எனக்கு தெரியாது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளிடம் காணும் மாற்றங்கள் நான் அறியாதது இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறாள். எப்போதையும் விட என் மீது அதிகப் பிரியமாக இருக்கிறாள். எனக்கு பிடித்த உணவுப் பொருட்களாக சமைக்கிறாள். நான் அலுவலகம் செல்லும்போது ஆவலோடு கதவு வரை வந்து வழியனுப்புகிறாள். இந்த மாற்றங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதும் நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வைத்துவிடுவதும், அழைத்த தோழியிடம் தான் பிறகு பேசுவதாக சொல்வதும்.
இணையத்தில் அதிக நேரம் மூழ்கி இருக்கிறாள். எனக்கு தெரிந்திருந்த அவளுடைய மின்னஞ்சலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டாள். ஆயிரம்தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மின்னஞ்சலில் ஒரு பிரைவசி வேண்டும் என்று அவள் சொன்னபோது தலையாட்டினேன்.
என்னுடைய மின்னஞ்சலின் அவள் அறிந்த பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. அவளுடைய மாற்றங்கள் ஆச்சரியமளித்தன.
அன்று. வெளியே செல்வதற்கு தயாராக அவள் குளிக்க சென்றாள். எனது மின்னஞ்சலை பார்க்க கணிணியில் அமர்ந்தேன் நான். அவளது மின்னஞ்சல் கணக்கு லாக் அவுட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. லாக் அவுட் செய்யப்போந்தவனை அந்த மின்னஞ்சலின் தலைப்பு இழுத்து நிறுத்தியது. "வித் கிஸ்ஸஸ்".
எனது மனைவி தன் கைப்பட அனுப்பிய மின்னஞ்சல். முகவரியை பார்த்தேன் எனக்கு முற்றிலும் தெரியாத பெயர்.
ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்... பதில் மின்னஞ்சல்கள்.. "எப்படியிருக்கிறாய் கண்ணா.." .. "நீ அனுப்பிய உனது புகைப்படங்களில் நீ அழகாக இருக்கிறாய்.".. "அச்சச்சோ தனிமையில் ரொம்ப கஷ்டப்படுகிறாய் போலும்"..... "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்.." "உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்." "உம்ம்ம்ம்ம்ம்மாாாாாா"... "வித் கிஸ்ஸஸ்"...
ஒன்றிரண்டு படிக்கவும் வெலவெலத்துப் போனேன். என் அன்பு மனைவியா இப்படி. உன் அன்பு எல்லாம் வேஷமா..
எது உன்னை இவ்வாறு செலுத்தியது. அமைதியாக கணினியை விட்டு விலகினேன். அவள் குளித்து ஒப்பனை முடித்து வந்தாள். நான் எதுவும் பேசவில்லை. வெளியே சென்றோம். உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் உணவருந்தினோம். மகிழ்ச்சியாக இருந்தாள். உள்ளுக்குள் நான் நொறுங்கியிருந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனது மகிழ்ச்சி தொலைந்திருந்தது.
அடுத்த சில நாட்களில் தனியார் துப்பறியும் நிறுவனம். தொலை பேசி எண்களை சரிபார்த்தேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அதிக அளவு தொலைபேசப்பட்டிருந்தது. அந்த எண்ணின் உரிமையாளனின் பெயர் மின்னஞ்சலின் அதே பெயர்.
துப்பறியும் நிறுவனத்தின் முழுவிவரம் வந்தது. அவர்கள் இருவருமாய் சிரித்தபடி இருந்த புகைப்படங்கள். அவன் என் மனைவியின் காதலன் கல்லூரி காலத்தில் இருந்து. கல்லூரி முடித்து அவனுக்கு வேலை கிடைக்காத நிலையில் வீட்டினர் காதலை எதிர்த்த நிலையில் அவனை உதறி என்னை மணந்திருந்தாள். இது எனக்கு தெரியாதது. இன்று அவன் வாழ்க்கையில் சற்று உயர, எங்கள் தனிக்குடித்தனம் சகல வசதிகளையும் தர, அவள் வாழ்வில் மீண்டும் அவன்.
