Friday, September 21, 2007

நாம எதுக்கு திரும்பி வரோம்ணா...

வாழ்க்கை ஒரு வட்டம். நாம எங்க இருந்து வுட்டு போறமோ அங்கேயேதான் திரும்பி வரோம். நானும் வாரேன்னு கிளம்பிட்டு பார்த்தா திரும்பி இங்கயேதான் வந்து நிக்கிறேன்.

நாம எதுக்கு போறோம்னு முதல்ல இங்கதான் சொல்லியிருந்தேன். அரைகுறையா எழுதிக்கிட்டிருக்கோம்னு ஃபீல் பண்ணி கொஞ்ச நாள் பதிவு போடாம ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கறேன்னுதான் அங்க சொல்லியிருந்தேன்.
நிறைய புஸ்தகம் படிச்சு அரைபிளேடு அறிவாளி பிளேடு ஆக போறேன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் வேற விட்டுருந்தேன். அது நம்மால ஆவறது இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.
வலைப்பதிவுல எழுதறதுக்கு தமிழ் படிக்க டைப் அடிக்க தெரிஞ்ச அரைபிளேடே போதும். அரிஸ்டாடில் தேவையில்லைன்ற ஞானோதயம் நமக்கு லேட்டாதான் வந்துச்சு.

நம்ம முற்றும் பதிவுக்கு வந்த அனானி பி்ன்னூட்டம் இந்த "பகுத்தறிவு சிங்கத்தை" பார்த்து "ஆன்மீக ஆனை" ன்னு சொன்னதால இந்த சிங்கம் இங்க சவுண்டு வுட்டுட்டு சைலண்டாயிடுச்சு.
நாம சவுண்டு வுட காரணம் பதிவாளனை அவன் எழுத்தை வச்சு சாதி கண்டுபுடிக்க பார்க்காதீங்கன்றதுதான். ஆனா அந்த சவுண்ட வெச்சே நாம இந்த சாதிதான்னு நிறைய பேரு நினைச்சுக்னதுதான் படா தமாஷ்.

திரும்பி வந்து பார்த்தா அனானி ஒருத்தர் நம்மளை அயிருன்னு சொல்லி திட்டிட்டாருன்னுதான் நான் ஜகா வாங்கிட்டேன்ற மாதிரி இங்க பேச்சு அடிபடறமாதிரி தெரியுது.
இந்த மறத்தமிழனுக்கு இப்படிபட்ட தப்பபிப்ராயத்தோட திரும்பி போக மனசு இல்லை.
பின்னூட்டமொன்றில் அன்பு தம்பி லக்கியார் "அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது" என்று சொல்லியிருந்தார். அருமை அண்ணன் முகமூடி அவர்களும் அரைபிளேடு அயிரா என்று தன்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நமக்கு தெரியாமலேயே "அரைபிளேடு அயிரா?, அயிரை மீனா?" என்ற மாபெரும் கேள்வியை கிளப்பியிருக்கிறோம் என்று தெரிகிறது.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு (!) நமக்கிருப்பதை உணர்கிறோம்.
நாம ஏற்கனவே சொன்ன மாதிரி நாம மனுச சாதிதான் என்பதை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறோம்.

போரடிக்கும் பக்தி பஜனைகளோ, சலித்துப் போன நாத்திக வாதங்களோ இரண்டிலிருந்தும் விலகி நின்று வாழ்க்கையை வாழ்க்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரித் தமிழன் நான்.

யாராச்சும் இரண்டு பேர் கொள்கைன்ற (!!) பேர்ல அடிச்சிக்கிறீங்களா. ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேல்யூக்காக வேடிக்கை பார்க்கலாம். என்கிட்ட வந்தீங்கன்னா எந்த கொள்கையையும் கட்டி காப்பாத்த வேண்டிய தேவை நமக்கு இல்லை.
அப்பாவி பொதுமக்களுக்கு அன்றைய பிழைப்பை பார்ப்பதை தவிர வேறு கொள்கைகளுக்கு நேரமேது.
வீண் வாத விவாதங்களால் பயனில்லை. நேரமுமில்லை. பொழைப்ப பார்க்க போகணும் சாமிங்களா..

மிஞ்சிப் போனா ஐநூறு இன்டலக்சுவல்ஸ் படிக்கிற எடத்துல என்னை மாதிரி அரைவேக்காடு ஆளு எயுதி பெரிய கொள்கை புரட்சியெல்லாம (!!) செய்ய முடியாது அப்படின்னு நமக்கு தெளிவா தெரியும். நாம இங்க சும்மா ஜாலியான பதிவுங்களை படிச்சுக்னு ஜாலியா பதிவு எழுதிக்னு இருக்கலாம்னுதான் இருக்கோம்.

நம்மள மாதிரி அரைவேக்காடுக்கெல்லாம் இது இடமில்லையோன்னு நினைச்சு நாம ஜகா வாங்க... போட்டாரு நம்ம சர்வேசனார் ஒரு சர்வே.

அதுல திரும்பி வரணும்னு மெஜாரிட்டி ஓட்டுக்கள (56.64%) வாங்கி உங்களோட அன்பு கட்டி இழுக்க மீண்டும் வந்து எனது பதிவுலக ஆட்சி பீடத்தில் அமருகிறேன்.

என்னாது. போங்க.. போங்கன்னு 30.09% ஓட்டு போட்டு இருக்காங்களேன்றீங்களா. ஜனநாயகத்துல ஆட்சியமைக்க மெஜாரிட்டிதான் முக்கியம்.. எதிர்த்து விழுந்த ஓட்டெல்லாம் கணக்குல வராதுன்ற அடிப்படை கூட தெரியாமலா இருப்பீங்க.

