Wednesday, August 29, 2007

பரங்கி மலையில் தெரிந்த ஜோதி

(இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

காட்சி 1:

இடம் : கல்லூரி மாணவர் விடுதி
பாத்திரங்கள்: மாணவர்கள் கல்யாணம், பாண்டி, நாகு, ரெட்டி.

கல்யாணம்: டேய் பாண்டி, நீ நாகு, ரெட்டி மூணு பேருமா எங்கயோ கிளம்பிட்டிருக்க மாதிரி இருக்கு.

பாண்டி: ஆமாடா, நீயும் வர்றியா.

கல்யாணம்: எங்க போறீங்க.

பாண்டி: பரங்கி மலை ஜோதி.

கல்யாணம்: திருவண்ணாமலை தீபம் தெரியும். அது என்ன பரங்கி மலை ஜோதி. பரங்கி மலையில தீபம் ஏத்துவாங்களா என்ன.

நாகு: ம்ம்ம்.. பரங்கிமலையில மெழுகுவத்திதான் ஏத்துவாங்க. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேக்கிறான் பாரு. உனக்கு பரங்கி மலை ஜோதி தெரியாது?

கல்யாணம்: தெரியாதுடா.

பாண்டி: அது ஒரு புனிதத்தலம் உன்னை மாதிரி பக்திமான்கள் ஒரு தடவையாவது அதை விசிட் பண்ணனும்.

கல்யாணம்: அப்படியா.

நாகு: கலாய்க்காத பாண்டி. ஜோதின்றது அந்த மாதிரி படங்களை காட்டற தியேட்டர்.

கல்யாணம்: அந்த மாதிரின்னா..

பாண்டி: ஏய். யப்பா. நீ நல்லவந்தான். ஒத்துக்கறேன். ஓவரா ஆக்டு குடுக்காதடா. நீ பலான படமே பார்த்தது கிடையாது.

கல்யாணம்: ம்கூம். அதெல்லாம் தப்பு.

நாகு: ஏய்.. இவன் ரொம்ப நல்லவண்டா.

பாண்டி: களவும் கற்று மற அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எங்க கூட படத்துக்கு வர்றியாடா.

ரெட்டி: ரா. ரா. மஞ்சி ஃபிலிமு. "கலர்ஸ் ஆஃப் தி லைஃப்". கலர்ஃபுல் ஃபிலிமுரா.

நாகு: ரெட்டி ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்துட்டான். இது மூணாவது தடவை.

பாண்டி: ரெட்டி.. நீ ஜோதி தியேட்டர்க்கு சீசன் டிக்கட்டே வெச்சிருக்கியாமே.

ரெட்டி: லேதுரா. அந்த அபத்தம்.

பாண்டி: சரி. சரி. நம்பறேன்.. கல்யாணம் நீ வர்றியா இல்லையா.

கல்யாணம்: நான் வரமாட்டேன். இது நம்ம கலாச்சாரத்திற்கே விரோதம்.

பாண்டி: இங்க பார்றா நம்ம கலாச்சார காவலரை. உனக்கு பயம் அதனாலதான் வர மாட்டேங்கிற.

கல்யாணம்: பயமா... எனக்கா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.

பாண்டி: அப்ப உனக்கு பயம் இல்லைன்னு ப்ரூவ் பண்ணு.

கல்யாணம்: நான் ஏன் ப்ரூவ் பண்ணனும்.

பாண்டி: ஆம்பிளையா இருந்தா ப்ரூவ் பண்ணு. நூறு ரூபாய் பெட்.

கல்யாணம்: பெட்டெல்லாம் வேண்டாம்.

பாண்டி: அப்ப நீ பயப்படற. தோத்திட்ட. எடு நூறு ரூபாய்.

கல்யாணம்: அதெல்லாம் இல்லை.

பாண்டி: அப்ப வா. தியேட்டருக்கு. பெட்ல ஜெயிச்சினா உனக்கு நூறு ரூபாய்.

கல்யாணம்: (தயங்கியவாறு)... சரி வர்றேன்.

பாண்டி: அது வீரனுக்கு அழகு. உன் கற்பு எல்லாம் போகாது. நான் கியாரண்டி.

(நால்வருமாக கிளம்புகிறார்கள்).





