ஆறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அமைதியான மதிய நேரம். அந்த ஆற்றை கடப்பதற்கான கயிற்று பாலம் சற்று பழையதாக இருந்தது.
நடக்கத் தொடங்கினேன் நான் இயற்கையை இரசித்த படி.
பாலத்தின் மையத்தை அடைந்து விட்டேன். திடீரென ஆற்றில் வெள்ளம்.
கயிற்று பாலத்தின் எதிர் நுனி கட்டியிருந்த கம்பம் உடைந்து விழுவதாக தோன்றியது.
ஓட துவங்கினேன். இல்லை.
பாலம் அறுந்து விழ துவங்கியது.
தலை குப்புற கீழே விழுந்து கொண்டிருந்தேன். தண்ணீரை நோக்கி....
"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ'....
கத்தியது நானில்லை.
....
சுரேஷ் என் அறை நண்பன்.
"அடப்பாவி... என் கை போச்சு"..
"என்னடா ஆச்சு".
"கட்டில்ல இருந்து எம்மேல விழுந்துட்டு கேள்வி வேற கேட்கிறியா ??".
"சாரிடா. பயங்கரமான கனவு".
இப்படித்தான் அது ஆரம்பித்தது.
---------------------------
காட்டில் நடந்து கொண்டிருந்தேன். அமேசான் காடு போலிருந்தது. உயரமான மரங்கள்.
மரத்தின் உச்சியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்து கொண்டிருந்தது.
நேரே வந்து என் மீது வந்து விழுந்தது.
அது....
அனகோன்டா !!!!!
"போ..." கையை வீசி தள்ளினேன்.
"டிங்... தட.. தட.. தட.. டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...."
---
கண் திறந்து பார்த்தால்.... காபி டபரா ஒரு புறமும்... காபி டம்ளர் ஒரு புறமுமாக விழுந்து கிடந்தது.
தரை முழுக்க காபி....
அதிர்ச்சி கலையாமல் அம்மா. அவள் கையிலிருந்த என் பெட் காபியை தட்டி விட்டுருக்கிறேன்....
"என்னடா ஆச்சு..."...
"ஒண்ணுமில்லம்மா ஒரு கனவு"....
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இடத்திலும் அது தொடர்ந்தது.
-----------------------
நான் குதிரையில்......
எதிரே மிகப்பெரிய கோட்டை..
குதிரையை விட்டு இறங்கி நடக்கிறேன்.
என்ன இது மலர்ப்பாதை...
யாரிந்த கன்னிகள் இருபுறமும் மலர்த்தூவிய படி....
(வர்ணனைகள் சென்சார் செய்யபட்டுவிட்டது).... சொர்க்கம்.
"அரசே உங்கள் பூப்பாதங்களை இந்த தங்க தாம்பாளத்தில் வையுங்கள்."
எனது வலது காலை மெல்ல தூக்கி அந்த தாம்பாளத்தில் வைக்....
யாரது. என்னை பின்னிருந்து இழுப்பது.
...
"யோவ். அறிவிருக்கா... ஓடுற டிரயின்ல இருந்து வெளிய காலை எடுத்து வைக்க இருந்தியே..."
என்ன ஆச்சு... நான் எங்க இருக்கேன்.
இது டிரெயின்... என்னை இழுத்த அது டி.டி.ஆர்... சென்னைக்கு டிரெயினில் ஊரிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் இருந்தால் அடுத்த அடி சொர்க்கத்தில்தான் எடுத்து வைத்திருப்பேன்
----------------
"இதுதான் டாக்டர் நடந்தது...... என்னை காப்பாத்துங்க".
"இருங்க பயப்பட ஒண்ணுமில்லை...இது ஒரு இல்லுமினேஷன். எத்தனை நாளா உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருது."
"ஒரு மூணு மாசமா டாக்டர். அதுக்கு முந்தி நான் இப்படி இருந்ததே இல்லை.".
"ஐ சீ.... நீங்க பேசிக்கலா எதனாலயோ டிஸ்டர்ப்டா இருக்கீங்க...."
"அப்படி ஒண்ணுமில்லையே டாக்டர். நாலு வருஷமா சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். லைஃப்ல டிஸ்டர்ப்டா ஆகறமாதிரி எதுவுமில்லையே."
"இந்த மூணு மாசத்துல எதோ ஒண்ணு உங்களை பாதிச்சிருக்கு. வீடு எதாவது மாத்தினீங்களா."
"இல்லை டாக்டர்..."
"இந்த மூணு மாசத்துல நீங்க வழக்கமா செய்யற சில விஷயங்கள்ல இருந்து மாறி வித்தியாசமா எதாவது செய்யறீங்களா."
