"வியாசரே. ஒரு சூப்பர் கதை வேணும்"
"எழுதிடலாம்".
"இது வரைக்கும் இப்படி ஒரு கதை வந்ததே இல்லை அப்படின்ற மாதிரி இருக்கணும். கதையில மசாலா, வயலென்ஸ், செண்டிமெண்ட், கவர்ச்சி எல்லாமே தூக்கலா இருக்கணும்."
"அவ்வளவுதான. கதைய கேளுங்க."
---------------------
சந்தனு ராஜா கங்கைக்கு போனார். ஒரு அழகான பொண்ணை பார்த்தார்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" வழிந்தார்.
"நான் ஃப்ரீ டைப். என்ன நீங்க கொஸ்டின் எதுவும் பண்ணமாட்டீங்கன்னாதான் எனக்கு ஓக்கே".
ராஜா சான்சை மிஸ் பண்ண விரும்பவில்லை. "சரி. அப்படியே."
ஒண்ணு இல்ல ஏழு குழந்தைங்க பிறந்து எல்லாவற்றையும் கங்கையில தூக்கி போட்டு அந்த பெண் கொல்ல எட்டாவது குழந்தைய தூக்கி போடறப்ப ராஜா அப்ஜெக்ட் பண்ணார்.
"ஆக்சுவலி நான் கங்கா. என்னோட ஃப்ரீடம்ல நீங்க குறுக்கிட்டிட்டீங்க. இந்தாங்க உங்க குழுந்தை". கங்கை போயேவிட்டாள்.
குழந்தை பீஷ்மன் பெரியவனானான்.
சேம் கங்கா ரிவர். சேம் ராஜா. இப்ப வேற பொண்ணு. சத்யவதி.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" மீண்டும் வழிந்தார்.
"ஓ. ஓக்கே. ஆனா என்னோட குழந்தைங்கதான் நாளைக்கு ராஜாவாவணும். உங்க பெரிய பையன் கிடையாது. இந்த கண்டிஷன் உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கு ஓக்கே."
அகெய்ன் கண்டிசன். ராஜா சோகத்தோடு திரும்பினார்.
அப்பாவுக்காக பிள்ளை பீஷ்மர் கல்யாணமே செய்யாமல் விட்டு கொடுக்க.. அப்பாவுக்கு கல்யாணம் நடக்க... இரண்டு பிள்ளை பிறக்க... அப்பாவும் ஒரு பிள்ளையும் போய் சேர...
பீஷ்மர் தம்பிக்கு கல்யாணம் செய்ய மூணு பொண்ணுங்கள கடத்தறாரு. அம்பா அம்பிகா அம்பாலிகா.
அம்பாவை லவ் ஃபெயிலியர்னு சொல்லி டீல்ல விட்டுட்டு தம்பி மத்த இரண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ண.....
கொஞ்ச நாளிலே தம்பி அல்பாயுசுல போக... அடுத்த வாரிசு. பிக் கொஸ்டின்... ????
சத்யவதி பீஷ்மர் கிட்ட சொன்னாங்க.
"மகனே. கல்யாணம் ஆகுறதுக்கு மின்னாடி பராசரரும் நானும் ஒரு போட்ல தனியாயிருக்கப்ப அவர் எனக்கு ஒரு குழந்தையை (!!) கொடுத்தாரு. அதுதான் வியாசன்.
அவனை கூட்டி வந்து அம்பிகாவுக்கும் அம்பாலிகாவுக்கும் குழந்தை கொடுக்க சொல்லலாம். தீர்ந்தது வாரிசுப் பிரச்சனை."
வியாசர் வந்தார். கொஞ்சம் பார்க்க அசிங்கமா இருந்தாருன்னு அம்பிகா கண்ணை மூடிக்க கண்ணில்லாத திருதராஸ்டிரனை கொழந்தையா கொடுத்தாரு.
அவரை பார்த்து பயத்துல வெளுத்துப்போன அம்பாலிகாவுக்கு வெளுத்துப்போன பாண்டுவை குழந்தையா கொடுத்தாரு.
"மகனே. இரண்டு கொழந்தையிலும் டிஃபக்ட் இருக்கு. அம்பிகாவுக்கு இன்னொரு குழந்தை"
அம்பிகா தனக்கு பதிலா வேலைக்காரிய அனுப்ப வேலைக்காரிக்கு விதுரனை குழந்தையா கொடுத்தாரு வியாசர்.
"அம்மா. அவ்வளவுதான். இதுக்கு மேல என்ன தப்பு பண்ண சொல்லாத" வியாசர் கிளம்பி போயிட்டார்.
கிடைச்ச வாரிசுங்கள பீஷ்மர் பராமரிச்சு வளர்க்க ஆரம்பிச்சாரு.
திருதராஷ்டிரனை காந்தாரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
பாண்டு குந்தி, மாதரின்னு இரண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
பாண்டு காட்டுக்கு வேட்டைக்கு போனார். அங்க மேடிங் பண்ணிக்கிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்க ஆக்சுவலா மானா மாறி ஏதோ டிஃப்ரண்டா டிரை பண்ணிக்கிட்டிருந்த முனிவருக்கு கோபம் வந்து..
"அந்த மாதிரி எண்ணத்தோட நீ உன்னோட மனைவியை டச் பண்ணினா அவுட்" அப்படின்னு சாபம் கொடுத்துட்டாரு.
இனி எனக்கு பிள்ளை குட்டியே பிறக்காதா அப்படின்னு சோகமா இருந்த பாண்டு கிட்ட குந்தி ஒரு பிளாஷ் பேக் சொன்னாங்க.
---
குந்தியோட கவனிப்புல மகிழ்ந்த துர்வாசர் குந்திக்கு ஒரு மந்திரம் சொல்றாரு. அந்த மந்திரத்தை சொல்லி எந்த கடவுளை கூப்பிடறமோ அந்த கடவுள் வந்து ஒரு குழந்தைய கொடுத்துட்டு போவாரு.
குந்தி அதை டெஸ்ட் பண்ண சூரியனை கூப்பிடறாங்க. சூரியன் வந்து ஒரு குழந்தைய கொடுத்துடறாரு.
"அச்சச்சோ எனக்கு கல்யாணமே ஆகலையே. குழந்தைய கொடுத்துட்டீங்களே.".
"குழந்தை பெற்றாலும் நீ கன்னியே." அப்படின்னு சூரியன் சொல்லிட்டு போயிடறாரு.
கன்னி குந்தி குழந்தை கர்ணனை ஆத்தோட போட்டுடறாங்க.
----
பிளாஷ்பேக்கல குழந்தை பிறந்து கதைய மறச்சிட்டு வரம்கிடைச்ச கதைய மட்டும் பாண்டு கிட்ட குந்தி சொல்ல சந்தோஷமான பாண்டு மந்திரம் சொல்லி குழந்தை வர வைக்க சொல்றாரு.
குந்தி மந்திரம் சொல்றாங்க.
தர்மதேவனான எமன் வந்து குழந்தை கொடுக்கறாரு. யுதிஷ்டிரன்.
வாயு வந்து குழந்தை கொடுக்கறாரு. பீமன்.
இந்திரன் வந்து குழந்தை கொடுக்கறாரு. அர்ச்சுனன்.
"அக்கா. எனக்கும் குழந்தை" மாதரி கேட்க மாதரிக்கு மந்திரம் சொல்றாங்க குந்தி.
மாதரி அசுவினி தேவர்களை கூப்பிட நகுல சகாதேவர்கள் கிடைக்கிறாங்க.
இதே டைம்ல மண்பானையில பிறக்கறாங்க துரியோதன், துச்சாதனன் உள்ளிட்ட நூறு கெளரவர்கள்.
பாண்டு சாபத்தை மறந்து மாதரியை அந்த மாதிரி எண்ணத்தோட டச் பண்ண செத்து போறாரு. கூடவே மாதரியும்.
----
எல்லா குழந்தைகளும் வளருது. துரோணாச்சாரியார் கிட்ட சண்டை படிக்குது.
பெரிதானதும் யுதிஷ்டிரன ராஜாவாக்குறாங்க. துரியோதனன் சதி பண்ண அஞ்சு பேரும் தப்பிக்கிறாங்க.
அர்ச்சுனன் ஒரு போட்டியில திரெளபதிய ஜெயிக்க அஞ்சு பேருமா அவளை வீட்டுக்கு கொண்டு வர்றாங்க.
"அம்மா. நாங்க என்ன கொண்டு வந்திருக்கோம் பாரு." யுதிஷ்டிரன்.
"எதை கொண்டு வந்தாலும் அஞ்சு பேருமா ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கங்க". குந்தி பார்க்காமலேயே சொல்லிடறாங்க.
"அர்ச்சுனா. அம்மாவே சொல்லிட்டாங்க. அவங்க வார்த்தைய நாம மீற கூடாது. திரெளபதிய அஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" யுதிஷ்டிரன்.
அர்ச்சுனன் சரி அப்படின்றான்.
அஞ்சு பேருமா கல்யாணம் பண்ணி திரெளபதிய பஞ்சாலியாக்கி ராஜ்யத்தையும் ஆளுறாங்க.
