Monday, August 20, 2007

ஒரு தொண்டன் தலீவனான கதை....

"தலீவா..." மோகன்ராஜ் என்னை எப்பவுமே இப்படித்தான் கூப்பிடுவான்.

"தலீவா.. நம்ப காலேஜ் ஆனுவல் டேக்கு ஒரு கவியரங்கம் நடக்குது. எனக்கு ஒரு கவிதை வேணுமே.".

"கவியரங்கத்துக்கு நீயே சொந்தமா கவிதை எழுதிட்டு போயேன் மோகன்ராஜ்".

"என்ன தலீவா. உன்னோட கவிதை ஒன்னை படிக்கலாம்னு நினைச்சேன். நீ யாரு. வாக்கிங் அண்டு டாக்கிங் டமில் டிக்ஸனரி்".

"ஓட்டாதே. நீ தலையில வைக்கிற ஐஸ்னால எனக்கு ஜன்னியே வந்துடும் போல இருக்கு." கவிதை எழுதி கொடுத்தேன்.

நல்ல குரல் அவனுக்கு. ஏற்ற இறக்கத்தோடு வாசித்து கைத்தட்டல்களை வாரிக் கொண்டான்.

-------------------

"தலைவா. ஒரு பட்டி மன்றம் பேச போறேன். மேட்டரு வேணுமே."

"என்ன தலைப்பு".

"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது சமூக சிந்தனையே."

"நல்ல தலைப்பு".

"அவரோட அச்சமில்லை அச்சமில்லை பாட்டை சொல்லலாமா. நல்ல சமூக சிந்தனை பாட்டு இல்லை".

"அச்சமில்லை அச்சமில்லை பாரதியார் பாட்டு. மோகன்ராஜ்".

--------------------------------------

"தலீவா நம்ப தலைவரோட பிறந்த நாளுக்கு நம்ப கட்சியோட நகர கிளை சார்பா ஒரு மலர் வெளியிடறோம். அதுல போடறதுக்கு ஒரு கவிதை எழுதி தர்றியா."

சில நாட்கள் கழித்து அந்த மலரில் வெளியான அவனது (!!) கவிதையை கொண்டு வந்து காட்டினான்.

------------------------------

"தலீவா. பஸ் ஸ்டாண்டுல நம்ப பேனர் பார்த்தியா."

"இல்லியே மோகன்ராஜ்".

இழுத்து கொண்டு போய் காட்டினான்.

நகருக்கு வரும் கட்சித்தலைவரை இருகரம் கூப்பி மாணவர் அணி செயலாளர் (!!!) மோகன்ராஜ் வரவேற்று கொண்டிருந்தார்.

இவன் எப்போது மாணவர் அணி செயலர் ஆனான் என்று நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

--------------------

துறைத்தலைவர் என்னை அழைத்திருந்தார்.

"என்னடா நினைச்சிருக்கான் உன் ஃபிரண்டு மோகன்ராஜ். நாலு ஆட்டோவில போய் யாரையோ அடிச்சிருக்கான். உனக்கு தெரியுமா ?"
"தெரியாது. சார்".
"இவன மாதிரி ஸ்டூடண்டெல்லாம் நம்ம காலேஜ்ல படிக்கிறாங்கன்னு நினைச்சா.... சே... இதுக்கு மேல இப்படி பண்ணினான்னா சஸ்பெண்டுதான்னு சொல்லி வை.".

"இதை அவனையே கூப்பிட்டு சொல்ல வேண்டியதுதான. நான்தான் கிடைச்சனா." மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

----------

"தலீவா. நம்ம தலைவருக்கு எதிரா போஸ்டர் ஒட்டியிருந்தான் தலைவா அவன். வுடுவனா நானு. பின்னிட்டோம் இல்லை". அடுத்த நாள் மோகன்ராஜ் என்னிடம் அளந்து கொண்டிருந்தான்.
இவனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

--------

கல்லூரி நாட்கள் முடிந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.
அவனைப்பற்றிய தகவல்களோ தொடர்போ இல்லை.
பணிநிமித்தம் பலஇடங்கள் சுற்றிய வண்ணம் நான்.