"அப்படி எதுவுமில்லை டாக்டர்... அதே ஆபீஸ். அதே வேலை. அதே ஃபிரண்ட்ஸ்...."
"எதாவது வித்தியாசமான பழக்கங்கள்...."
"இல்லை...."
"ஏதாவது ஒரு விஷயத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிறீங்க.. இல்லை யோசிக்கிறீங்க அப்படி எதாவது..."
"எஸ். டாக்டர்..... என் ஃபிரண்டு ஒருத்தன் எனக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தினான்"
"வலைப்பதிவு ?".
"எஸ். டாக்டர். பிளாக்கிங். ஒரு நாளைக்கு மூணுல இருந்து நாலு மணி நேரம் அதுல ஸ்பெண்ட் பண்றேன்."
"ஐ காட் இட்".
"டாக்டர்.."
"நீங்க இதுல ஓவரா இன்வால்வ் ஆனதுதான் உங்க பிரச்சனைகளுக்கு காரணம். கொஞ்ச நாளைக்கு பிளாக்கிங்க விடுங்க".
"சரி. டாக்டர்".
இப்போதெல்லாம் அது தொடர்வதில்லை.
---------------------------------
பி.கு: (இது கற்பனைக் கதை. இதற்கும் நான் சில மாதங்களாக காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அரைபிளேடு)
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//பி.கு: (இது கற்பனைக் கதை. இதற்கும் நான் சில மாதங்களாக காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அரைபிளேடு)//
நம்பிட்டோம்!!! :-P
சூப்பர் வர்ணனை!! ஆனால் முதலிலிருந்தே முடிவு தெரிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு அதனால் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமல் போய் விட்டது!! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நம்பியதற்கு நன்றி சி.வி.ஆர். :)
முடிவு முன் கூட்டியே உங்களுக்கு தெரிய காரணம்.. உங்களுக்கு இந்த சிம்டம்ஸ் இருக்கிறதுனால இருக்குமோ :)
-------------------------------------------------------------------------------------------------------------
//இது ஒரு இல்லுமினேஷன்.//
அப்படியா? வெளிச்சப் படுத்தியிருந்தால் அந்த கனவுகளை தொடர்ந்திருக்கலாமே? :-))
'ஹலுசினேஷன்' என்று சொல்ல நினைத்தீர்களோ ஒருவேளை?
-------------------------------------------------------------------------------------------------------------
சிரிப்பை மட்டும் சிந்தி விட்டு சென்ற அனானி. நன்றி :)
-------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீதர் வெங்கட்
கரீக்டுங்க, அது வந்துங்க நாம இங்லீஸ்ல வீக்கு,
அது நீங்க சொல்லுற ஹலுசினேஷனாதான் இருக்கும்
கனவுல நிறைய வெளிச்சமா... இல்லுமினேஷன் ஆயிடுச்சி. :)
-------------------------------------------------------------------------------------------------------------
Welcome Back!!
மேலும் பின்னுங்க..., காத்திருக்கிறோம்...படிக்க...
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி மாறன்.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
"ஆதிமூலமே" அப்படின்னு குரல் கொடுத்த யானைக்கு அட்டெண்டன்ஸ் கொடுத்த கடவுள் மாதிரி..
"டாக்கடர்... என்னைக் காப்பாத்துங்க"ன்னு குரல் கொடுத்ததும் அட்டெணடன்ஸ் கொடுத்த டாக்டர் "டெல்பின்" வாழ்க.
டாக்டர்லாம் கடவுள் மாதிரின்னு சும்மாவா சொன்னாங்க.
நன்றி டாக்டர் Delphine. :)
-------------------------------------------------------------------------------------------------------------
//நிஜமாகவே ரசிச்சேன் அந்த கதையை..
//
நன்றி Delphine. :)
-------------------------------------------------------------------------------------------------------------
//முடிவு முன் கூட்டியே உங்களுக்கு தெரிய காரணம்.. உங்களுக்கு இந்த சிம்டம்ஸ் இருக்கிறதுனால இருக்குமோ :) //
கதையில சரொயா யோசிச்சு சமாளிக்கிறது வேற... ஸ்பாண்டினியசா சமாளீக்கிரது வேற... ரெண்டுமே உங்களுக்கு நன்றாக வரிகிறது. கதையை மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்!
-------------------------------------------------------------------------------------------------------------
PRINCENRSAMA ....
//கதையில சரொயா யோசிச்சு சமாளிக்கிறது வேற... ஸ்பாண்டினியசா சமாளீக்கிரது வேற... ரெண்டுமே உங்களுக்கு நன்றாக வரிகிறது//
ஹி..ஹி... நன்றி. :)
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment