Friday, August 17, 2007

பின்நவீனத்துவம் - அப்படின்னா என்னன்னா....

பின்நவீனத்துவம் பிரியலை.. பிரியலைன்னு நெறைய பேரு சவுண்டு உடறாங்க.
சில பேருக்கு டவுசர் கிழியுது. சில பேரு பாயை பிரண்டறாங்க.

பின் நவீனத்துவத்துவ கவிதைய பார்த்து பின்னங்கால் பிடறிபட ஓட வேண்டிய தேவையில்லை.
அத எப்படி ஸ்ட்ரெயிட்டா ஃபேஸ் பண்றதுன்றதுக்கு எதோ நம்மால முடிஞ்ச டிப்ஸ்.

1. பேசிக் பாயிண்ட்:பின்நவீனத்துவம் புரியணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா. நீங்க பேசிக் பாயிண்ட்லயே தப்பு பண்ணறீங்க அப்படின்னு அர்த்தம்.
பிரியாம இருக்கறதுதான் பின்நவீனம். பத்து தடவை என்ன பத்தாயிரம் தடவை படிச்சாலும் எந்த கவிதை புரியலையோ அது தான் பின் நவீன கவிதை.
இன்னும் சொல்லப் போனா ஒரு நல்ல ஸ்டாண்டர்டான பின் நவீன கவிதைன்னா அதை எழுதணவங்களுக்கே அது புரிய கூடாது.

ஏன்னா ஒரு உண்மையான கவிதை அப்படின்றது கவிஞனால எழுதப்படுவதில்லை. எந்த கவிதை கவிஞனை எழுதி போகுதோ அதுதான் கவிதை.

அதனால புரிஞ்சிக்கணும்ன்ற ஐடியாவை விடுங்க.

2. கட்டுடைத்தல்:

பின்நவீன கவிதைகள் கட்டுடைக்க வந்த கருவிகள்.
கட்டு்ன்னா கீரைக்கட்டு, விறகுகட்டு அப்படின்னு நினைச்சிடாதிங்க.
கட்டுன்றது இந்த சமுதாயத்தில இருக்கிற அடிமை விலங்குகள்.
சமூகத்தில் வியாதியாய் வியாபித்து விரவியிருக்கும் விலங்குகளை விலக்கியெறிந்து, விழிப்புணர்வை விடுதலையை விழையத்தருதலை கட்டுடைத்தல் என்கிறோம்.
இத்தகு கவிதைகளின் ஆற்றல் அளப்பரியது. ஹார்ஸ் பவரில் அளக்கப்படுவது.

3. கவிதையின் பின் நவீனத்துவ கூறுகள்.

ஒரு கவிதையை பின்நவீனத்துவ கவிதை என அடையாளம் காட்டக் கூடியவற்றைத்தான் பின் நவீனத்துக் கூறுகள் என்கிறோம்.

(அ) ஒலிக் கூறுகள்:ஒலி மூலமாக கவிதையின் பின்நவீனத்துவத்தை உணர்த்துதல்.
(எடுத்துக்காட்டு)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
ஊஊஊஊஊஊஊஊஊஊ...
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...

(ஆ) வினைக்குறிப்புகள்:

அளவுக்கு அதிகமாக வினைச்சொற்களை பயன்படுத்துதல்.

(எ.கா) அதிர்ந்து உலாவி உழாவி உதிர்ந்து உரமான உன் நினைவுகள்.
திணறி திரிந்து திசைமாறி தடம்மாறி தவித்து தத்தளிக்கும் நான்.

