Tuesday, August 28, 2007

டாக்டர் விஜய்.. வாழ்க... வாழ்க...

செய்தி:- சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. நடிப்புத்திறன், வாழ்வியல் பண்பாடு, சமூக சிந்தனை ஆகியவற்றுக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

------------------

நடிப்புத்திறன்

நடிகர் விஜயின் நடிப்புத்திறனை ஒரு வரியில் சொல்லமுடியாது. இரண்டு வரியில் சொல்லி விடலாம்.
"அண்ணா. ஏனுங்கண்ணா."

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த நடிகர் அவர். முகபாவங்களை வெளிப்படுத்துவதில் அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.
அவரது நடிப்புத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதிலிருந்தே அவர் எத்தனை சிறந்த நடிகர் என்பது தெள்ளென விளங்கும்.

வாழ்வியல் பண்பாடு:

அதிகம் பேசாதவர். பேசத்தெரியாது என்பது காரணமில்லை. அடக்கம்தான் காரணம். இது அவரது வாழ்வியல் பண்பாடு.
படத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கோடி வரை வாங்கும் அசாதாரண நடிகரான இவர் தமது சம்பாத்தியத்தை நல்ல முறைகளில் முதலீடு செய்யும் வாழ்வியல் நெறியுடையவர்.
இவரது வாழ்வியல் முறை: நடிகருக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
இத்தகு இவரது வாழ்வியல் பண்பாடு தமிழ் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

சமூக சிந்தனை:

இவரது சமூக சிந்தனைபற்றி நாளெல்லாம் சொல்லலாம்.
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பயன்படுத்தி வந்த வடுமாங்காய் மற்றும் தயிர்சாதத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்திய இவரது அரும்பணி இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த சமுதாய நோக்கு உள்ள படங்கள் பலவற்றில் இவர் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ற ஒரு திரைப்படத்தில் இவரை பாராட்டி தபால் தலையே வெளியிடப்பட்டது.
இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.
இவரது திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சென்னையின் அனைத்து ரவுடிகளையும் அழித்து சென்னையை அமைதிப்பூங்காவாக்கியவர்.
இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகு சிறந்த நடிப்புத்திறன், சீரிய வாழ்வியல் பண்பாடு, சீர்மிகு சிந்தனைகள் கொண்ட இவர் டாக்டர் பட்டம் பெற்றது அந்த டாக்டர் பட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும்.
வாழ்க டாக்டர் விஜய்.
வாழ்க அவருக்கு பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மற்றும் ரசிகர்கள்.
வாழ்க ! வாழ்க !

27 comments:

said...

Super Naa-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடுத்த வருடம் எங்கள் அண்ணன் லூஸ் மோகனுக்கு
டாக்டர் பட்டம் கொடுப்பார்களா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

Yenna Nakkala??-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானிமஸ்ண்ணா... தேங்ஸ்ண்ணா... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆதிரை
தமிழகத்தின் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களை லூஸ்மோகனுடன் ஒப்பிட்ட தங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது நல்ல நடிகரான லூஸ்மோகன் பெயருக்கே பெருத்த அவமானம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணா... டாக்டர் விஜய் அண்ணா. வாங்கண்ணா. இன்னாங்கண்ணா நக்கலாண்ணு கேட்டுட்டீங்களேண்ணா... நாம உங்க அருமை பெருமையை விலாவரியாத்தான அண்ணா சொல்லியிருக்கோம். :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

விஜய் படமெல்லாம் அறுவையா இருக்கிறதால பேசாம அவருக்கு "சர்ஜன்" பட்டம் கொடுத்து இருக்கலாமோ ?-------------------------------------------------------------------------------------------------------------
said...

Super post.
Some kids(medical doctor's son) did some surgery few months ago. Actor Vijay is going to do some surgery with that doctor title. Please some one try to tell him.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அஹா சூப்பரு பதிவுங்கணா.... டாக்டர்.விஜய் நடிச்ச பேக்கரி படத்தை விட சூப்பரா இருந்துச்சுங்கணா... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு'ணா,

முந்தய பின்னூட்டத்திலே துணை கால் போடாதது என்னோட தப்பு இல்லிங்கணா....

