Monday, September 24, 2007

ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி

ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது.

செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு.

நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம்.

இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ?
தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும்.
அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா.

இதனால
1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது.
2. ராமர் பிரிட்ஜ் டேமேஜ் ஆவுது.

அதனால மாற்றுத் திட்டம் தேவை.

அதனால நாம சூப்பரா யோசிச்சு புதுசா ஒரு கால்வாய் வெட்ட பிளான் ஒண்ணு கீழே போட்டிருக்கிறோம்.
இதும்படி கால்வாயை கடல்ல வெட்டாம ஊருக்குள்ள வெட்டலாம்.

தூத்துக்குடியில இருந்து கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியா திரும்பி நாகப்பட்டணத்துல ஜாயின் பண்ணலாம்.

இதனால...
1. நாட்டுக்குள்ள வெட்டறதால மீன் எதுவும் சாகாது.
2. ராமர் பிரிட்ஜ், டேமேஜ் பிரிட்ஜ் ஆவாது.
3. லோக்கல் கவர்ன்மெண்ட் கப்பல் டிரான்ஸ்போர்ட். மதுரையில இருந்தும் திருச்சியில இருந்தும் சென்னைக்கு கப்பல்ல போகலாம்.. நினைச்சி பார்த்தாலே சூப்பரா இருக்கு இல்லை.

29 comments:

said...

சீரியஸா திங்க் பண்ணி திட்டம் போட்டுட்டு திரும்பி பார்த்தா அது காமெடியா தெரியுதே. அது ஏன் ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல பார்முலதான் திரும்பி வந்தீங்க..

:)))))))))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல ஐடியா'ங்கண்ணா..... :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட!!!
இது கூட நல்ல ஐடியாவாத்தான் இருக்குது!!! :-D

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உங்கள் திட்டத்திற்கு அரைபிளேடு சமுத்திரத் திட்டம் என்று பெயரிட்டுக் காப்புரிமை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே இது நிகழவாய்ப்பு இருக்கிறது
:-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லாத்தேன் இருக்கு. நம்மூர விட்டுப்புட்டீயளேன்னு நாங்களும், நாங்க என்ன பாவமுங்கோ செஞ்சோமுன்னு நம்ம கோவை நண்பர்களும் கேட்கறதுக்கு முன்னாடி ரூட்டை மாத்து.

கால்வாய் வெட்டறதுதா சாய்பாபாவை காண்டாக்ட் பண்ணுனா போதுமாமே. செய்வோமா?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்த ரூட்டு எங்க பக்கத்து சந்து முண்டகன்னி மாரியாத்தா கோயில முட்றமாரி வர்ரதால எங்க சைடு சனங்கள்ளாம் ரொம்ப காண்டுல கீராங்கோ. உசார இரு தல...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வரைபடம் இராமர் காலத்துல எடுத்ததோ?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி புபட்டியன்.

திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இராம், சிவீஆர் நன்றி.

நன்றி பாலராஜன்கீதா. பேடண்ட் வாங்கிடலாமுங்க.

இ.கொ.
கோவை சமுத்திர திட்டம் என்று தனியாக ஒரு திட்டம் தயாரிக்கவும்.

மாறன்..

வழியிலிருக்கும் முண்ட கன்னியம்மன் மற்றும் அனைத்து ஆலயங்களையும் இந்த திட்டம் ஃபிளை ஓவர் அமைத்து இடிக்காமல் மேம்பாலத்தில் கப்பல் விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இங்கெயல்லாம் எங்கள் ராமர் ஓடி ஓடி கபடி ஆடி இருக்கலாம். அதனால் இங்க கால்வாய் வெட்டும் ஐடியவை நாங்க அனுமதிக்க முடியாது.... :-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

FloraiPuyal

இன்றைய திட்டத்திற்கு ஏற்றபடி தற்போதைய வரைபடமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அருமையான ஐடியா. காவாய்க்கு ரெண்டு பக்கமும் ஸீ வியூன்னு ப்ளாட் போட்டுக் காசு பார்க்கலாம். தண்ணிப் பஞ்சம் ( கழுவ, கொள்ள) தீரும்.) கலிஜு பண்ணாம இருக்கணும் நம்ம ஜனங்க.

