Saturday, January 20, 2007

இது ஒரு ஜல்லி பதிவு..

ஜல்லி என்றால் என்ன ?

ஜல்லி என்பது கட்டடம் கட்ட தேவைப்படும் ஒரு மூலப்பொருள்.
இது கருங்கல் பாறைகளை உடைத்து உருவாக்கப்படுகிறது. (பார்க்க படம்)

இதுதான் ஜல்லி

ஜல்லி எத்தனை வகைப்படும் ?

1. அரை ஜல்லி. (கான்கிரீட் தளங்களில் பயன்படும்)
2. முக்கா ஜல்லி (ரோடுகள் போட பயன்படும்)
3. முழு ஜல்லி. (இதுபோன்ற பதிவுகள் போட பயன்படும்.)

அரைஜல்லி: ஒரு லோடு ஜல்லிக்கு ஒரு கையளவு ஜல்லி பதம்.

முக்கால்ஜல்லி:

ஜல்லி அடிப்பது எப்படி ?

ஜல்லி அடிப்பது ஜல்லியின் அளவை பொறுத்தது.
மிக குறைந்த அளவு என்றால் ஒரு தாலா போதும்.
சற்று அதிக அளவிற்கு என்றால் ஒரு மாட்டு வண்டி.
மிக அதிக அளவில் தேவையானால் ஒரு லாரி.

கப்பலில் ஜல்லியடித்தல்.

ஜல்லியின் பயன்: ரோடு

ஜல்லியின் பயன்: ரயில்ரோடு.

ஜல்லியின் பயன்கள் என்ன என்ன ?

1. கான்கிரீட் தளங்கள் அமைக்கலாம்.
2. ரோடுகள் போடலாம்.
3. ரயில்ரோடுகளில் பயன் படும்.
4. மிக முக்கியமான பயன் நான் சொல்லித்தான் தமிழ் பதிவர்களுக்கு தெரிய வேண்டுமா என்ன ? :)

26 comments:

said...

நமக்கு ஒரு லோடு முழுஜல்லி அனுப்புங்க சாமி. அதுல இலவச ஜல்லி, ஒரு லோடு ஜல்லி வாங்குனா ஒரு லோடு ஜல்லி இலவசம் அப்படின்னு ஆபர் எதுனா இருக்குங்களா? :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க இலவசக்கொத்தனாரே...

அனுமாருக்கே ஹைஜம்பா ?
சூரியனுக்கே டார்ச்லைட்டா ?

கொத்தனாருக்கே ஜல்லியா ?

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தலீவா

நான் அடுத்த பதிவுக்கு யோசிச்சு வச்சிருந்த மேட்டர்ல நீங்க முந்திகிட்டீங்களே :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கப்பியாரே..

ஆகா நீங்களும் ஜல்லி லோடு ரெடி பண்ணியிருக்கீங்க போல. நாம முந்திட்டமா. சரி அதனால என்ன.

ஜல்லி என்ன தனியுடமையா..
அது பொதுஉடம...

யாரு வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் அடிக்கலாம் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆம்! இது உண்மையிலேயே ஜல்லிப் பதிவுதான்!

(நமக்கும் அரை லோடு பார்சல்)

:))

ஆனாலும் நிறைய உபயோகமான தகவல்கள். (இது ஜல்லிப் பின்னூட்டம் அல்ல)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரு நல்ல ஜல்லிப் பதிவுக்கு இதுவரை 5 பின்னூட்டங்கள்தானா? இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க நாமக்கல் சிபியாரே..

அரைலோடு பார்சலுக்கு டோக்கன் வாங்கிகொண்டு வரவும். :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்தனார்ஜி..

விடுமுறை நாட்களில் ஜல்லி சர்வீஸ் அதிகம் கிடையாது. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜல்லின்னா ஜல்லிக்கல்லு சரி.

அப்ப "ஜல்லி"க்கட்டு அப்படின்னா ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி,

என்ன கேள்வி இது, அதான் பிளேடார் சரியாச் சொல்லி இருக்காரே.