பேக்கரியை விஜய் டிவி'லே பார்த்துட்டு'ங்கணா இன்னும் சிரிப்பு சிரிப்பா வருதுங்கணா.... :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சபேஷ்

டாக்டர் பட்டம் வாங்கின உடனே அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணிட முடியாது. ஏதாவது மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பிராக்டீஸ் செய்ய வேண்டும். விஜய் ஏதேனும் மருத்துவமனையில் சேரலாம். எனது சஜஷன் கீழ்ப்பாக்கம். :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணா இராமண்ணா... வாங்கண்ணா.. போக்கிரியை விட விஜய் டிவி "பேக்கரி" சரி எண்டர்டெயினிங்ண்ணா.
டாக்டர் விஜய்யோட தமிழ சினிமா ஃபார்முலாவை புட்டு புட்டு வெச்சிருந்தாங்கண்ணா :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

இவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கலேனு யார் கேட்டா? அந்த பல்கலை கழகத்திற்கு அறிவு எங்கே போனது? அப்பிடியே இருந்தாலும் நாம்மெலாம் இந்த விருதுக்கு தகுதியானவரா னு அந்த நாயே யோசிக்க வேண்டாமா?. இது ஒரு மிக கேவலமான செயல் ..எல்லோரும் வெட்கி தலைகுநியும் நாள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

தீரன்,
விஜய்க்கு டாக்டர் பட்டம் தரும் பல்கலைக்கழகம் என்பதிலேயே அதன் தரம் தெரியவில்லையா.
இவை டீம்டு யுனிவர்சிட்டிக்கள் இல்லை. டூம்டு யுனிவர்சிட்டிக்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இது நல்ல நடிகரான லூஸ்மோகன் பெயருக்கே பெருத்த அவமானம்//

மிகச் சரியான கூற்று.-------------------------------------------------------------------------------------------------------------
said...

:((((((((((((((((((((-------------------------------------------------------------------------------------------------------------
said...

டேய் வெங்காயங்களா...
வருங்கால super star ட எங்க தளபதி
விஜய்..ரஜனியவிட விஜய் எவ்வளவோ மேல்ட பரதேசி பசங்களா-------------------------------------------------------------------------------------------------------------
said...

டேய் வெங்காயங்களா...
வருங்கால super star ட எங்க தளபதி
விஜய்..ரஜனியவிட விஜய் எவ்வளவோ மேல்ட பரதேசி பசங்களா-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கு ஏம்பா இந்த குதி குதிக்கிறீங்க?
டாக்டர் பட்டம் கேவலப்பட்டுதான் ரொம்ப நாளாச்சே?


அரை பிளேடு, நகைச்சுவை உங்களுக்கு நல்லா வருது. அருங்க ச்சே..அருமைங்க..-------------------------------------------------------------------------------------------------------------
said...

//மிகச் சரியான கூற்று.//

நன்றி யோகன் பாரிஸ்.

சோகம், கோபம், காதல் என அனைத்து நவரசத்திற்கும் ஒரே மாதிரியான முகபாவம் காட்டும் நடிப்பு திறன் விஜய் ஒருவருக்குத்தான் உண்டு.-------------------------------------------------------------------------------------------------------------
said...

delphine

//:(((((((((((((((((((( //

விஜய் டாக்டரானது வருந்தத்தக்க விபத்து. திட்டமிட்ட சதி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி...

//வருங்கால super star //

அப்படிங்களாண்ணா...
தமிழ் சினிமாவ ஆண்டவன்தான் காப்பாத்தணுங்கண்ணா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தஞ்சாவூரான்

//டாக்டர் பட்டம் கேவலப்பட்டுதான் ரொம்ப நாளாச்சே//

இப்ப நடக்கறது டோட்டல் டேமேஜ்.

//நகைச்சுவை உங்களுக்கு நல்லா வருது//

நன்றி தஞ்சாவூரான்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.//

தூள் தூள் தூள் தூள் தூள் தூள்.

நடிப்புத்திறன்,வாழ்வியல் பண்பாடு,சமூக சிந்தனை அதோட தெலுங்குப் படங்களை தமிழில் மொழி பெயர்த்தையும் (ரீமேக் கிங்) சேர்த்துக்குங்க.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடுத்த டாக்டர்ஸ் சிம்பு,ஸ்.ஜெ.சூர்யா,மற்றும் பேரரசு இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.ஆமா ஒரு சந்தேகம் டாக்டர் பட்டம் கிலோ எவ்வளவு?-------------------------------------------------------------------------------------------------------------
said...

எங்க தல டாக்குடரு வெசய்ய பத்தி யாராச்சும் தப்பா பேசினா அப்புறம் நான் கெட்ட கோவக்காரணாகிறுவேன். எங்க வெசய் அவறு ரசிஹனுகள்ட என்னை யாடும் டாக்குடர்ர்னு கூப்புடக்கூடாதுனு அன்புக்கட்டள போட்டிருக்காப்புள!

-- திருவாளர் பொதுஜனம்

என்ன கொடும சார் இது...
--கருப்பன்-------------------------------------------------------------------------------------------------------------
said...

gudunna-------------------------------------------------------------------------------------------------------------