Wednesday, August 29, 2007

போண்டா மற்றும் போளியின் கதை.

(முன்குறிப்பு: இது சிறுவர்களுக்கான நீதி கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

அது ஒரு ஹோட்டல்.
அங்கு பல பலகாரங்கள் இருந்தன. தோசை, இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா, புட்டு, போளி, ஆப்பம் இன்னும் பல. தினமும் வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த எல்லா பண்டங்களையும் ஆர்டர் செய்தார்கள். இவற்றில் போண்டா வாடிக்கையாளர்களை கவர புரட்சிகரமான கோஷங்களை இட்டது. போண்டாவை பலர் ஆர்டர் செய்தனர்.

போண்டாவின் கோஷங்கள் போளியின் கொள்கைக்கு(!) முரணானவையாக இருந்தன. போண்டாவை எதிர்த்து போளி குரல் கொடுக்கத்துவங்கியது. போண்டாவின் சைட் டிஷ்கள் போண்டாவை ஆதரித்தன. போளியின் சைட் டிஷ்கள் போளியை ஆதரித்தன. போளி போண்டாவை எதிர்த்து போளி போண்டாவாக வேடமிட்டு போண்டாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்த்தது. போண்டாவும் அதை சமாளிக்க கீரைபோண்டா, கோதுமை போண்டா என வேடமிட்டு போளிக்கு எதிராக முழங்கியது.

இதனால் வாடிக்கையாளர்கள் போண்டாவையும் போளியையும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
இதனால் போண்டாவும் போளியும் ஒன்றையொன்று எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமே வாடிக்கையாளர்களை கவர ஆரம்பித்தன.

போளி போண்டாவை ஆர்டர் செய்பவர்களை திட்ட ஆரம்பித்தது. சிலர் போளியின் ஆட்சேபணைக்கு பயந்து போண்டாவை ஆர்டர் செய்வதை நிறுத்தினர் அல்லது திருட்டுத்தனமாக போண்டா ஆர்டர் செய்தனர். போளி அனைவரையும் பகைக்க ஆரம்பித்தது. இதனால் போளிக்கு எதிரான குரல்கள் அதிகமாயின.

தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினர். நெருப்பு தணலாய் போளியை வறுத்தெடுக்க கிளம்பியது.

இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பார்த்த வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். முதன் முறையாக ஹோட்டலுக்கு வந்தவர்கள் தெரியாமல் போண்டாவையோ போளியையோ ஆர்டர் செய்தவர்கள் மறுமுறை ஹோட்டலுக்கு வரவே அஞ்சினர்.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள்.

பலகாரங்கள் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களுக்குள் எத்தனை வேற்றுமையிருந்தாலும் தங்களுக்குள் மோதிக் கொள்வது தங்களுக்குத்தான் அவமானம் என்பதை உணர்ந்தன. பலகாரங்கள் திருந்தியதால் முன்பு போல வாடிக்கையாளர்கள் வந்து பயமின்றி வேண்டியதை ஆர்டர் செய்தார்கள்.

பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.

நீதி: ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

22 comments:

said...

appadi podu aruvala

-------------------------------------------------------------------------------------------------------------
said...

this is the best parody I've read in the recent past! I couldnt control my laughter while reading ... great stuff

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹலோ ஏணுங்க நீங்கள் இவ்வளவு சீக்கிரம் கலாய்ச்சிட்டீஙகன்னா, அதுவும் இவ்வளவு நச் சுன்னு கலாய்ச்சிட்டா அப்ப நாங்கள்லாம் எப்படி இந்த வாரத்தை ஓட்டறது. உண்மையிலே கடைசி சிலவரிகள் நச். ரெண்டுபேரும் சேந்துடுவாங்களா? அய்யோ அப்ப இந்தனை நாள் வேடிக்கை பாத்தவங்கள்லாம்... என்னமோ ரோட்டுல பாம்பு கீரி சண்டை பாகுறம்னு கால்கடுக்க நின்னு ஒண்ணுமே பாக்காம வந்த கதியாவுல இருக்கு இது... ஆனாலும் கலாய்ச்ச ஸ்டைல் சூப்பரபு!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உண்மையிலேயே இந்த பிளேடு காயப்படுத்தாத பிளேடு தான் - பிரம்மாதம் - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு ரொம்ப 'ஷார்ப்'பா இருக்கு.

சூப்பர்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.//

அந்தநாளும் வந்துடாதோ...........