மொத்தமாய் நொறுங்கியிருந்தேன். ஆத்திரம் வந்தது. ஆனால் என்ன செய்ய.
1. அவளை அடிக்கலாம். நொறுக்கலாம். வழிக்கு கொண்டு வரலாம். சே. ஒரு எறும்பை கூட மிதித்திராத எனக்கு இப்படி ஒரு எண்ணமா.
2. அன்பாய் பேசி வழிக்கு கொண்டு வரலாம். இத்துணை நாள் நான் செலுத்திய அன்பு நம்பிக்கை அனைத்தும் உடைந்த நிலையில்............. மேலும் அன்புக்கு எங்கு செல்வேன்.
3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி அவளை விலக்கி என் வாழ்க்கைப் பாதையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவள் மேல் நான் கொண்ட அன்பால் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. அவளை பிரிவதை என்னால் தாங்க முடியாது.
4. பேசாமல் நான் இறந்து விடலாம். அவளிற்கு என் மீது அன்பு இல்லை என்ற நிலையில் நான் வாழ்வதில் பயனில்லை.
ஒரு மூலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என் சடலத்தின் மீது மாலைகள் குவிந்திருந்தன. அவள் அழுது கொண்டிருப்பதாக தோன்றியது. யார் யாரோ வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.
அதோ அது அவன்தான். சந்தேகமில்லை. அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் முகத்திலும். இருவருடைய பார்வையில் இருப்பது... சீ... சீ... இது நிச்சயமாய் காதலில்லை.
மேற்கொண்டு என்னால் பார்க்கமுடியவில்லை.
வெளியேறிக்கொண்டிருந்தேன் பெரும் சூன்ய வெளியை நோக்கி மிதந்தவாறு.
Tuesday, November 20, 2007
Sunday, November 18, 2007
கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...
நல்ல மத்தியான நேரம். கோடம்பாக்கம் ரயில்நிலையம். கிளம்பவிருந்த ரயிலில் ஓடிவந்து ஏறினாள் அவள். மதியநேரம் காலியாக இருந்த அந்த ரயில் பெட்டியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் இருந்தான்.
அவன் தன்னையே பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு. அவனது பார்வை பல இடங்களிலும் ஓடுவதாக உணர்ந்தாள். அமைதியாக ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞனை பார்த்தாள். அவன் தொடர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். நல்ல உயரம். மாநிறம். பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.
அவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
"எங்க படிக்கிறீங்க. கோடம்பாக்கம் மீனாட்சி லேடீஸ் காலேஜா."
"ஆமா. எப்படித் தெரியும்."
"கோடம்பாக்கம் ஸ்டேசன்ல ஏறியிருக்கீங்க. ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க. பக்கத்துல இருக்கிற பெண்கள் காலேஜ்னா மீனாட்சி காலேஜ்தான். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்."
"ரயிலில ஏறுற பொண்ணுங்க எல்லாம் எந்த காலேஜ்னு கண்டு பிடிச்சு சொல்லுறதுதான் உங்க வேலையா."
"சே. சே. அப்படியில்லை. நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் ஒரு துப்பறியும் நிபுணன். உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தெரியுமில்லையா. அந்த மாதிரி."
'ரியலி".
"எஸ். பவர் ஆஃப் டிடக்சன். சூழ்நிலைகள ஆராய்ஞ்சு கிடைக்கிற தடங்களை வெச்சு ஒருத்தரை பத்தி கரெக்டா சொல்லிடலாம். உதாரணத்துக்கு நீங்க கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர் படிக்கிறீங்க. கரெக்டா."
"கரெக்ட். என் புத்தகத்தை பார்த்து சொல்லியிருப்பீங்க."