kovi

//இங்கெயல்லாம் எங்கள் ராமர் ஓடி ஓடி கபடி ஆடி இருக்கலாம். அதனால் இங்க கால்வாய் வெட்டும் ஐடியவை நாங்க அனுமதிக்க முடியாது.... :-))//

ராமர் கபடி ஆடியதற்கு ஆதாரம் ராமாயணத்தில் இல்லாததால் உங்கள் எதிர்ப்பு செல்லாது :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பயமாக இருக்கு....இதை நிஜமாக வே செயல்படுத்தி தொல்லைக்கபோகிறார்களோ என்று.
சுனாமி வந்தா நீங்க சொன்ன அவ்வளவு நகரமும் காலி.
:-))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:))

அப்படியே மும்பை துறைமுகத்தையும் சென்னை துறைமுகத்தையும் இணைக்கும் திட்டத்தையும் சொல்லி இருக்கலாம்.
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி துளசி கோபால்...

இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால் தெற்கு முன்னேறும். வேலை வாய்ப்பு பெருகும்.

எல்லா பயலுவ கிட்ட இருந்தும் வேல் கம்ப பிடுங்கி எறிஞ்சிட்டு மண்வெட்டி கடப்பாரைய கொடுத்துபிடலாம் இல்லை. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வடுவூர் குமார்..

//பயமாக இருக்கு....இதை நிஜமாக வே செயல்படுத்தி தொல்லைக்கபோகிறார்களோ என்று//

ஏனுங்க... ரொம்ப நல்ல திட்டம் தானுங்களே... நிறைவேத்துனா மதுரை திருச்சி தஞ்சாவூரெல்லாம் முன்னேறுமில்லை....

அப்புறம் சுனாமி பயமெல்லாம் இல்லை... சுனாமி கால்வாயை கேட் போட்டு மூடிடலாம் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோவியாரே...

நம்ம கிட்ட சென்னை மும்பாய் மட்டுமில்லை... டெல்லி கொல்கத்தாவையும் சேர்த்து நாலு சிட்டியையும் ஜாயின் பண்ற மாதிரி தங்க நாற்கர காவாய்த் திட்டம் ஒண்ணு இருக்குதுங்கோ :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தூத்துக்குடியில இருந்து கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியா திரும்பி நாகப்பட்டணத்துல ஜாயின் பண்ணலாம்.

வழியிலிருக்கும் முண்ட கன்னியம்மன் மற்றும் அனைத்து ஆலயங்களையும் இந்த திட்டம் ஃபிளை ஓவர் அமைத்து இடிக்காமல் மேம்பாலத்தில் கப்பல் விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

துளசி கோபால் said...
அருமையான ஐடியா. காவாய்க்கு ரெண்டு பக்கமும் ஸீ வியூன்னு ப்ளாட் போட்டுக் காசு பார்க்கலாம். தண்ணிப் பஞ்சம் ( கழுவ, கொள்ள) தீரும்.) கலிஜு பண்ணாம இருக்கணும் நம்ம ஜனங்க.

ராமர் கபடி ஆடியதற்கு ஆதாரம் ராமாயணத்தில் இல்லாததால் உங்கள் எதிர்ப்பு செல்லாது :)

எல்லா பயலுவ கிட்ட இருந்தும் வேல் கம்ப பிடுங்கி எறிஞ்சிட்டு மண்வெட்டி கடப்பாரைய கொடுத்துபிடலாம் இல்லை. :)

நம்ம கிட்ட சென்னை மும்பாய் மட்டுமில்லை... டெல்லி கொல்கத்தாவையும் சேர்த்து நாலு சிட்டியையும் ஜாயின் பண்ற மாதிரி தங்க நாற்கர காவாய்த் திட்டம் ஒண்ணு இருக்குதுங்கோ :)

