Monday, February 11, 2008

காதல் என்பது வெங்காயம்....

கண்டவுடன் காதல்.
அழகான வானவில்.
மழைநின்றதும் மறைந்துவிடும்.

----------------

காதல் ஒரு வெங்காயம்.
உரித்தால் ஒன்றுமில்லை.
வெட்டினால் கண்ணீர் வரும்.

---------

காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.
வேண்டாம்.
எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.

----------

காதலிப்பது
அறிவோடு யோசிப்பது.
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

---------

உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல
எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.
யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.

---------

காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.
ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.

----------

காதலென்பது ஒரு புதைகுழி.
எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ
அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது.

----------

உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.
பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.
மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.

------------

காதலுக்கு கண்ணில்லை.
கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.
கண்திறந்தால் காணாமல் போகிறது.

------------

காதல் ஒரு கவசம்.
மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.

காதலில்லாத காமம் சாத்தியம்.
காமமில்லாத காதல் ????

-------------

காதல் கணத்தில் தோன்றுகிறது.
நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.
மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.
மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.

----------

பிப்ரவரி 14
இன்னுமோர் முட்டாள்கள் தினம்.

---------

காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.

--------

28 comments:

said...

காதலர் தினம் வருதாமே.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

துணுக்குகள் துடுக்காக இருக்கிறது, துணிவுதான் உங்களுக்கு.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது மாதிரி யாராவது உங்களுக்கு சாபம் கொடுத்துடப் போறாங்க.

என்ன சாபமா ?
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோவி.

"காலமெல்லாம் காதலால் கஷ்டப்படு" அப்படின்னு சாபமா ?

நான் சாபத்தையெல்லாம் நம்புவதில்லை :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.
//

Supperuu.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி நெல்லை காந்த்.

----------

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
மீண்டும் காதலிப்பதை தவிர.

-------

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கல்லூரில எங்க வாத்தியாரு சொன்னது
"காதல்ங்கறது ஒரு சொறி மாதிரி!!
சொறியும் போது நல்லா இருக்கு. ரொம்ப சொறிஞ்சதுக்கப்பறம் ரத்தம் வர்ரதைப்பத்தப்பறம் ஏண்டா சொறிஞ்சோம்னு இருக்கு"
இது எப்படி இருக்கு

-------------------------------------------------------------------------------------------------------------
said...

எல்லா மேட்டரும் சூப்பரு... நிச்சயம் ஆத்திச்சூடிக்கு பக்கத்துல பாடபுத்தகத்துல சேத்துறலாம்!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

என்ன சொல்லறதுன்னு தெரியல...ஒரே குழப்பமாக இருக்கு..!! ;)

சின்ன அம்மிணி

உங்க வாத்தியார் பெரிய அனுபவஸ்தர் போல.

இவ்வளவு பெரிய தத்துவத்தை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாரே. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கருப்பன்..

ஆனா ஆத்திச்சூடி படிக்கிற வயசுலேயே இதை சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்காதே :)

ப்ளஸ் டூ சிலபஸ்ஸா வச்சுக்கலாம். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கோபிநாத் said...
தல

என்ன சொல்லறதுன்னு தெரியல...ஒரே குழப்பமாக இருக்கு..!! ;)
//

கோபிநாத்.......

நமக்காகத்தான் வெங்காயம். வெங்காயத்துக்காக நாம இல்லை.

அதுமாதிரிதான்...

நமக்காகத்தான் காதலே தவிர, காதலுக்காக நாம கிடையாது. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.//

இது ரொம்ப சூப்பர்...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி வெட்டி :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

காதல் என்பது வலைப்பதிவு, காதல் என்பது தமிழ்மணம் என்ற ரீதியில் இன்னமும் எதிர்பார்க்கிறேன் - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
ப்ளஸ் டூ சிலபஸ்ஸா வச்சுக்கலாம். :)
//
இந்த வயசுல எல்லாம் 500வது காதலியை பிக்கப் பண்ணியிருப்பார்கள்!!! எங்க ஊரில் ஒரு பையன் 2ம் வகுப்பு படிக்கும் போதே லவ் லெட்டர் குடுத்து, அந்த பொண்னு ஊர்காரர்கள் அரிவாளோடு வந்து விட்டனர்!!! அதுனால 1ம் வகுப்புலயே சொல்லிக்குடுத்துட வேண்டியது தான்!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாகூர் இஸ்மாயில்

சொல்லலாமே..