"ஆமா. நீங்க தாம்பரம் போறீங்க. சரியா."
"எப்படி சொல்றீங்க."
"உங்க சீசன் டிக்கட்டை பார்த்தேன்."
"அவ்வளவு தூரத்துல இருந்து என் சீசன் டிக்கட்டை எப்படி படிக்க முடிஞ்சது."
"ஒரு துப்பறியும் நிபுணனுக்கு ரொம்ப தேவையானது பார்வைத் திறன். தட்ஸ் இட். இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்சாம் முடிச்சிட்டு வர்றீங்க. கரெக்டா."
"அமேசிங். எப்படி கண்டுபிடிச்சீங்க."
"உங்க கிட்ட இருந்து வர்ற கந்தக அமிலத்தோட வாசனை. அது நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து வர்றீங்கன்னு சொல்லுது. இது எக்சாம் டைம். காலேஜ் டைமுக்கு முன்னாடியே வீட்டுக்கு திரும்பறீங்கன்னா பிராக்டிகல் எக்சாமாத்தான் இருக்கணும்."
"வாவ்".
"உங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்காரு. அம்மா கிடையாது. அப்பாவுக்கு கவர்ன்மெண்ட் வேலை. ஸ்கூல் போகிற ஒரு தம்பியோ இல்லை தங்கச்சியோ இருக்காங்க".
"தம்பியும் அப்பாவுந்தான் இருக்காங்க. அம்மா இல்லை. ஆனா எப்படி கண்டு பிடிச்சீங்க".
" உங்க வலது கையில இருக்கிற சூடு சமைக்கறப்ப வச்சிகிட்டதா இருக்கணும். எக்சாம் டைம்லயும் நீங்க சமைக்கறீங்கண்ணா... அப்புறம் உங்க கண்ணுல இருக்க அந்த சோகம். உங்க அம்மா சமீபத்திலதான் தவறியிருக்கணும்னு நினைக்கிறேன்."
"ஆமா." கொஞ்சம் சோகமானவள் "கவர்ண்மென்ட் வேலையில அப்பா, ஸ்கூல் போற தம்பி எல்லாம் எப்படி கரெக்டா சொன்னீங்க."
"நீங்க வெச்சிருக்கிற நோட் புக், பேனா இரண்டும் கவர்ண்மென்ட் ஆஃபீசுல பார்த்திருக்கேன். இதை நீங்க யூஸ் பண்றீங்கண்ணா.. அப்பா கவர்மெண்ட் வேலையில இருக்கணும்."
சிரித்தாள்.
"அப்புறம் உங்க இடது கைவிரல்கள்ல கண்ணு மூக்கு வச்சு பொம்மை வரைஞ்சிருக்கு. காலேஜ் போற பொண்ணு கையில இப்படி எதாவது இருக்குன்னா, இந்த மாதிரி வரைஞ்சிவிட ஸ்கூல் போகிற மாதிரி தம்பியோ தங்கச்சியோ இருக்கணும்.".
"வாவ். எல்லாமே கரெக்ட். நீங்க நிஜமாவே துப்பறியும் ஜீனியஸ்."
"தாங்ஸ்".
"உங்களைப் பத்தி நான் சொல்லவா. யூஸிங் த சேம் பவர் ஆஃப் டிடக்சன்".
"ரியலி. சொல்லுங்க பார்ப்போம்.".
"முதல்ல நீங்க ஒரு துப்பறியும் நிபுணர் இல்லை. இரண்டாவது நீங்க அசோக் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர். மூணாவது நீங்க எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை".
"எப்படி கண்டுபிடிச்சீங்க. உங்க போட்டோவைதான் உங்க அப்பா கொடுத்தாரே தவிர என்னோட போட்டோவை நான் தரவேயில்லையே."
"அசோக் நகர் எஸ்.ஐ. அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு. நீங்கதான் லேட்."