(இ) அருஞ்சொல் கூறுகள்.
முன்னே எப்போதும் கேட்டோ படித்தோ இராத வார்த்ததைகளை பயன்படுத்துதல்.
இப்படிப்பட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டால் இருக்கும் வார்ததைகளை புரியாதது போல் எழுதுதல்.
(எ.கா) நிட்சிந்தையிலமென, உள்ளுறைபுயம்,

(ஈ) பிறமொழிக்கூறுகள்:பிறமொழிச்சொல்லை எடுத்தாளுதல்...
(எ.கா) அமானுஷ்யம், விஸ்தாரம், கம்பீரம், அசுவம், சாசுவதம்

அப்பாடா.... இப்படி இருக்கற மேல இருக்கற எல்லா கூறுகளையும்... கூறுகட்டி அடுக்கி நிறுத்தி வர்றதுதான் பின் நவீனத்துவக் கவிதை.

பின்நவீன கவிதையை எதிர்க்கொள்ள இரண்டே வழிதான் இருக்கு.

ஒண்ணு: கவிதைய படிக்காமலேயே நல்ல கவிதை... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுதுன்னு சொல்லி தப்பிச்சிடறது.

இரண்டு: கவி்தைய படிக்கணும்னு முடிவு எடுத்துட்டா டிரவுசர் கிழியாம இருக்கறதுக்காக வேட்டி கட்டிக்கிட்டு படிக்கிறது.

அம்புட்டுதான்.

8 comments:

said...

//பின்நவீனத்துவம் புரியணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா. நீங்க பேசிக் பாயிண்ட்லயே தப்பு பண்ணறீங்க அப்படின்னு அர்த்தம்.//

//இன்னும் சொல்லப் போனா ஒரு நல்ல ஸ்டாண்டர்டான பின் நவீன கவிதைன்னா அதை எழுதணவங்களுக்கே அது புரிய கூடாது.//

//ஏன்னா ஒரு உண்மையான கவிதை அப்படின்றது கவிஞனால எழுதப்படுவதில்லை. எந்த கவிதை கவிஞனை எழுதி போகுதோ அதுதான் கவிதை.//

கவித... கவித...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல ஒரு பின் நவீனத்துவ கட்டுரை, பலக்கட்டுகளை அனாயசமாக உடைக்கிறது, அந்தராத்மாவின் கேவல்களையும், உள்மன வெளியின் கூக்குரல்களையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ஒரு ஜீவனின் சுயவிலாச தேடலின் வடிகாலின் எச்சமாக உங்கள் கட்டுரை உள்ளது.

எனக்கே பிரிஞ்ச பின்னவினத்துவம் உங்களுக்கா புரியாமல் போகும்:-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வவ்வால்...

//அந்தராத்மாவின் கேவல்களையும், உள்மன வெளியின் கூக்குரல்களையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ஒரு ஜீவனின் சுயவிலாச தேடலின் வடிகாலின் எச்சமாக//

எப்படி இப்படியெல்லாம்.
பின்னூட்டத்திலும் பின்நவீனமா பின்றீங்களே :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பின்நவீனத்துவத்தை பின்னிட்டீங்க :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி
//பின்நவீனத்துவத்தை பின்னிட்டீங்க :)//

பின்னிபிணைந்து பிரியாதிருப்பதுதான் பின்நவீவத்துவம். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பின்நவீன கவிதைகள் கட்டுடைக்க வந்த கருவிகள்//

சூப்பரு!
அப்படின்னா ஹாரி பாட்டர் கூட பின்நவீன கதை தானே, தலைவா? :-)

//வியாதியாய் வியாபித்து விரவியிருக்கும் விலங்குகளை விலக்கியெறிந்து, விழிப்புணர்வை விடுதலையை விழையத்தருதலை//

வி..வி....ன்னு விக்கி விக்கி அருமையாச் சொல்லிருக்கீங்க தல!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கே.ஆர்.எஸ்.

//அப்படின்னா ஹாரி பாட்டர் கூட பின்நவீன கதை தானே, தலைவா?//

கிடையவே கிடையாது. ஹாரிபாட்டர் படிச்சா புரியுதே. அது எப்படி பின்நவீனத்துவமா இருக்க முடியும் :))

-------------------------------------------------------------------------------------------------------------