//1. கான்கிரீட் தளங்கள் அமைக்கலாம்.
2. ரோடுகள் போடலாம்.
3. ரயில்ரோடுகளில் பயன் படும்.//

இப்படி ஜல்லியால் கட்டப்படும் அனைத்துமே ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும்.

இது விதிமுறைகளை மீறி கட்டப்படும் பொழுது கோர்ட் கேஸ் ஆகிறது. அதனால்தான் பல முறை ஜல்லிக்கட்டுக்கு முன் கோர்டில் போய் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது.

(பிளேடு, நம்ம துறை சார்ந்த கேள்வி. அதான் நானே பதில் சொல்லிட்டேன். அதுவும் இந்த விக்கி பசங்க ஆரம்பிச்சதுலேர்ந்து கேள்வியைப் பார்த்தாலே பதில் சொல்லணுமுன்னு ஒரு பழக்கமாவே போச்சு!)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் கொத்தனாரே..

நான் என்னமோ.. ஜல் ஜல்னு காளைங்க ஓடி வர்றதுனாலே ஜல்லிக்கட்டோ அப்படின்னு நினைச்சேன்.

யாருக்கும் அடங்காம ஜல்லியடிக்கற மாட்டை கட்டி போடுறதால ஜல்லிகட்டோ அப்படின்னு இன்னோரு யோசனை கூட வந்திச்சு.

நீங்க சொன்னா மாறி முறைகேடான ஜல்லி. கோர்ட் அப்படின்ற ஆங்கிள்ள பார்த்ததும்தான் மேட்டரு புரியரா மாறி கீது.

அனானி புரிஞ்சிருச்சா..

:)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜல்லிக்கட்டுக்கு நமக்கு கிடைச்ச கிளாரிஃபிகேஷன்.

ஜல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையம். பெரும்பாலும் புளியவிளாரினால் செய்யப்பட்டது. இதில் வண்ணம் தீட்டி இதில் பணம் காசு நகையை கட்டி வைப்பர். வீரத்தோடு மோதி இந்த ஜல்லி கட்டை கையில் எடுப்பதுதான் ஜல்லிகட்டு.

அப்பா ஜல்லி பதிவுல உருப்படியான ஜல்லி. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு.. பிளேடு போடுறதுன்னா உங்களுக்கு சொல்லியா தரனும்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆஹா..ஆஹா..ஆஹா..ஆஹா...

(பருத்திவீரன் 'டங்கா துங்கா' பாட்டுல கார்த்திச் சொல்ற மாதிரி சொல்லணும் என்ன...)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இடுகை தொடர்பான ஒரு கேள்வி!

ஜல்லிக் காசுப் பெறாதவன் - எனத் திட்டி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஜல்லி விலைக் கம்மியோ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கார்த்திகேயன்.

இது பிளேடு இல்லை. ஜல்லி :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜி..

சொல்லிட்டா போச்சு. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க முகில்.

சல்லி வேறு. ஜல்லி வேறு.

ஜல்லி என்பது கல்.
சல்லி என்பது சில்லறை.

சல்லி குறித்த எனக்கு கிடைத்த விளக்கம் இதோ. தங்களுக்காக.

