உனது இதழ் சிந்தும்
புன்னகையை பார்க்க
இன்ஸ்டால்மென்டில் டீவி
வாங்கினேன் நான்...
என்னை பார்க்காது
டீவியை பார்க்க தொடங்கினாய் நீ...
கணவருக்காக..
தொடர் ஓடிக்கொண்டிருந்தது..
எனக்கான சாப்பாடு
குளிர் சாதனப் பெட்டிக்குள்
நேற்று சமைத்தது.
இன்று முழுவதும் நாம்
பேசிய வார்த்தைகளை
எண்ணி பார்க்கிறேன்.
இருபது கூட தேறவில்லை.
இருவருக்கும் இடையில்
டீவி மட்டும் பேசிக்கொண்டிருந்தது.
மீண்டும் ஆரம்பித்தாய்..
புலம்பல் பெருங்கதைகள்..
மறுஒளிபரப்பு.
தொலைக்காட்சியில் சத்தம்
என்றால் ம்யூட் செய்யலாம்..
மனைவியை என்ன செய்வது.
Tuesday, January 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
எத்தனை கணவர்களின் புலம்பல்களோ !! கேட்கப் படாமல் போகிறதே:-)
திண்மையான வரிகள்.
-------------------------------------------------------------------------------------------------------------
//மனைவியை என்ன செய்வது.//
'அரை பிளேடால்' குறல்வலையை ஒரு அறு அறுத்துடங்க ஐயா!
கையில வெண்ணைய வெச்சிக்கினு நெய்யிக்கு அலையறீங்களே!!!
மத்தபடி கவிதைய கொஞ்சம் தேவலாம்.
நீர், ஆணாதிக்க பேர்வழியோ?
மாசிலா.
-------------------------------------------------------------------------------------------------------------
மனைவியை என்
செய்வது?//
ஒட்டுமொத்த கணவன்மார்களின் கேள்வியை தனியொரு ஆளாகக் கவுஜையாகத் தந்த கண்மணியே வாழ்க!
சாத்தான்குளத்தான்
-------------------------------------------------------------------------------------------------------------
//
தொலைக்காட்சியில் சத்தம்
என்றால் ம்யூட் செய்யலாம்..
மனைவியை என்ன செய்வது.
//
எனக்கும் அதே கேள்விதான், விடை தெரியுமா ?
அருமையான கவிதை.
- உண்மை
-------------------------------------------------------------------------------------------------------------
:)
ஒன்ஸ் மோர்.
-------------------------------------------------------------------------------------------------------------
புலம்பல்களை செவிமடுத்தமைக்கு நன்றி வல்லி சிம்ஹன் அவர்களே :)))
-------------------------------------------------------------------------------------------------------------
வருக மாசிலா அவர்களே..
குரல்வளையை அறுக்கறதா... நாம ஒரு மொக்கையான அப்பாவி பிளேடுங்க அய்யா...
ஆணாதிக்க பேர்வழியா நானா !!!
ஆணுக்கும் சமஉரிம வேணும்னு குரல் வுட்டுக்னு இருக்கற அபலனான ஆண் அய்யா நான்...
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
வருக சாத்தான்குளத்தாரே...
கவிமடத்தலைவரே நமது கவிஜய பாராட்டுராருன்னா.. ஆகா... நம்ம கவிஜைக்கு எவ்வளவு பெரிய கவுரதை...
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
அ.பி,
/*தொலைக்காட்சியில் சத்தம்
என்றால் ம்யூட் செய்யலாம்..
மனைவியை என்ன செய்வது */
விவாக ரத்து இருக்கிறதே!:)
-------------------------------------------------------------------------------------------------------------
வருக அனானி
//எனக்கும் அதே கேள்விதான், விடை தெரியுமா ?//
நண்பர் (பழுத்த அனுபவஸ்தர்) சொன்னார்...
"பொண்டாட்டி வாய மூடலைன்னா இன்னாய்யா... நீ காதை பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..."
சரிதான்னு எனக்கு தோணுது.. :))
-------------------------------------------------------------------------------------------------------------
புலம்பலுக்கு ஒன்ஸ்மோர் கேட்கும் சிறில் அலெக்ஸ் அவர்களே..
புலம்பல்கள் ஓய்வதில்லை...
ம்ம்ம்ம்ம்ம்ம்....
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க வெற்றி...
//விவாக ரத்து இருக்கிறதே!:)
டீவிய ம்யூட்தான் செய்கின்றோம். டீவியே வேணாம்னு சொல்றதில்லையே...
அந்த மாதிரி மனைவிய ம்யூட் பண்ண ஏதாவது ஆப்ஷன் இருக்கா...
நண்பர் சொன்னா மாதிரி... காதுல பஞ்சு.. அவ்வளவுதான்...
"நான் சொன்னது கேட்டதா" அப்படின்னு இரண்டு மூணு முறை கேட்கறப்பா எல்லாத்துக்கும் தலையாட்டுற மாதிரி என்ன கேக்குறாங்கன்னே தெரியாம அதுக்கும் தலையாட்டி வெச்சா தீர்ந்தது பிரச்சனை...
ஆனாலும் ஒரு மனுசன் எவ்ளோ நேரம்தான் தலையாட்டுறது... :))
-------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து பட்டாசு கெளப்பிட்டே இருக்கீங்க...
அப்பாலிக்கா... புது பொலிவு சூப்பர். அதுலையும் அரை ப்ளேடு லோகோ அசத்தல்...

Post a Comment