காட்சி 2:
-----------

(படம் பார்த்து முடித்துவிட்டு நான்கு நண்பர்களும் தியேட்டர் வெளியே..)

பாண்டி: கல்யாணம். படம் எப்படிடா இருந்தது.

கல்யாணம்: ம்ம்..

ரெட்டி: ஆக்சுவலி சீன்ஸ் கட். அந்த பாக லேது.

கல்யாணம்: தியேட்டர்ல ஒருத்தர் கால மிதிச்சிட்டேண்டா. அப்புறம் பார்த்தா அது நம்ம லெக்சரர்.

பாண்டி: ஹா.. ஹா..

கல்யாணம்: பார்த்திட்டார்னா தப்பா நினைச்சிக்க மாட்டாரு.

பாண்டி: நாம படம் பார்க்க வந்தோம். அவரு என்ன சாமி கும்பிடவா வந்தாரு. நாம அவரை கண்டுக்க கூடாது. அவரும் நம்மள கண்டுக்க மாட்டாரு. பயப்படாதே.

கல்யாணம்: ம்ம்..

பாண்டி: மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கியே. ஆமா. இப்ப உன் கலாச்சாராம் என்ன ஆச்சு.

கல்யாணம்: ஆக்சுவலி நாம பார்த்தது இங்லீஷ் படம். அதனால நம்ம கலாச்சாரத்துக்கு ஒண்ணும் இல்லை.

பாண்டி: யப்பா.. பெரிய ஆளுடா நீ.

கல்யாணம்: நீ பெட்ல தோத்துட்ட. உனக்குதான் நூறு ரூபாய் நஷ்டம்.

பாண்டி: நூறு ரூபாய் நஷ்டமா... ஹா. ஹா.. நூறு ரூபாய் லாபம்.

கல்யாணம்: எப்படி..

நாகு: நீ படத்துக்கு வரமாட்டேன்னு நான் பாண்டி கிட்ட இருநூறு ரூபாய் பெட் கட்டியிருந்தேன். கவுத்திட்டியேடா.

கல்யாணம்: அடப்பாவிகளா.
-------------------------------------------------

(ஜோதி தரிசனம் முடிந்தது)

3 comments:

said...

லக்கி பதிவில் அனானிக்கு இட்ட பின்னூட்டம்...

இங்கு என் பெயர் குறிப்பிட்ட அனானி அவர்களுக்கு.

தாங்கள் என் பதிவிலும் அனானியாகவே வந்தீர்கள். தங்கள் வார்த்தைகளின் பொருள் எனக்கு சுத்தமாக புரியவில்லை என்றாலும் (சிறிது காலமாக நான் தமிழ்பதிவுகளை வாசிக்காததால்) தங்கள் பின்னூட்டம் யாரையோ (யாரென்றும் தெரியாது) சுட்டுகின்றது என்று கருதியமையாலேயே வெளியிடவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு சார்,

நீங்களும் லக்கி லுக்கும் சேர்ந்து ஜோதி ரசகர் மன்றம் ஆரம்பிங்க.

நான் ஜோதியில் பார்த்த ஒரே படம் மணிரத்தினத்தின் பம்பாய்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோவியாரே...

:)))

சேச்சே... நாமளாவது... இப்படி பட்ட தியேட்டருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறதாவது....

தமிழ்நாடு பூரா ஊருக்கு இப்படி ஒரு தியேட்டர் இருக்கு.

இளைய சமுதாயம் எப்படி இப்படிப்பட்ட தியேட்டர்களை நோக்கி போகுதுன்னு சொல்லணும்னு நினைச்சு அது கதையாயிடுச்சு...

லக்கி சொன்ன மாதிரி... இப்ப இந்த மாதிரி தியேட்டருங்க குறைஞ்சிக்கிட்டு வருது... அட.. நம்மமக்கள் திருந்திட்டாங்களான்ன பார்த்தா...

சிடி... டிவிடி... செல்.. எம்எம்எஸ்ன்னு எங்கயோ போயிட்டாங்க...

நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் இவையெல்லாம் சமுதாயத்துல இலை மறை காய்மறைவா இருந்துகிட்டுதான் இருக்கும் போல.....



-------------------------------------------------------------------------------------------------------------