----------------
'சல்லி' என்னும் சொல் ஒரு சிறு நாணயத்தைக் குறிக்கும்.
பழங்காலத்தில் பலவகையான நாணயங்கள் தமிழர்களிடையே
புழங்கின.
முகலாயர்/மராத்தியரைத் தொடர்ந்து ஆங்கிலேயர் செல்வாக்கு
ஏற்பட்ட சமயத்தில் ரூபாய் என்னும் நாணயமே முக்கியமாக விளங்கலாயிற்று.
'ரூப்யா' என்பது அழகிய, வெண்மையான, என்ற பொருளைக்
கொண்டது. வெள்ளியைக் குறிக்கும்.
வராகன், மோஹர் என்னும் மொஹரா, பகோடா ஆகிய நாணயங்கள்
பொன்னால் ஆனவை.
வெள்ளிநாணயம் வந்து அவற்றின் புழக்கத்தை வெகுவாகக் குறைத்து
விட்டது. அதுவே Standard Currncy-யாக மாறிக்கொண்டுவிட்டது. ரூபாய் -
அணா - பைசா என்பது புதிய நாணயமுறையாக ஏற்பட்டது.
ஏற்கனவே புழங்கிக்கொண்டிருந்த பழைய நாணயவகைகளாகிய
'பணம்', துட்டு', 'காசு', 'தம்பிடி', 'சல்லி' முதலியவை ரூபாயுடன் இணைக்கப்
பட்டன.
ஒரு ரூபாய் = 16 அணா
ஓர் அணா = 12 பைசா

இந்த நாணயமுறையில் 'காசு', 'துட்டு', 'பணம்' ஆகியவையும்
இணைக்கப்பட்டன என்று சொன்னேன்.
ஒரு பணம் = 2 அணா
இதை அரைக்கால் ரூபாய் என்றும் சொல்வார்கள். ஆரம்பத்தில்
இது வெள்ளி நாணயமாக இருந்தது. இதுதான் வெள்ளி நாணயங்களிலேயே
மிகச் சிறியது.
ஓர் அணா = 3 துட்டு
ஒரு துட்டு = 4 பைசா

துட்டையும் 'காசு' என்று அழைத்திருக்கிறார்கள். 'டப்பு' என்றும் அழைத்தார்கள்.
'டப்பு' என்பது விஜயநகரப் பேரரசில் புழங்கிய செப்பு நாணயம்.

பைசாதான் ஆங்கில இந்திய நாணயங்களிலேயே மிகச் சிறியது.
இதனை 'சல்லி' என்றும் 'தம்பிடி' என்றும் அழைத்தார்கள். செப்பு நாணயம்.

மிகச் சிறிய சில்லறையைக் குறிக்க 'சல்லி' என்ற பெயரைப்
பயன்படுத்தினார்கள்.
'சின்னத்தனம்', 'சில்லறைத்தனம்' ஆகியவற்றையும் குறிக்க
அச்சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

-----

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்கள் சல்லிக்கு கொடுத்திருக்கும் விளக்கம் வாசித்து புதிதாய் சில்துகலைத் தெரிந்து கொண்டேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக சோமி..

ஜல்லி பதிவில் நமது சல்லிசான விளக்கங்கள் தங்களுக்கு புதிதாய் இருந்ததில் மகிழ்ச்சியே. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சங்கத்தின் முன் அனுமதியில்லாமல் உறுப்பினர் ஆகாமல் இங்கு லோடு லோடாக ஜல்லி அடிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கிறோம்.

-ஜல்லி லோடு அடிப்போர் சங்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னடா நம்ம சல்லித்தனமா கேட்டுட்டோமே நினைச்சேன்... கலக்கிடீங்க போங்க ;-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி..
ஜல்லியடிப்போர் சங்கமா அது எங்க இருக்கு ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி,

இன்னா புச்சா பிளாக் மாத்தியாச்சா??? அதுக்காக இப்பிடி விளக்க ஜல்லியா???

(P.S :- உங்களுக்கு முன்னாடியே நான் அடிச்சிட்டேன் ஹி ஹி)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்ம புது பிளாக்கை கண்டுக்னதுக்கு தாங்ஸ் இராம்.

சும்மா இந்த போஸ்ட்ல ஏகப்பட்ட ஜல்லியை எடுத்து ஸ்டாக் வெச்சிருக்கேன். தேவைப்படறப்ப இங்க இருந்து எடுத்து போஸ்ட் போடலாம் பாருங்க.

:))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆகா ஜல்லி அடிக்கறது பத்தி என்னமா ஒரு பதிவு... :-)

//அனுமாருக்கே ஹைஜம்பா//

சூப்பர்... :-)