தனிமை பயம் அவனை
"பீடி"த்திருக்கிறது.
பீடி புகைநடுவே
அவன்.
பயம் என்னை
பீடித்திருக்கிறது.
அவனது கவிதை
தாள்களுடன் நான்.
------
"காதலி"
என்றான்.
என்னடா என்றால்
மூன்றெழுத்து கவிதையென்றான்.
இதெல்லாம் கவிதையாடா ?
------------
பாரி கதறினான்...
முல்லைக்கு தேர் தரவோ
கார் தரவோ காசில்லை
என்னிடம்.
போடாவென்று
சொல்லி போய்விட்டாள்
காதலி முல்லை.
(யதார்த்தக் கவிஞன் !!)
----------
மெதுவாகவும்..
ஊர்ந்தும்..
தேய்ந்தும்..
நீடித்தும்..
நின்றும்
நீண்டுகொண்டிருக்கிறது.
காலம்
அவளில்லாத காரணத்தால்.
(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)
------
கையில் பேனா...
கன்னத்தில் கைவைத்து
விட்டம் வெறிக்கிறான்.
கொட்டுகிறது கவிதை.
போட்டோ பிடித்தால்
பின்னட்டைக்கு பயன்படும்.
----------
அவள் போனதால்.
அவன் கவிதை எழுதினான்.
எலக்கியம் வளர்ந்தது.
அதை விட அவன் தாடி
நன்றாக வளர்ந்தது.
----------
வெங்காயம் அரை கிலோ.
தக்காளி கால் கிலோ.
இஞ்சி.
பச்சை மிளகாய்.
கருவேப்பிலை, கொத்தமல்லி.
உ. பருப்பு அரை கிலோ.
து. பருப்பு ஒரு கிலோ.
2 ரெக்சோனா.
(பின்குறிப்பு: ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல. மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)
-----------
Tuesday, February 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
செம கலாய்ச்சல்!
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி இளா.
:)

arai blade,
semai nakkalaana kavithai..
C.N.Raj
-------------------------------------------------------------------------------------------------------------
Arumaiya Kavithaigal...
-------------------------------------------------------------------------------------------------------------
//(பின்குறிப்பு: ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல. மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)///
வாசகர்களே இவர் யாரை கலாய்க்கிறார் என்று தெரிகிறதா? தெரியவில்லையா பின்னூட்டத்தில் கேளுங்க சொல்வார்!!!!நீங்க ஏன் அவுங்களை இப்படி கலாய்க்கிறீங்க:) இருந்தாலும் இது ரொம்ப அதிகம் தான்...
(ஏதோ என்னால முடிஞ்சது:)))) நாராயண நாராயண நாராயண
-------------------------------------------------------------------------------------------------------------
//அவள் போனதால்.
அவன் கவிதை எழுதினான்.
எலக்கியம் வளர்ந்தது.
அதை விட அவன் தாடி
நன்றாக வளர்ந்தது.//
இது முழு பிளேடு!
-------------------------------------------------------------------------------------------------------------
தலை
ந்ம்ம கவிமடத்துல உமக்கு இலவசமா 'சீட்' தர ஏற்பாடு செஞ்சுடறேன் - அந்தக் கடைசி கவிதைக்காக மட்டும்
கவிமடத்தலைவன்
சாத்தான்குளத்தான்
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி C.N.Raj.
:)
------------
நன்றி செந்தில்.
:)
----------
-------------------------------------------------------------------------------------------------------------
குசும்பன் அவர்களே...
நான் கவிஞர்களை கலாய்ப்பதில்லை. கவிதைகளைத்தான் கலாய்க்கிறேன். :)
ஆமா யாருடைய கவிதைகளை கலாய்ப்பது போல் இருக்கிறது. எனக்கு மட்டும் சொல்லுங்களேன். :)
(நாரதா வந்த வேலை முடிந்ததா :) )
-------------------------------------------------------------------------------------------------------------
//அவள் போனதால்.
அவன் கவிதை எழுதினான்.
எலக்கியம் வளர்ந்தது.
அதை விட அவன் தாடி
நன்றாக வளர்ந்தது.//
//இது முழு பிளேடு!//
அனானி. பிளேடு இல்லாததால்தான் தாடி வளர்ந்தது... ஹி.. ஹி... :)
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கவிஞர் உருவாகிறார்... :)
-------------------------------------------------------------------------------------------------------------
கவிமடத் தலைவர் ஆசிப் மீரான் அவர்களே..
மடத்தில் சீட் கொடுத்ததற்கு நன்றி :)
கடைசி கவிதை போன்ற கவிதைகள் நான் தினமும் கடைக்கு போவதால் கொட்டிக் கிடக்கின்றன.
தாங்கள் தெரிவித்தால் அந்த கவிதைகளை மடத்தில் அரங்கேற்றம் செய்கிறேன். :)
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி இராம்.
எல்லாருக்குள்ளயும் ஒரு கவிஞன் ஒளிஞ்சிருக்கிறான்.
ஆனா ஒரு சிலர்தான் ஒண்ணுங்கீழே ஒண்ணுன்னு எழுதி கவிஞராகிறாங்க.
அந்த அடிப்படைய கத்துக்கிட்டோமில்லை. :)
-------------------------------------------------------------------------------------------------------------
தல
சூப்பரு...கடைசி கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு (நான் கூட அப்படி தான் எழுதுவேன்) ;))
-------------------------------------------------------------------------------------------------------------
கடைசி கவிதை சூப்பர்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காதல் வந்துச்சோ!