---------

காதல் எதையும் எதிர்பாராதது.
எவன் சொன்னது.

காதல் என்பது அரசாங்கம்.
கையூட்டுகளால் ஆட்சி செலுத்துகிறது.

காதல் என்பது வலைப்பூ.
பின்னூட்டங்களால் பிழைத்திருக்கிறது.

காதல் என்பது தமிழ்மணம்.
(பொருள்) திரட்டப்படுவதாலேயே மதிக்கப்படுகிறது.

-------

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்...

அப்ப ஒன்றாம் வகுப்பிலேயே ஆத்திச்சூடில சேர்த்துட வேண்டியதுதான்..

-------

"காதல் செய்யாதிருக்க விரும்பு".

"மாறுவது காதல்."

"காதலும் கற்றுமற"

"காதல் கைவிடு"

"காதல் விலக்கு"

"காதல் இகழ்"

"காதல் ஐயுறு."

"காதல் ஒழி"

"காதல் பேசேல்."

---------

சரியா :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஆஹா அற்புதம்... எப்படிப்பா உங்களுக்கு மட்டும்
தோனுது??

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ??

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய உமக்கு
23ம் ஒளவ்வை என்றே பட்டம் சூட்டலாம்..

கலியுகத்து ஆத்தி சூடி வாழ்க!
23ம் ஒளவ்வை வாழ்க!!

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கருப்பன்.
-ஆத்திச்சூடி இன்ஸ்பையர்டு பை யூ.
:)

--------------

நன்றி மாயவன். :)

--- "காதல் தவிர்."

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கிறுக்கிய நான்கு வரிகளை
கவிதை என்று நம்பவைத்தது
காதல்.

-------------

அவர்கள் காதலித்தார்கள்
கல்யாணம் செய்தார்கள்
அவள் ஜனவரியில்
அவன் பிப்ரவரியில்.

-----------

ஃபாஸ்ட் புட் உணவகத்தில்
பரிமாறப்படும் உணவுபோல் காதல்
அதே வேகத்தில்
ஆறிவிடுகிறது.

-----------

-------------------------------------------------------------------------------------------------------------
said...

காதல் கேட்டேன்
வெட்கத்தை தந்தாய்.

வெட்கத்தை கேட்டேன்
கவிதை தந்தாய்.

மாத்தி மாத்தி கொடுக்கறியே.
உனக்கு என்ன காது செவிடா.

என்னெத்த சொல்றது.. எல்லாமே சூப்பரா இருக்கு.. கவுஜ, பின்னூட்டம், ஆத்திசூடி எல்லாமே...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
காதல் கேட்டேன்
வெட்கத்தை தந்தாய்.

வெட்கத்தை கேட்டேன்
கவிதை தந்தாய்.

மாத்தி மாத்தி கொடுக்கறியே.
உனக்கு என்ன காது செவிடா.
//

அநியாயத்துக்கு சூப்பர்... கூடிய சீக்கிரம் "அகில உலக அரை பிளேடு ரசிகர் மன்றம்" ஆரம்பிச்சு மன்றத் தலைவர் ஆகிரலாம்னு பாக்குறேன்!

தயவு செஞ்சு இந்த ரா. பார்த்திபன் மாதிரி ஹைக்கூ எழுதுறேன் பேர்வழினு திரியுரவனுகளுக்கு கொஞ்சம் பாடம் எடுக்க முடியுமா??

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி புபட்டியன்.

----------

"காதல் வரம் அல்ல.
காதல் உரம்.
தாடி நன்றாக வளரும்."

-------------

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன். "அகில உலக ரசிகர் மன்றமா... ஆஆஆ".

உங்க அன்பே போதுமுங்க :)

நாட்டுல காதல் கவிஜைங்க தொல்லை தாங்க முடியலைங்க. அதுவும் காதலர் தினம் வேற வருதா...

காதல் தடவி வரும் "ஹைக்கூ"க்களில் முக்கால்வாசி "பொய்கூக்கள்" வேற என்ன சொல்ல...

------

அன்பே உன்னை
காலமெல்லாம் தாங்குவேன்..
இப்போது கொஞ்சம் நகர்கிறாயா..
உன் ஹை ஹீல்ஸால்
என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய்.

----

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்க அரை பிளேடா அல்லடு அரை 'play'டா, இப்படி புகுந்து விளையாடறீங்களே? - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி நாகூர் இஸ்மாயில். :)