ஒரு விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது அவனை பார்க்க நேர்ந்தது.
கரைவேட்டிகள் சூழ வீட்டிற்கே வந்திருந்தான்.

"தலைவா. எம்.எல்.ஏ. எலக்சன்ல நிக்கிறேன். மறக்காம ஓட்டு போட்டுடு." மோகன்ராஜ்.

இளங்கவிக்கோ (!!) மோகன்ராஜ் தேர்தலில் போட்டி. பேப்பரில் படித்தது. இவன்தானா அது !!!

"தலிவா. இவர்தான் கவிஞர் காசிமுத்து. நமக்கான கவிதையெல்லாம் இப்ப இவர்தான் எழுதறாரு."

பக்கத்திலிருந்த அந்த கோஸ்ட் ரைட்டரை பார்த்து சிரித்தேன்.

----------

20 comments:

said...

Good One :)
I am the firstu

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலீவா...கதை நல்லா இருக்கு ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி இம்சை :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றாக உள்ளது - நல்ல நகைச்சுவை - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி. கோபிநாத்.

இதுகிட்டத்தட்ட உண்மைக்கதை. :)

//நன்றாக உள்ளது - நல்ல நகைச்சுவை //

நன்றி நாகூர் இஸ்மாயில். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலீவா..... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தலீவா..... :)// அனானிக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலீவா... நம்ம ரகசியத்தையெல்லாம் இப்படி பப்ளிக்கா உடைச்சிட்டீங்களே. நியாயமா ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மோகன்ராஜ் !!!!!??????
:))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இளங்கவிக்கோ (!!) மோகன்ராஜ் தேர்தலில் போட்டி//

என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//வாக்கிங் அண்டு டாக்கிங் டமில் டிக்ஸனரி்//

:-))

ஒரு வருங்கால எம்.எல்.ஏவை, அமைச்சரை, இப்படி ஊர் அறியச் சிறுமைப்படுத்திட்டீங்களே அரைபிளேடு! இளங்கவிக்கோ இருமுவது சாரி பொருமுவது கேட்கலையா? :-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள...

//என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //

தல... அது நீங்க இல்லை தலை.

நம்ம நாட்டு ஜனாதிபதி தேர்தல்ல நிக்க தகுதி இருக்கற உங்கள போயும் போயும் எம்.எல்.ஏ. எலக்சனுக்கு நிறுத்தி கதை எழுதுவனா என்ன :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கே.ஆர்.எஸ்.

//ஒரு வருங்கால எம்.எல்.ஏவை, அமைச்சரை, இப்படி ஊர் அறியச் சிறுமைப்படுத்திட்டீங்களே//

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே சிறுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டமுடியாது. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இளங்கவிக்கோ மோகன்ராஜ் எம்.எல்.ஏ. ஆனாரா. .. ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இளங்கவிக்கோ மோகன்ராஜ் எம்.எல்.ஏ. ஆனாரா. .. ?
//

அனானி... இன்னாபா.. இப்படி கேட்டுட்ட..? இளங்கவிக்கோவாவது எலக்சன்ல தோக்கறதாவது.. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அரை பிளேடு said...
நன்றி. கோபிநாத்.

இதுகிட்டத்தட்ட உண்மைக்கதை. :)
///
நீங்க தானே அந்த இளங்கவிக்கோ?? :-P

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சி.வீ.ஆர்.

//நீங்க தானே அந்த இளங்கவிக்கோ?? :-P //

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நாம யாரு. இளங்கவிக்கோ யாருன்றததான் கதையில தெளிவா சொல்லியிருக்கோமே :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட்றஸ் கிடைச்சிருச்சி. ஆட்டோ வந்துகிட்டேயிருக்கு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இளங்கவிக்கோ குண்டர் படை !!!

வருக. வருக. :))