(கவிதையா கொட்டுதே!)
-------------------------------------------------------------------------------------------------------------
//மெதுவாகவும்..
ஊர்ந்தும்..
தேய்ந்தும்..
நீடித்தும்..
நின்றும்
நீண்டுகொண்டிருக்கிறது.
காலம்
அவளில்லாத காரணத்தால்.
(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)//
இனியும் துருத்தாதே....
அமிலம்
தெளித்த
வார்த்தையில்
நொந்து
நைய்ந்தது
பகலில்...
ஊர்ந்து
தடவி
அழுத்தி
முகர்ந்து
கடித்து
கிளறி
எனக்குள்
அமிலத்தை
கரைத்து
பீய்த்து
அடிக்கிறது
இரவில்....////
யோவ்
நான்
இப்படித்
தான்
படித்தேன்
நீ
தப்பு
தப்பா
எழுதற.
இரு
தமிழச்சி
கிட்ட
சொல்றேன்..
-------------------------------------------------------------------------------------------------------------
//கையில் பேனா...
கன்னத்தில் கைவைத்து
விட்டம் வெறிக்கிறான்.
கொட்டுகிறது கவிதை.
போட்டோ பிடித்தால்
பின்னட்டைக்கு பயன்படும்.//
http://thamizachikavithaikal.blogspot.com/2008/02/blog-post_9075.html
இந்த மாதியாங்க?
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க கோபிநாத்..
நன்றி. நாம எல்லாரும் நமக்கே தெரியாம கவிதை எழுதிட்டுதான் இருக்கோம்.
பாருங்க !
இந்த
பின்னூட்டம்
கூட
கவிதைதான் :)
----------
சிபியாரே..
காதல் வந்தாதான் கவிதை கொட்டணும்னு இல்லை.
நாலு வார்த்தை கோர்வையா கிடைச்சாலே கவிதைதான். :)
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
அனானி அண்ணாக்களா..
எதோ வம்புல இழுத்து விடறீங்க.
கவிஞனுக்கு மட்டும் கவிதையாய் தெரிவது கூட கவிதைதான்.
எனக்கு என்னுடைய மளிகை லிஸ்ட் கவிதை. அது போல அவரவர்களுக்கு அவர்கள் கவிதை கவிதை.
என்னோட மளிகை லிஸ்ட்டை கவிதைன்னு ஒத்துக்க சொல்லி உங்களை நான் கட்டாயப்படுத்தலையே.
அது கவிதையா உங்களுக்கு தெரியணும்னா எனக்கு இருக்குற கவிதை மனசு உங்களுக்கும் இருக்கணும்.
கவிதையை விட கவிதை மனசு ரொம்ப முக்கியம். :)
நம்ம துரதிர்ஷ்டம் இங்க யாருக்கும் கவிதையை ரசிக்கிற மனசு இல்லை. அதனாலதான் என்ன மாதிரி பிறவிக் கவிஞன் எல்லாம் சமூக கோபத்தால கவிதையே எழுதறதில்லை.
கவிஞனையோ கவிதையையோ மதிக்காத சமூகங்கள் உருப்படுவதில்லை.
இனி வாரத்துக்கு நாலு கவிதையாவது எழுதி இந்த சமூகத்துக்கு கவிதை விழிப்புணர்வு கொண்டு வரலாம்னு இருக்கேன்.
இருந்தாலும் கவிதைகளை தேடிப்பார்த்து திறனாய்வு செய்யும் உங்களை மாதிரி சிலர் இருப்பதால்தான் இந்த மொழியும் சமூகமும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
கலக்கல் போங்க.. அதிலும் அந்த மளிகைக் கடை லிஸ்ட் கவிதை(???).. அபாரம் :)
//மெதுவாகவும்..
ஊர்ந்தும்..
தேய்ந்தும்..
நீடித்தும்..
நின்றும்
நீண்டுகொண்டிருக்கிறது.
காலம்
அவளில்லாத காரணத்தால்.
(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)//
இது நல்ல நச் நகைச்சுவை..:)
-------------------------------------------------------------------------------------------------------------
//
வெங்காயம் அரை கிலோ.
தக்காளி கால் கிலோ.
இஞ்சி.
பச்சை மிளகாய்.
கருவேப்பிலை, கொத்தமல்லி.
உ. பருப்பு அரை கிலோ.
து. பருப்பு ஒரு கிலோ.
2 ரெக்சோனா.
(பின்குறிப்பு: ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல. மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)
//
ஊஹூம் இனிமேல் தாக்குப் பிடிக்காது... இந்த ஒரு ஐட்டத்துக்காகவாவது "அகில ஒலக அரை பிளேடு ரசிகர் மன்றம்" ஆரம்பிச்சே ஆகனும்...!!
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி ரசிகன். :)
-------------------------------------------------------------------------------------------------------------
//
//இது முழு பிளேடு!//
அனானி. பிளேடு இல்லாததால்தான் தாடி வளர்ந்தது... ஹி.. ஹி... :)
//
அது கூட வாங்கக் காசில்லைன்னு தான் அவ விலகினா!!
//(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)//
இது 'தற்குறி'ப்பேற்ற அணி;-)

Post a Comment