Wednesday, February 13, 2008

மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்

காதல்.
இந்த மூணு எழுத்து வார்த்தை மனுசனை படுத்தியெடுக்கிற மாதிரி வேறு எதுவும் படுத்தியெடுக்கிறதா தெரியலை.

அப்படியும் மனுசப் பயலுங்க காதலிச்சிட்டுதான் இருக்காங்க. ஏன் ?

உலகம் தோணுண காலத்துல இருந்து இந்த காதல் கருமம் இருந்துகிட்டுதானே இருக்கு.
எம்புட்டு காலம். எவ்வளவு காதல். இன்னும் இங்க காதல் ஏன் இருக்கு.

காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?

காதல் கதகதப்பான நெருப்பு. அந்த கதகதப்புதான் மனுசனை இன்னும் காதலிக்க வைக்குது.
ரொம்பவே நெருங்கிட்டாலும் அதே நெருப்பு சுட்டெரிச்சுடுது.

காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம். என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும். அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.

காதல் சுயமிழத்தல். சுயநினைவிழத்தல். தன்னையே இழத்தல். அது ஒரு போதை. மதுவை குடித்தவன் மயங்குவது போல் அதுவும் ஆளை மயக்குகிறது. ஆனால் தேவையான போதை.
எல்லாத்துலயும் ஒரு அளவு தெளிவு வேணும். காதலில் கூட.

காதல் தப்பில்லை. சில சமயம் காதலிக்கிறவங்க தப்பா இருக்கிறதால காதலே தப்போன்னு தோணிடும்.

காதல்ன்றது என்ன. காதல் என்பது அன்பு. ஆண் பெண் இருவருக்கு இடையே இருக்கக்கூடிய அதீத அன்பு. தங்கள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலிக்கப்படுபவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் நடைமுறையில் காதல் ஏதேனும் ஒரு கட்டத்தில் காலாவதியாகிவிடுகிறது.

வெறும் பணத்தையோ இல்லை அழகையோ பார்த்து வந்தா அது காதல் இல்லை.
அந்த காதல்ல எதிர்பார்ப்பு மட்டும் இருக்குமே தவிர அன்பு இருக்காது.

உண்மையான காதல் என்பது எந்த காதலில் காதலன் அல்லது காதலியின் தோளில் சாய்ந்து அழ முடியுமோ அந்த காதல்தான்.
பொய்யான காதல் வாழ்வின் தோல்வியின் போது நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.

காதலியுங்க. அன்பைத் தேடி காதலியுங்க.

நாம மறுத்தாலும் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் இந்த உலகம் இருக்கிற வரைக்கும் காதல் இருக்கும்.

அதே போல காதல் இருக்கிற வரைக்கும்தான் இந்த உலகமும் இருக்கும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

(எச்சரிக்கை: காதல் மனநலத்திற்கு தீங்கானது.)

11 comments:

said...

ஓடி ஒளிகிறேன்
துரத்தும் உன்காதலில் இருந்து.
காதல் புகாத கோட்டைக்குள்
புகுந்து கொண்டேன்.
மூடிக் கிடக்கும் இதயச் சாளரங்கள்.
காதலின்றி மூச்சுத் திணறுகிறேன்.

----------

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தன்னை மறந்திருப்பேன்.
உலகம் மறந்திருப்பேன்.
உன்னை மறந்திருப்பேனா.

சுவாசம் மறந்திருப்பேன்.
உன்வாசம் மறந்திருப்பேனா.
நின்பாசம் மறந்திருப்பேனா.

மறதி என்று ஒன்று உறுதி
எனில் அதுஎன் மரணத்தில்தான்
என்பதை நீ அறியாயா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

காதல் கண்ணாடி குடுவையொன்று
இறுகப் பற்றியிருந்தேன்
இறுக்கம் தாளாது நழுவி வீழ்ந்தது.
சுக்கலானது.
எடுத்து சேர்த்தேன்
பழைய உரு பெற்றது.
விரிசல்கள் ஒட்டவே இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

நாங்க பின்னூட்டம் போடலாமா!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்ன கோபி..

இப்படி கேட்டுட்டீங்க. நீங்க பின்னூட்டம் போடத்தானே இந்த பொட்டி திறந்து கிடக்கு.

யாரும் பின்னூட்டம் போடாத சோகத்துல நானே சோக கவிதையா போட்டு பின்னூட்ட பொட்டியை நிரப்பிட்டு இருக்கேன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?//

அதான் நெருப்புன்னு சொல்லியாச்சுல்ல.. அப்ப தீ பிடிக்கத்தானே செய்யும் :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம். என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும். அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.//

ரெண்டு பக்கம் கூரான கத்தின்னா எப்படி... மேலயும் கீழயுமா?!

கைப்பிடி ஒழுங்காத்தானே இருக்குது :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

// அரை பிளேடு said...
காதல் கண்ணாடி குடுவையொன்று
இறுகப் பற்றியிருந்தேன்
இறுக்கம் தாளாது நழுவி வீழ்ந்தது.
சுக்கலானது.
எடுத்து சேர்த்தேன்
பழைய உரு பெற்றது.
விரிசல்கள் ஒட்டவே இல்லை.//

ஒரு வேளை அந்த கண்ணாடி நான்ஸ்டிக்ல செஞ்சிருப்பாங்க போல...!
அதான் ஒட்டவே ஒட்டாது.. :))

எதுக்கும் நீங்க‌ குயிக் பிக்ஸ் டிரை செஞ்சு பாருங்க‌ :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சென்ஷி

//
அதான் நெருப்புன்னு சொல்லியாச்சுல்ல.. அப்ப தீ பிடிக்கத்தானே செய்யும் :))//

சரியே. ஆதி மனிதனை மாற்றிய விஷயங்கள் இரண்டு. ஒன்று நெருப்பு. மற்றது காதல்.

இரண்டும் இல்லாம மனிதன் வாழ முடியாதுன்னு ஆகி போச்சு. :)

//ரெண்டு பக்கம் கூரான கத்தின்னா எப்படி... மேலயும் கீழயுமா?!

கைப்பிடி ஒழுங்காத்தானே இருக்குது :))//

என்ன செய்யறது நிறைய பேருக்கு கத்தியை எப்படி பிடிக்கிறதுன்னே தெரியறதில்லை.

//எதுக்கும் நீங்க‌ குயிக் பிக்ஸ் டிரை செஞ்சு பாருங்க‌ :))//

உடைந்த காதலை ஒட்ட குயிக் பிக்சால் முடியாதுங்க. அப்படி முடிஞ்சா காதலர் தினத்தில அதிகம் விக்கறது குயிக் பிக்சாதான் இருக்கும். :)

கருத்துக்களுக்கு நன்றி. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய அரை பிளேடா காதல் கவிதை எழுதுவது...

காதல் அரை பிளேடையும் கெடுத்திடுச்சு..

உங்க பாதியை பார்த்திட்டிங்க போல..
(1/2 பிளெடு + 1/2 பிளெடு = முழு பிளெடு :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி மாயவன்.

மறுபாதி சண்டை போடும் போது காதலை வெறுத்து எழுதுவதும், அன்பு செலுத்தும் போது காதலை விரும்பி எழுதுவதும் நடக்கிறது.

ரத்னேஷ் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு வந்தேன்..

"No body hates love, even who hates it loves hating it."

:)

-------------------------------------------------------------------------------------------------------------