சூப்பரப்பூ:-)))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

போண்டா ஒருமுறை மாட்டிக் கொண்டதும், போளியின் சைட் டிஷ்கள் ஜிங்கு ஜிங்கு என்று குதித்தன. போண்டா ஜகா வாங்கியது. போளீயின் தற்பெருமை உயர்ந்தது. போளி காதுக்குனிய செந்தமிழால் அகப்பட்டவர்களை எல்லாம் அர்சித்தது. சைட் டிஷ்கள் மெளனம் காத்தன.தங்கள் நட்பை பேணி காத்தன. அச்சமயம் என்ன நடந்ததோ தெரியவில்லை, சைட் டிஷ்கள் மீது அதே செவிக்கினிய, கண்ணுக்கு குளிமையான அர்ச்சனையை
ஆரம்பித்தது போளி.சைட் டிஷ்களுக்கு வீரம் பொங்கியது. வெகுண்டு எழுந்தன. உலகமே வியந்து பாராட்டும்படி போளிக்கு எதிராய் வாளை சுழட்டின. இனி என்ன நடக்கும்? போளி திருந்துமா? தமிழ்மணம் மணக்க தொடங்குமா? பொறுத்திருந்து பாருங்கள், காமடிகள்
தொடரும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தூண்டி விடுபவர்கள்

தூண்டி விட்டு ஒளிந்து கொள்பவர்கள்

தூண்டி விட்டது தெரியாமல் துடிப்பவர்கள்

தூண்டியதில் குளிர் காய்பவர்கள்

தூண்டிலில் மாட்டிய புழுக்களாகத் துடிக்கும் நாம்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பார்த்த வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். முதன் முறையாக ஹோட்டலுக்கு வந்தவர்கள் தெரியாமல் போண்டாவையோ போளியையோ ஆர்டர் செய்தவர்கள் மறுமுறை ஹோட்டலுக்கு வரவே அஞ்சினர்.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள்.//

கலக்கல் ! :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினர். நெருப்பு தணலாய் போளியை வறுத்தெடுக்க கிளம்பியது.//

;-)))))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நடக்கட்டும் நடக்கட்டும்

//பலகாரங்கள் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களுக்குள் எத்தனை வேற்றுமையிருந்தாலும் தங்களுக்குள் மோதிக் கொள்வது தங்களுக்குத்தான் அவமானம் என்பதை உணர்ந்தன//

உணர்ந்துட கிணர்ந்துடப் போறாங்க.

பி.கு: சீக்கிரம் உணர்ந்திட்டா, நம்ம கடைல ஈ ஓட்டுமே ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி

மதுரை மச்சி
parody man
செல்லா
நாகூர் இஸ்மாயில்
விஜயன்
துளசி கோபால்
பெயர்போட பயமாஇருக்கு
தமிழன்
கோவி கண்ணன்
அனானி.
மற்றும் சர்வேசன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சுவையான பதிவு((-

-------------------------------------------------------------------------------------------------------------
said...
This comment has been removed by the author.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

போளியோ, போண்டாவோ, பஜ்ஜியோ, பக்கோடாவோ ஒற்றுமையாக இருந்தாலும், சண்டை போட்டாலும் கடைசியில் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகத்தானே போகின்றன. எனவே இருக்கும் சொற்ப காலத்தில் என்ன செய்தால் என்ன, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து திருப்தி பட்டுக் கொள்வோம் என்று ஏதாவது செய்கின்றன. இதற்கு மேல் இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

http://thabaal.blogspot.com/

-------------------------------------------------------------------------------------------------------------
said...

good story :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி

மிதக்கும் வெளி..
ஏவிஎஸ்
மற்றும் அனானி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பதிவை படித்த, பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.
பதிவு சூடான இடுகைகளில் இருக்கிறது.

போண்டாவும் போளியும் எண்ணெய் பலகாரங்கள் என்பதால் நான் ஆர்டர் செய்வதில்லை என்பதை மட்டும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடியேய், உனக்கு இருக்குடீ...

கருத்து சொல்றாராம்..

//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன//
நெசமாவா?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன//

கலக்கல்.

தெய்வமே! நீங்க தான் அவரா? உண்மையைச் சொல்லுங்க???

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இளா...

//அடியேய், உனக்கு இருக்குடீ...//

என்ன இருக்கிறது. சூடாக இருக்கிறதா. போண்டா போளியைத் தவிர்த்து வேறு எதுவாக இருந்தாலும்.. ஓக்கே.
:)

கைப்புள்ள...

//தெய்வமே! நீங்க தான் அவரா? //

எவர் என்று தெளிவாக சொல்லவும்.
அது எவராக இருந்தாலும்... நான் நான் மட்டுமேதான்... வேறுஎவருமில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எப்டி உங்களால மட்டும் இப்டி முடியுது...

-------------------------------------------------------------------------------------------------------------