ஆங்.. அப்ப நிறைய மொக்கை பதிவுகள் வரும் அப்படின்னு எதிர்பார்க்குறீங்களா...

ஆதரித்து அன்பால் என்னை கட்டிப்போட்ட என் வாசக பெருமக்களே.. தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தங்களுக்காக கடமையாற்ற டெல்லி செல்வதால் நேரம் கிடைக்கும் போது மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தொகுதி பக்கம் வந்து பதிவு சேவை ஆற்றுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

தேர்தல் அதிகாரி சர்வேசனார் அவர்களுக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் பின்னூட்டி கடமையாற்ற திரும்பி வா என்று அழைத்த நண்பர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நன்றி.

13 comments:

said...

புத்துணர்ச்சியோடு வந்த நீர் பெயரை முழு பிளேடு என மாற்றி கொள்ளளாம்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Autokku Acidkkum velai illama poyiruche :(

Vaanga, Puratchiyillatha oru samuthaayam pataippom

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வாங்க
இனிமேலாவது தவறாமல் படிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சரிதான், இப்ப திரும்பி வரும் படலம் ஆரம்பிக்குதா ? நடத்துங்க நடத்துங்க
:-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

welcome back. good decision.

pazayapadi kalakkavum.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரு போன் கால் வரலை, பொறுக்கி நாயேன்னு திட்டலை. அதுக்குள்ள வந்தாச்சா?

சரி, வாங்க வாங்க!! :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வா..வா..வா தலீவா,

நீ இல்லாத தெகிரியத்துல திர்ம்ப்ப எல்தலாம்ன்னு பாத்தேன், அதுங்காட்டியும் வந்து இனைய மக்கள காப்பாத்திட்ட.

Glad you are back!

~மாறன்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தமிழுக்காக ஊயிரை குடுப்பேன் அப்புறம் என்னென்னவோ சொன்னீங்க. இந்த பேக் டு ஃபார்ம தமிழ்ல எழுதக்கூடாதா?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:) வாங்க அரைபிளேடு ஐயா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சதுக்கபூதம்....
அரைபிளேடாய் இருப்பதே மகிழ்ச்சியானது. முழுமையடைவது புதிதாய் கற்பதற்குத் தடை :)
எனது பகுத்தறிவு பூதங்களை நம்புவதில்லை. சதுக்க பூதங்கள் எக்சப்ஷன்.
நீங்கள் சிலப்பதிகாரம் சொல்லும் சதுக்க பூதமோ :)

இளா...
கொள்கைகள் இருந்தால்தான் ஆட்டோவும் ஆசிடுக்கும் வேலை.
கொள்கைகள் துறப்போம். மனிதம் படைப்போம்.
ஆட்டோவும் ஆசிட் வீச்சும் இல்லாத சமுதாயம் படைப்போம். :)

வடுவூர் குமார்.
நன்றி. மீண்டும் மீண்டும் வருக.

உஷா அவர்களே...
வாழ்க்கை ரொம்ப சின்ன வட்டமுங்க. பாருங்க ரொம்ப சீக்கிரமே திரும்பி வந்துட்டேன் :)

சர்வேசன் அவர்களே...
திரும்பி வர தங்கள் சர்வேவே உந்துதல். தங்களுக்கு மிக்க நன்றி.

இலவசகொத்தனார்...
போன் அப்படின்னாலே நமக்கு அலர்ஜிங்க. அது பத்தி ஒரு பதிவு எழுதறேன். :)

மாறன்..
இன்னா நைனா... எயுது நைனா... நம்ம எல்லாத்துக்குள்ளாறயும் ஒரு எயுத்தாளன் தூங்கினு கீறான்.
நமக்குள்ளாற இருந்தவன் நான் தூங்க போறேன்னு போவ பார்த்தான். கஷ்டப்பட்டு இயுத்துக்னு வந்து கீறேன்.
ஐ யம் கிளாடு தட் யு ஆர் கிளாடு. :)

உமையணன்..
இப்ப கூட சொல்றேன்க.. தமிழ்க்காக ஊயிர் கொடுப்பென்.
(ஆமா ஊயிர்னா முதல்ல இன்னான்னு சொல்லுங்க).
நாம இங்லீஷை பேசியே கொன்னு அது மூலமா தமிழ் வளர்க்க பாக்குறோமுங்கோ. :)

கோவியாரே.... நன்றி. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//(ஆமா ஊயிர்னா முதல்ல இன்னான்னு சொல்லுங்க).//
ஊது ஊண்ணுமில்ல பாஸ் ஊஞ்சம் ஊணர்ச்சி ஊசப்பட்டுட்டேன்.
//நாம இங்லீஷை பேசியே கொன்னு அது மூலமா தமிழ் வளர்க்க பாக்குறோமுங்கோ. :)//
ஆஹா! நானும் அதே கேஸ்தான். அதுக்குத்தான் அவசர அவசரமா இங்கிலாந்து கிளம்பிக்கி்ட்டிருக்கேன். நீங்க அங்க அமெரிக்காவுல இங்கிலீஸ வெரட்டி வெரட்டி வெட்டுங்க. நான் இங்கிலாந்துல வெரட்டி வெரட்டி வெட்டுறேன். ங்கொக்கமக்கா பாத்துரலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Appreciate your decision arai blade!
Keep blogging more!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்கண்ணா.... வாங்கண்ணா..... :)

-------------------------------------------------------------------------------------------------------------