நாரதர் இந்த கல்யாணம் மூலமா உங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. ஆளுக்கு ஒரு வருடம் அப்படின்னு சைக்ளிக் ரொட்டேசன்ல வாழ்க்கை நடத்துங்கன்னு அட்வைஸ் பண்றாரு.
சரின்னு இப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு, இந்த அக்ரிமெண்ட மீறுனா நாடுகடத்தல் அப்படின்னு பேசி வச்சிக்கிறாங்க.
யுதிஷ்டிரனுடைய வருடத்துல தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டதுக்காக அர்ச்சுனன் அக்ரிமண்ட் படி தன்னுடைய தப்புக்கு கொஞ்சநாள் நாட்டை விட்டு போறேன்னு சொல்லி கிளம்புறான்.
அர்ச்சுனன் ஊரை சுத்தி வந்து அல்லி, நாக கன்னிகை, சுபத்ரா... எக்சட்ரா எக்சட்ரான்னு கல்யாணமா பண்ணிக்கிட்டே போறான்.
பீமனும் தம் பங்குக்கு இடும்பின்ற ராட்சசியை கல்யாணம் பண்றான்.
நாட்டை பிரிச்சு கொடுத்தாலும் சந்தோஷப்படாத துரியோதனன் தர்மனை சூதுக்கு கூப்பிட...
ஹிஸ்டரியில இல்லாத அளவுக்கு தருமனும் மனைவியை வெச்சு சூதாடுறான்.
சூதுல ஜெயிச்ச துரியோதன் பாஞ்சாலியை இழுத்து வர சொல்ல...
அஞ்சு பேருக்கு மனைவியான பாஞ்சாலி இனி நூறு பேருக்கு பணிப்பெண்ணா இருக்கட்டும்னு கர்ணன் சொல்ல....
துச்சாதணன் சபை நடுவுல வெச்சு ஸ்டிரிப் டீஸ் அட்டெம்ட் பண்றான்.
கரெக்டா டைமுக்கு வந்து கிருஷ்ணர் காப்பாத்துறாரு.
அப்புறமா பாண்டவர்ங்க கேமோட ரூல் படி 13 வருடம் கழிச்சி வந்து நாட்டை கேக்கிறாங்க.
துரியோதனன் தர மாட்டேன்னு சொன்னதும் சண்டை போட்டு கோடிக்கணக்கான பேரை கொன்னு கடைசியா ஆட்சிய புடிக்கிறாங்க.
----------------------------------------
"கதையோட அவட்லைன் எப்படி" வியாசர் கேட்கிறார்.
"சூப்பர். பின்னிட்டீங்க."
இதுதான் வியாசரின் சூப்பர் ஹிட்டான மகாபாரத கதை.
---------------------
Tuesday, August 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
என்ன சொல்ல வர்றீங்க ?
-------------------------------------------------------------------------------------------------------------
அனானி..
//என்ன சொல்ல வர்றீ்ங்க.//
வியாசரின் மகாபாரதம்தான். வேறென்ன :)
-------------------------------------------------------------------------------------------------------------
அஹா!!
இப்படி புட்டு புட்டு வெச்சுட்டீங்களே தலைவா!!!
இவ்ளோ ஈஜியா எனக்கு யாரும் மகாபாரதம் சொல்லி கொடுத்ததே இல்ல!! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நல்ல முயற்சி ;)
-------------------------------------------------------------------------------------------------------------
சி.வீ.ஆர்.
//அஹா!!
இப்படி புட்டு புட்டு வெச்சுட்டீங்களே தலைவா!!!
இவ்ளோ ஈஜியா எனக்கு யாரும் மகாபாரதம் சொல்லி கொடுத்ததே இல்ல!! :-)//
தாங்ஸ் சி.வீ.ஆர்.
எதோ நமக்கு தெரிஞ்சுது. :)
-------------------------------------------------------------------------------------------------------------
//நல்ல முயற்சி ;)//
நன்றி வெட்டி. :)
-------------------------------------------------------------------------------------------------------------
good one.
-------------------------------------------------------------------------------------------------------------
//அஹா!!
இப்படி புட்டு புட்டு வெச்சுட்டீங்களே தலைவா!!!
இவ்ளோ ஈஜியா எனக்கு யாரும் மகாபாரதம் சொல்லி கொடுத்ததே இல்ல!! :-)
//
ரிபீட்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆதிரை வருகைக்கும் ரிபீட்டுக்கும் நன்றி :)
குட் சொன்ன அனானிக்கும் நன்றி :)
-------------------------------------------------------------------------------------------------------------
அரை பிளேடு,
அரை குறையா தான் சொல்லி இருக்கிங்க,
100 கவுரவர்கள் தவிர ஒரு சகோதரி உண்டு அவர்களுக்கு.
