Tuesday, March 11, 2008

பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.

செய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.

----------

ஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.

கலைஞர் கடிதம்: உடன்பிறப்பே. கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன. பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். டெல்லி எருமைகள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய். பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது. இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை. பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.

--------

குமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.

கல்யாணமான புதிதில் கணவன்:
கமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.

--------

தலைவரே. உளர்றத நிறுத்துங்க. பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம். ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.

---------

ஆசிரியர்: நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.
மாணவன்: ரொம்ப தாங்ஸ் சார்.

--------

பந்தியில்:

அது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே. நெய்யா?

இல்லை. பால் பாயாசம்.

-----

பால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.

ஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.

----

13 comments:

said...

ஆனால், சென்னையில் 4 ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

2 ரூபாயோ அல்லது 4 ரூபாயோ உங்கள் பதிவின் உள்ளடக்கம் (செய்தி பகுதியைத் தவிர) மாறாது :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

யாஹூ... He is Back...-------------------------------------------------------------------------------------------------------------
said...

குமுதம், ஆனந்த விகடன் ஜோக்ஸ்... ஒட்டு மொத்த குத்தகைக்கு நம்ம எடுத்துறலாம் தலை...

ஜோக்கு எல்லாமே ரெம்ப சூப்பரா இருக்கு. உங்க ரசிகனாயிருக்குறத எண்ணி ரெம்ப மகிழ்ச்சியடைந்தேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

பால்விலை ஏறுவது சென்னை நாயர் கடைகளுக்குத்தான் கொண்டாட்டம்

ஒரு லிட்டர் பாலில் 4 லிட்டர் தண்ணீர் ஊற்றி (எடை கட்டுவதாம்) 500 டீ போட்டுவிடுவாங்க, டீ வெல ரூ 3 இருந்தது இப்போ 4 ரூ ஆகும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\கல்யாணமான புதிதில் கணவன்:
கமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.\\

சூப்பர் தல ;)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

இது கார்டு உள்ளவர்களுக்கான ஆவின் பால் விலை மட்டுமே. கார்டு இல்லாமல் பால் விலை மிக அதிகம்.

தனியார் நிறுவன பால் விலை (ஆரோக்கியா பால் வகையறா) இன்னும் அதிகமாக இருக்கும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கருப்பன்.

கோக்கு மாக்கா யோசிச்சா அதுதான் ஜோக்கு :)

இந்த ஜோக்கெல்லாம் உங்களுக்கு பிடிச்சிருக்கிறதை நினைச்சு நானும் மகிழ்ச்சியடைகிறேன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோவி

நாயர் கடையில மட்டுமா விலை ஏறும்.

சரவணபவன்ல ஏற்கனவே காபி 10 ரூபாய் இருக்கும். இனி 15 ரூபாய்தான்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத் :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

Arumai Arumai...-------------------------------------------------------------------------------------------------------------
said...

பெண் பார்க்குமிடத்தில்:
ஏன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொம்போட வந்திருக்காங்க??
பொண்ணுக்கு பால்வடியும் முகமாமே...
--------------------------------------

தங்கள் வலைப்பூவுக்கு அடிக்கடி வருகைதந்து இது கூட கற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப நல்ல மேட்டர் சொல்லிகிறீங்க. ஜோக்ஸ் எல்லாம் ஆடு சூப்பர்.கலக்கு மாமே -பிளேடு பக்கிரி-------------------------------------------------------------------------------------------------------------
said...

jokes super-------------------------------------------------------------------------------------------------------------