Tuesday, August 14, 2007

கொலையின் விலை:

1.
"பஸ்ல வேற யாராவது டிக்கட் எடுக்கணுமா."
காயத்ரியை கண்டக்டரின் குரல் எழுப்பியது.
நல்ல கனவு. கனவில் சிவா. அவர்களுடைய நாளைய நல்வாழ்வு கனவாக விரிகையில் கண்டக்டரின் குரல் அதை கலைத்திருந்தது.
சிவா சொன்னது போல் தாம்பரத்தில் காத்திருப்பான். சென்னையில் ஏதேனும் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ளலாம்.

2.

அவன் ஸ்கூட்டரை ஸ்டாண்டினான்.
வயது இருபத்தைந்து. இந்திப்பட கதாநாயகன் போல் இருந்தான்.
ஆளரவமற்ற அந்த பங்களாவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
"இங்கதான இருந்தா. எங்க போனா ?".

3.
"வேகமா ஓட்டுடா. ". சான்ட்ரோ பறந்து கொண்டு இருந்தது.
"சும்மா இருடா. எனக்கே கை கால் எல்லாம் நடுங்குது. வண்டியில ஒரு பிணம் வேற இருக்குது." .
"பயப்படாதடா. அந்த பிணத்தை இதே ஈ.சி. ஆர். ரோட்டுல இருக்கிற பாழும் கிணத்துல தள்ளிடலாம். "
"நம்ப மேல ஒரு பிரச்சனையும் வராது இல்லை."
"ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடுவோம்"
"லாரி. பார்த்துடா."

4.
"வண்டியில மூணு பேர் வந்திருக்காங்க சார். இரண்டு பையனுங்க ஒரு பொண்ணு. பையனுங்க குடிச்சிருக்கானுங்க. டிரங்க் அண்டு டிரைவ். "

5.
"சார். என்னோட காயத்ரியை எப்படியாவது கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்."
"சிவா. முழு தகவலும் சொல்லுங்க".
"காயத்ரிக்கும் எனக்கும் நேத்துதான் வட பழனி கோயில்ல கல்யாணம் ஆச்சு சார். லவ் மேரேஜ். அவ எனக்காக அவங்க வீட்டை விட்டு வந்துட்டா. திருட்டுத்தனமாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பைக்ல மகாபலிபுரம் போலாம்னு ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல போயிட்டிருந்தோம். சோழிங்க நல்லூர் தாண்டி வண்டி கிளட்ச் ஒயர் அறுந்துட்டது. அங்கயே ஒரு பங்களா காம்பவுண்டு பக்கம் மர நிழல்ல அவளை நிக்க சொல்லிட்டுநான் வண்டியை தள்ளிக்கிட்டு மெக்கானிக் ஷாப் வரைக்கும் போய் சரி பண்ணிக்கிட்டு வந்தா காயத்ரியை காணலை சார்."

6.
"ஆமா சார். நீங்க சொல்லுற மாதிரி அந்த சிவப்பு சுடிதார் போட்ட பொண்ணு இங்க தான் ரோட்டு பக்கத்துலயே நின்னுட்டு இருந்தது சார்.
ஒரு சிவப்பு சாண்ட்ரோ கார் தாறுமாறா வந்து அந்த பொண்ண இடிச்சிருச்சி.
நான் தூரத்துல இருந்து ஓடி வர்றதுக்குள்ள அந்த பொண்ண கார்ல இருந்த இரண்டு பேருமா சேர்ந்து பின் சீட்ல போட்டுக்னு கிளம்பிட்டாங்க. சார்".
இளநீர் கடைக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.

7. "சாரி. சிவா. உங்க காயத்ரியை அவங்க கார்ல இடிச்சதுல காயத்ரி அந்த இடத்துலேயே இறந்திருக்காங்க.
பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடலாம்ன்ற மோட்டிவோட அவங்க மகாபலிபுரம் பக்கமா பறந்திருக்காங்க.
ஆனா லாரில மோதி அந்த இரண்டு பசங்களும் கூட.......... சாரி...".
சிவா தாங்க முடியாதவனாய் அழுது கொண்டிருந்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

12 comments:

said...

தலைவா
வெல்கம் பேக்..
என்னங்க இது? ராஜேஷ் குமார் கணக்கா, விறு விறுன்னு...
சேஞ்சுக்கு பத்தி பத்தியாப் போட்டு ஆர்வத்தைப் பத்திக்க வெச்சட்டீங்களே!

கொலையின் விலை கொலை!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கே.ஆர்.எஸ்.

ராஜேஷ் குமார் எழுதாத கதை அப்படின்னுதான் தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Welcome back :)

கதை உண்மையிலே விறுவிறு .. சூப்பர் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி விக்கி :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன தல!!!
திடீர்னு Pulp fiction ரேஞ்சுக்கு கலாசறீங்க!!! :-D

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மீண்டும் வருக. நலமா? கதை, பொருளாதாரம்ன்னு விறுவிருப்பா எழுத ஆரம்பிச்சாச்சா? கோடை விடுமுறையா

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் சி.வீ.ஆர்.
அதென்ன பல்ப் ஃபிக்சன். பழுப்பு கலர் காகிதத்துல வர்ற ஃபிக்சன் கதை.. கரீக்டா. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் பத்மா அரவிந்த்.
விடுமுறையெல்லாம் இல்லீங்க. விடுமுறை மாதிரி.
வீட்ல ஊருக்கு போயிருக்காங்க. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

நல்ல விறு விறுப்பான கதை ;-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பரோ சூப்பர் விறுவிறுப்பும் திடீர் திருப்பம் எல்லாம் சூப்பர்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சின்ன அம்மிணி.

-------------------------------------------------------------------------------------------------------------