பாஞ்சாலி நளாயினியின் மறுவடிவம் , அவளும் அவள் கணவன் மவுத்கல்யரும் செய்த சல்லாபத்தில் ஏற்பட்ட ஊடலால் , அடுத்த பிறவியில் கணவன் கிடைக்கும் என வரம்?!!! கிடைக்கப்பெற்று , பாஞ்சாலி ஆகப்பிறந்து அதனை செய்கிறாளாம் , இவை எல்லாம் கதையை ஜஸ்டிபை பண்ண சொல்லப்பட வேண்டும்!
பி.கு:
இந்த கதையை நேரில் பார்க்கும் யாரிடம் பேசினாலும் கிராதகா என்று பார்ப்பார்கள்! நான் ஏற்கனவே இதை சொல்லி உதை வாங்காத குறை! பதிவில் போட்டாதால் தப்பிச்ச!
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி வவ்வால்.
கதையை சுருக்கமாக சொல்ல வேண்டிய அவசியத்தின் காரணமாக 101வது குடத்திலிருந்த துச்சலையை சொல்லவில்லை. இந்த துச்சலை பின்னாளில் ஜயத்ரதனை மணந்தாள். ஜயத்ரதன் போரில் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாயிருந்து அர்ச்சுனனால் பழிவாங்கப்பட்டான்.
மற்று பாஞ்சாலியின் முற்பிறவிக் கதையாக நீங்கள் கொடுத்ததை நான் படித்ததில்லை.
நானறிந்த முற்பிறவிக் கதை..
முற்பிறவியில் பாஞ்சாலி நல்ல கணவனை வேண்டி சிவபெருமானை வேண்டினாள். "நல்ல கணவன் வேண்டும்" என்று ஐந்து முறை கோரினாள்.
அந்த வரத்தின் படி ஐந்து நல்ல கணவன்கள் அவளுக்கு கிடைக்க வேண்டிய அமைப்பு பாண்டவர்கள் மூலம் நடந்தது.
நன்றி. :)
-------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் கதைங்க. மகாபாரதத்துல உள்ள ட்விஸ்ட்ஸ் அண்டு டர்ன்ஸ் ரொம்பவும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். மகாபாரதக் கதைல இருக்குற கருத்தை விட...அந்தப் பாத்திரங்களின் மனப்பாங்கும் குணச்சித்திரமும் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கிறவை.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி இராகவன்..
மகாபாரதம் ஒரு மகத்தான கதை.
ஒவ்வொரு முறை படிக்கும்போது பலவித உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.
நியாய அநியாயங்களின் தர்க்க மேடையாக பல இடங்களில் திகழக்கூடியது.
தாங்கள் சொன்னது போல் பாத்திரப்படைப்புகள் அதன் தன்மை என காலத்தை வெல்லும் இதிகாசம்.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
சூப்பரு :)
-------------------------------------------------------------------------------------------------------------
ஆஹா. அருமை அருமை. இவ்வளவு எளிமையாக இது வரை மகாபாரதத்தை யாரும் சொன்னது இல்லை.
ம்ம்... ஆனா நமக்குள்ள இருக்கிற மதுரை நக்கீரர் எப்பவும் குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்க முயல்வாரே! ம்ம்...கண்டுபிடிச்சாச்சு. கண்டுபிடிச்சாச்சு.
ஏனுங்க. அஞ்சு பேரும் கல்யாணம் பண்ணி திரௌபதிய பாஞ்சாலியாக்குனாங்களா? இல்லீங்களே. கல்யாணத்துக்கு முன்னாலயே அவுங்களுக்கு திரௌபதி பாஞ்சாலின்னு ரெண்டு பேரும் இருந்ததுங்களே. துருபதன் மகள் திரௌபதி; பாஞ்சால நாட்டின் இளவரசி பாஞ்சாலி. ஜனகர் மகள் ஜானகி; விதேக நாட்டு இளவரசி வைதேகி மாதிரி. :-)
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கோபிநாத்.
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி குமரன் .