SUPER

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல ரோசனைங்க...இதுக்கு திட்டத்தை விட அதிகமாக ஆகும் செலவுக்கு.. அத்வானி தருவாரா, இல்ல...ராமர் தருவாரா..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இதனால...
1. நாட்டுக்குள்ள வெட்டறதால மீன் எதுவும் சாகாது.
2. ராமர் பிரிட்ஜ், டேமேஜ் பிரிட்ஜ் ஆவாது.
3. லோக்கல் கவர்ன்மெண்ட் கப்பல் டிரான்ஸ்போர்ட். மதுரையில இருந்தும் திருச்சியில இருந்தும் சென்னைக்கு கப்பல்ல போகலாம்.. நினைச்சி பார்த்தாலே சூப்பரா இருக்கு இல்லை//

//அரை பிளேடு - பேக் டு ஃபார்ம்//

நாங்க ஒத்துக்கறோம்.
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்தத் திட்டத்துக்கு ரஜனிகாந்த் ஒரு கோடி ரூபா தருவதாக கூறியிருக்கிறதாக கழுகார் சொன்னார்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடங்கப்பா... இதுல கமிஷன் ஜாஸ்தி வரும்னு சேதுபால புராஜக்டை விட்டுட்டு இதை ஆரம்பிச்சிடப் போறங்க நம்ம அரசியல்'வியாதிக'!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிக அருமையான திட்டம். இந்தத் திட்டத்திற்கு என்னுடைய நன்கொடை நூறு கோடி.

தூத்துக்குடீல இருந்து கால்வாய் வெட்டுறது சரி. கால்வாய விளாத்திகொளம் புதூர் வழியா விடச் சொல்லுங்க. எங்கூரு மக்களும் தண்ணிய கண்ணுல பாத்தாப்புல இருக்கும். அதுவுமில்லாம அந்தப் பக்கம் இருக்குறவங்களு வேலை வாய்ப்பாவும் இருக்கும்ல.

கால்வாயோட ரெண்டு பக்கமும் மரங்களை வெக்கனும். தென்ன மரமா வெச்சா மகசூலும் இருக்கும். கேரளாவுல படகு வீடு விடுறாங்களாமே. அத விடச் சீப்பா நம்மளும் விட்டுக் காசு பாக்கலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல யோசனை, ஆனால் கால்வாய் ரயில் லைன் எல்லாம் கடந்து வர வேண்டி இருக்கும், தூத்துக்குடி திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் வருவதால், உங்கள் யோசனையயை மலையாளிகள் எதிர்க்க கூடுமே? எனவே மாற்று திட்டம் இருந்தால் கூருங்கள் :P

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உலகத்திலேயே, கடலில் கலக்காத ஒரே நதி என்று பெயர் எடுத்திருக்கும் எங்கள் வைகையின் புனிதம் அறியாமல், கடல் தண்ணீரைக் கொண்டு வந்து அதில் கலக்க நினைத்து, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய சிவனால் குண்டோதரனின் தாகம் போக்குவதற்காக "வை கை" என்று சொல்லி உண்டாக்கப்பட்ட புனித நதியைக் களங்கப் படுத்தத் திட்டமிட்டிருக்கும் அரைபிளேடின் தலையைக் கொய்து வருபவர்களுக்கு எடைக்கு எடை விபூதி வழங்கப்படும் என்று சைவ வேதாந்தி எவரும் அறிவிக்கவில்லையே எப்படி?

RATHNESH

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பக்காவான ஐடியா..

அப்படி கொண்டுவந்தால் நந்தவனத்து ஆண்டி சொன்ன மாதிரி நம்ம அரசியல்வாதிகளுக்கு நல்ல கொண்டாட்டமா இருக்கும்..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,

"கொள்கைகள் ஏதுமில்லாதவன்" - இதுவே ரொம்பவும் பெரிய கொள்கையா இருக்கே!

உங்களோட இந்த நாட்டுக்குள்ள கால்வாய் வெட்டுற திட்ட வரைவு பார்த்து அரசியல்வாதிகள் கமிஷன் வரைவு திட்டம் போட்டுக்கொண்டு இருக்கப் போகிறார்கள்!

ஆழ்ந்த புரிதலுடன் தான் திரும்ப வந்திருக்கின்றீர்கள் :-))வெல்கம் பேக்!