சிரித்தான். "உங்க அப்பா உன்னை பத்தி எல்லாமே சொன்னாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் கதைகள் உனக்கு பிடிக்கும்னு சொன்னார்".
"அதையெல்லாம் வச்சிக்கிட்டுதான் புதுசா கண்டுபிடிச்சா மாதிரி கதை விட்டீங்களாக்கும். நீங்க இன்னைக்கு காலையில இருந்து என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியும்."
சிரித்தான் "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா."
இவ்வளவு நேரம் படபடவென பேசிக் கொண்டிருந்தவளிடம் மெளனம். தலைகுனிந்தவாறு சொன்னாள் "பிடிச்சிருக்கு.."
அவன் சிரித்தான். அவளும். ரயில் இந்த காதல் நாடகத்தை பாராதது போல் ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, November 15, 2007
ஆஃபீசா இல்லை ஜெயிலா.. எது சிறந்தது?
சிறைச்சாலை மற்றும் அலுவலகம். ஒரு ஒப்பீடு.
ஜெயில் என்பது பெரும்பாலும் 8 x 10 அடியாவது உள்ள அறை.
அலுவலகம் என்பது 6 x 8 அடி மட்டுமே உள்ள க்யூபிக்கிள். (தடுப்பு)
ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்.
ஆஃபீசில் ஒரே ஒரு உணவு இடைவேளை. அந்த உணவுக்கும் நாம்தான் காசு தரவேண்டும்.
ஜெயிலில் நன்னடத்தைக்கு ஜெயில் காலம் குறைக்கப்படும்.
ஆஃபீசில் நன்னடத்தைக்கு அதிக வேலைநேரம் கிடைக்கும்.
ஜெயிலில் காவலாளிகள் நமக்காக கதவுகளை திறப்பர். பூட்டுவர்.
ஆஃபீசில் கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக்கொண்டு கதவுகளை நாம்தான் திறக்கவேண்டும்.
ஜெயிலில் டிவி பார்க்கலாம். விளையாடலாம்.
ஆஃபீசில் டிவி பார்த்தாலோ விளையாடினாலோ வெளியேற்றப்படுவோம்.
சிறையில் ஒவ்வொரு செல்லிலும் தனிக் கழிப்பிட வசதி.
ஆஃபீசில் பொதுகழிப்பிடம்தான்.
சிறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்மை பார்க்க வரலாம்.
அலுவலகத்தில் குடும்பத்தினரோ நண்பர்களோ நம்மை வந்து பார்க்கமுடியாது.
சிறையில் நமக்கு ஆகும் செலவுகளை வரிகட்டுவோர் ஏற்றுக் கொள்வர்.
அலுவலகத்தில் அலுவலகம் செல்ல ஆகும் அனைத்து செலவையும் நாமே ஏற்பதோடு, யாரோ சிறையில் அனுபவிப்பதற்காக நாம் வரியும் கட்டுகிறோம்.
சிறையில் நமக்கு எது நடந்தாலும் கேள்வி கேட்க மனித உரிமைக் குழுக்கள் இருக்கின்றன.
அலுவலகத்தில் 14 மணிநேரம் உழைத்தாலும் கேள்வி கேட்க யாரும் கிடையாது.
சிறையில் "பார்" கம்பிகளுக்கு உள்ளிருந்து கொண்டு எப்போது வெளியே போவோம் என்று யோசிப்போம்.
அலுவலகத்தில் பெரும்பாலான நேரம் "பாருக்குள்" செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம்.
சிறையில் சாடிச மனப்பான்மை உள்ள வார்டன்கள் இருப்பார்கள்.
அலுவலகத்திலும் இது போல சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு டேமேஜர், சாரி மேனேஜர் என்று பெயர். :)))
முடிவு செய்யுங்கள். எது சிறந்தது. அலுவலகமா? சிறைச்சாலையா ?

Subscribe to:
Posts (Atom)