Monday, November 12, 2007

அஜால் குஜால் கவிதை

நேரம் பொழுதாச்சி.
கருக்கல் கவிழ்ந்தாச்சி.
ஓலைக் குடிசையது
ஒருத்தன் தட்டி நின்னான்.

"மாரி மரிக்கொழுந்தே
மச்சான் வந்திருக்கேன்.
கதவை திறந்திடடி.
கால்கடுக்க நின்னிருக்கேன்."

"வெளக்கு வெச்சு
வெகுநேரம் ஆயிருச்சு.
காலையில போனதுதான்.
காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்து போனதுதான்.
கடை தேடி போனாயோ.
கண்டதையும் குடிச்சாயோ.
கதவை திறக்க மாட்டேன்."

"கோவம் அதுதானா.
குடிச்சா குடலழிஞ்சி போகுமின்னு
நீ சொன்ன கேட்டுக்கிட்டேன்.
சத்தியமா குடிக்கலை நான்.
குலதெய்வம் மேல சத்தியம்தான்."

"எத்தனை சத்தியம்தான்
நாளும் நாளும் நான்கேட்பேன்.
நிச்சயமா நம்ப மாட்டேன்."

"நிசத்ததான் நான் சொன்னேன்.
நம்பிடடி என் தங்கம்.
காலையில ஆயாகடையில
வாங்கி துன்ன ஆப்பம்.
இன்னம் வருது பாரு ஏப்பம்.
வேற எதுவும் இறங்கலியே.
வெறும்வயிறாத்தான் வந்திருக்கேன்."

"பின்ன ஏன் பொழுதாச்சு.
கண்ட காவாளி பயகூட
சகவாசம் வச்சு
சீட்டாடி வந்தாயா."

"அச்சச்சோ. அப்படி ஏதுமில்லை.
தொட்டு தாலி கட்டுன பின்னாடி
கெட்ட சகவாசம் விட்டாச்சு."

"பின்ன வேறென்ன.
இம்புட்டு நேரம் நீயும்
இருந்ததெங்க."

"பட்ட உழைப்புக்குத்தான்
கூலி பணமா கிடைச்சுதடி.
பத்து கடையேறி
பதமா பார்த்து பார்த்து
பாதாம் அல்வா வாங்கி வந்தேன்"

"நிசமாவா".

"அதுமட்டும் இல்லையடி.
முத்து முத்து முல்லைப்பூவும்
முழங்கணக்கில் வாங்கி வந்தேன்.
அதனால நேரமாச்சு.
கதவை திறந்திடடி".

"அப்படியா?".

கதவும் திறந்திடுச்சி.
திறந்த கதவு மூடிருச்சி.
விளக்கும் அணைஞ்சிருச்சி.
வானத்து நட்சத்திரமே,
எதைப்பார்த்து கண்ணடிச்சே.

12 comments:

said...

சூப்பர் குஜாலஸ் ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோபிநாத்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

குடிசை வாசிகளின் யதார்த்த வாழ்க்கை முறையைக் கண் முன்னே கொண்டு வரும் அருமைக் குஜால் கவிதை. நாமே கதாநாயகனாக மாறுவதாக ஒரு உணர்வு. வித்தியாசமான கவிதை. வாழ்க - தொடர்க

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சீனா.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

nice! :-)

//
சூப்பர் குஜாலஸ் ;)

//
repeatey

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாக் டு ஃபார்ம் எ.கே கவிதை ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு.
ஆஹா இந்த மாதிரி அருமைக் கண்வனைப் பெற என்ன தவம் செய்தாளோ அந்தப் பெண்!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி CVR.

நன்றி மங்களூர் சிவா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வல்லிசிம்ஹன் said...

//பாக் டு ஃபார்ம் எ.கே கவிதை ரொம்ப யதார்த்தமா வந்திருக்கு.
ஆஹா இந்த மாதிரி அருமைக் கண்வனைப் பெற என்ன தவம் செய்தாளோ அந்தப் பெண்!!!//

வல்லிசிம்ஹன் அவர்களே..

இப்படிப்பட்ட பெண்கிடைக்க அந்த கணவனும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தினக் கூலி பாமர மக்களின் நிலையைப்
படம்பிச்சுக் காட்டியிருக்கீங்க. இதுதான் அவங்க தினசரி வாழ்க்கைச் சக்கரம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி செல்லி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)))