பஞ்ச நதிகள் பாயும் தேசம் பாஞ்சாலம்.அதன் இளவரசி பாஞ்சாலி. பஞ்ச பாண்டவர்களை கணவர்களாய் பெற்றதால் பெயர் மேலும் பொருத்தமானது :)
சரியா. :)
-------------------------------------------------------------------------------------------------------------
குமரன் ,
//திரௌபதி பாஞ்சாலின்னு ரெண்டு பேரும் இருந்ததுங்களே. துருபதன் மகள் திரௌபதி; பாஞ்சால நாட்டின் இளவரசி பாஞ்சாலி//
நீங்க சொன்ன திரோவ்பதி, பாஞ்சாலி எல்லாம் காரணப்பெயர்கள், சூட்டியப்பெயர் , கிருஷ்ணை , காரணம் பாஞ்சாலியும் கருமை நிறம் கொண்டவள் தான்.(யாக நெருப்பில் இருந்து பாஞ்சாலியும் , அவர் சகோதரன் திருஷ்டதுய்மனும் தோன்றினார்கள்)
வைதேகி என்பதற்கு அருமையான வேறு விளக்கம் இருக்கிறது.
வை என்றால் மண் , தேகி என்றால் உடல் உதாரணங்கள் சில ,வையகம் - உலகம், வை +கை வைகை ,கை = இருக்கும் இடம் இங்கே வை என்றால் மணல் என பொருள் கொண்டால் மணல் இருக்கும் இடம் வைகை , சீதா பூமாதாவின் மறுவடிவம் என்று தானே சொல்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
வவ்வால். நான் ஒன்றும் சொல்லவில்லை. அரை பிளேடு, வவ்வால் - உங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு. அப்ப நான் வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது தான். :-)
(அம்புட்டு சீக்கிரம் உன்னை விட்டிருவோமா? சொ.செ.சூ. வச்சுக்கிற வரைக்கும் பேசிக்கிட்டே இரு மவனே - என் மனம்)
வைதேகிக்கு விளக்கம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா சீதை பூமாதேவியின் மகள் தான்; சீதை லக்ஷ்மியின் அவதாரம் என்று தான் சொல்வார்கள்.
(ஆகா. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்கறேனே).
-------------------------------------------------------------------------------------------------------------
வவ்வால்...
கிருஷ்ணை என்பது அதிகம் பயன்படுத்தப்படாத பாஞ்சாலியின் இயற்பெயர். அதன் தங்கள் விளக்கமும் சரியே.
குமரன்...
மிதிலையின் இளவரசி என்பதால் சீதை மைதிலி.
தாங்கள் சொன்னது போல் விதேக நாட்டு இளவரசி என்பதால் வந்த பெயரல்ல வைதேகி.
அதேபோல் வவ்வாலின் வைதேகிக்கான பொருள் விளக்கம் ஓரளவுக்கே சரி. தேகம் என்ற அளவில்.
மனதை கட்டுப்படுத்தி உடலிலிருந்து பிரிக்கும் தன்மையால் ஜனகன் விதேகன். விதேகன் மகள் வைதேகி. ( वैथेहि ).
-------------------------------------------------------------------------------------------------------------
குமரன் ,
இதில் என்ன இருக்கு சும்மா பேசுவோம் , அரை பிளேடு அதெல்லாம் கோபித்துக்கொள்ளமாட்டார்(வசதியா ஒரு களம் )
சரி பூமாதேவி மகளாக இருப்பின் அவரது அம்சம் தானே!
சீதா என்றால் ஏர் கொழு, அல்லது ஏர் ஓட்டும் போது ஏற்படும் கீரல்(sita=furrow) தங்க கலப்பை கொண்டு யாக சாலை அமைக்க நிலத்தை உழுத போது தோன்றிய பெண் என்பதால் சீதா என்ற பெயர்.சிலர் சீதா என்பதற்கு(சீதம் - குளிர்ச்சி) குளிர்ச்சியானவள் என்றும் பொருள் சொல்வார்கள் காரணம் தாமரை மேல் தடாகத்தில் இருப்பவள் மகாலஷ்மி!
எனவே மண்ணில் இருந்து வந்த பெண் , வைதேகி என்பதும் ஒத்து வருதே!
ஹே .. ஹே நானும் அடங்க மாட்டேனே அவ்வளவு சீக்கிரம் :-))
-------------------------------------------------------------------------------------------------------------
வவ்வால்...
//அரை பிளேடு அதெல்லாம் கோபித்துக்கொள்ளமாட்டார்// :)
சீதை மற்றும் வைதேகிக்கான தங்கள் விளக்கங்கள் சரியே. ஒரே பெயர் பல விளக்கங்களை ஏற்பது மொழியின் சிறப்பு. :)
சீதா என்பது ரிக்வேதத்தில் வரும் விளைச்சல் மற்றும் விவசாயம் சார்ந்த ஒரு தேவதையின் (பூமாதேவி ?) பெயர் என்பது ஒப்பு நோக்கத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment