக்கு எவ்ளோ நேரம் ஆவும்..

டீஜன்டான திருடங்கப்பா...

இரண்டு ரூபா ரிசிப்டு ஒண்ண வெச்சே காசு தேத்திட்டாங்களே...

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாட்டாமை ஸ்யாம்

ஏதோ 500 ரூபாயோட போச்சேன்னு தான் மனச தேத்திக்னேன்.

இங்க மேட்டரு 500 ஆ 1000 மா ன்றது இல்ல.

நாம சரியான குடாக்கு மாறி ஏமாந்துகினோம். எவ்ளோ பேருக்கு நாம தண்ணி காட்டுவோம்...

நம்பளுக்கே தண்ணி காட்ற ஜித்தன்லான் நாட்டுல இருக்கான்...

நம்ப ஊரா இருந்து நமக்கு கண்டி டைமும் இருந்திச்சின்னா வுட்டுருப்பமா அவன.. நோண்டி நுங்கு எடுத்து இருக்க மாட்டோம்...

எதோ அவன் நல்ல நேரம்.. நம்ப கெட்ட நேரம்.. அவ்ளோதான்...

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆமா ஆதா பிளேடு அவன் உன்கிட்ட இங்கிலிபீஸ்ல பேசும் போதே நீ உசாரா இருந்திருக்கவேண்டாம்.ஏமாந்திட்டேயே.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க திவ்யா.. வந்து கண்டுக்னதுக்கு தாங்ஸ்...

பாத்தீங்களா நம்ப மூஞ்சி பாக்க அப்பாவி மாறி இருக்கும்னு சொன்னா நம்ப மாட்டன்னு சொன்னா எப்பிடி..

இன்னா மீசை மட்டும் கொஞ்சம் பெருசு... அத்த மட்டும் தூக்கிட்டன்னா ஷாருக், சல்மான் அப்பிடின்னு இன்னான்னாமோ கானெல்லாம் சொல்றாங்களே அத்தினி பயலும் ஃபீல்டு அவுட்டு..

பால் வடியுற மூஞ்சிங்க நம்பளுது...

நான் மெய்யாலுமே அப்பாவி தாங்க... நம்புங்கோ.. :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து

வேற வழி... பீட்டரு உட்டுதான் நம்ப பிரஸ்டீஜை கூட்டிக்கனும்..

யூ நோ ஐ கேன் அஃபார்டு 10 டாலர்ஸ் ஃபார் ய டாக்சி..

புலர் டாக்சி ஃபெல்லோஸ் ஆஃப் மும்பை. லெட் தம் ஆல்ஸோ எஞ்சாய் யா.... :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க டுபுக்கு டிசிப்பிள்

மும்பையில உண்மையிலயே ஆட்டோ டாக்சிக்காரங்க ரொம்ப நல்லவங்க.
நான் வெறும் மினிமம் சார்ஜி 13 ரூபா கொடுத்து டாக்சில ஒரு கிலோ மீட்டரு போனேன்னா நீங்க நம்புவீங்களா.

நமக்குன்னே இரண்டு பேரு டாக்சியை தள்ளிக்னு வந்தா நாம இன்னாபா செய்யறது..

இரண்டாவதா ஏறுன டாக்சிகாரன் நல்லவனா இருந்தான். ரொம்ப அனுதாபப்பட்டான்.. இப்பிடி ஏமாந்திட்டியே சார்... நல்ல டாக்சியை நீயே புடிச்சிருக்க கூடாதான்னான்...

நேரந்தான்.. வேற என்ன சொல்ல..

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அதேதான் நாடோடி அவர்களே

இந்தியில பேசாம இவன் இங்லீஷ்ல பேசுறாண்டா,
இவன் ரொம்ப நல்லவண்டான்னு
நம்பி தானே ஏமாந்து போனேன்

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏனுங்க ப்ளேடு அண்ணாச்சி...

நம்ம ஊர்ல தான் முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணைப் புடுங்கி வித்துருவானுங்கனு தெரியுமில்ல. கொஞ்சம் உசாரா இருக்கக் கூடாதா?

மும்பை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமான நிலையம் செல்ல ஏர்போர்ட் அதாரிடி தனி பேருந்துகளை இயக்குகின்றது. இனிமேல் அதை உபயோகிக்கவும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க மதுசூதனன்...

கரீக்டா சொன்னீங்க. ஏர்போர்ட்லய பஸ்ஸூ உடறாங்களாம்.

அப்பாலிக்காதான் எனக்கு தெரிஞ்சுது.

நாம ஏர்போர்ட்டுக்கு புச்சா, நமக்கு ஒரு மேட்டரும் தெரியல..

இப்பதான் கொஞ்சம் தெளிவாயி கீறோம்.

யூஸ் ஃபுல்லான மேட்டருக்கு ரொம்ப தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------