Monday, February 18, 2008

அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - "தி கிங்பின்"

"பாஸ். நாம அமெரிக்காவில நியூயார்க் வந்து இறங்கிட்டோம். நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு." மாலு மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

"வேற என்ன பண்றது. ஆசிரியர் நிறைய தமிழ்வாணன் துப்பறியும் கதை படிச்சிருப்பாரு போல. "அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர்" அப்படின்னு தலைப்பு வெச்சிட்டார். உனக்கும் எனக்கும் விசிட்டர் விசாவெல்லாம் எடுத்து எவ்வளவு செலவாயிடுச்சு தெரியுமா." ஷங்கர் சலித்துக் கொண்டான்.

"பாஸ். நீங்களேதான் டிராவல் எஜென்சியும் வெச்சிருக்கீங்களே. இதென்ன பெரிய விஷயமா." மாலு தொடர்ந்தாள்.

"நாம இங்க வெறுமனே சுத்தி பார்க்க மட்டும் வரலை. எதுக்கு வந்திருக்கோம்னு தெரியும் இல்லை"

"தெரியும் பாஸ். ஏதோ "சேஃப்டி பின்"னை கண்டு பிடிக்கணும்னு சொன்னீங்க."

"அது சேஃப்டி பின் இல்லை. கிங் பின்."

"கிங் பின்னா. கேள்வி பட்டதே இல்லையே பாஸ். அது எவ்வளவு பெரிசா இருக்கும். "

"கிங் பின் அப்படின்றது கேங் லீடர். நிழலுலக தாதா. அந்த தாதாவை கண்டு பிடிக்கிறதுதான் நம்ப பிளான்."

"தாதா ?"

"நீ மார்வல் காமிக்ஸ் எல்லாம் படிக்கிறது இல்லையா. கிங் பின்தான் ஸ்பைடர் மேனோட வில்லன். இப்ப வந்த டேர் டெவில் படத்திலயும் கிங்பின்தான் வில்லன். இங்க அண்டர் கிரவுண்ட் தாதாவை கிங்பின் அப்படின்னு சொல்வாங்க."

"வாவ். கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறோம்."

"உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்தப் போறோம்."

"வாட்?"

"உனக்கு தெரியும் இல்லையா. அமெரிக்கா பெரிய அளவுல பொருளாதார சரிவை நோக்கி போயிட்டிருக்கு. அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தா வீட்டுக் கடன். இங்க ஒரு கும்பல் வீடுகளை வாங்கிட்டு வட்டி கட்டாம விட்டுடறாங்க. இதனால வீடு ஏலத்துக்கு வருது. வாங்க ஆளில்லாம வீடு மதிப்பு குறைஞ்சு, வட்டி வீதம் குறைஞ்சு அதனால உலக பொருளாதாரமே சரிஞ்சு போச்சு. இத்தனைக்கும் பின்னாடி அந்த கும்பலோட தலைவனா ஒரு தாதா இருக்கான். அந்த கிங்பின்னை தான் நாம கண்டு பிடிக்கறோம். இதை தடுத்தி நிறுத்தி உலகப் பொருளாதாரத்தையே உயர்த்தப் போறோம்."

"பாஸ். கேட்கவே சூப்பரா இருக்கு. சின்ன வயசுல ராணி காமிக்ஸ்ல படிச்ச ஜேம்ஸ் பாண்டு கதையெல்லாம் நியாபகம் வருது."

"இது ஆக்சன் டைம்."

"தட் ஈஸ் மை ஷங்கர்." இந்த முறை அவனுக்கு புத்துணர்வு கன்னத்திலல்ல. உதட்டில் கிடைத்தது. அமெரிக்க மண்ணில்லையா.

அவன் கிறுகிறுத்துப் போனான். அவர்கள் வெளியேறும் வழிக்காக முன்னேறினார்கள்.

"பாஸ் அங்க பாருங்க NEWARK இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அப்படின்னு எழுதியிருக்கு. நாம NEWYORK தான வந்து இறங்கி இருக்கோம்."

"ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்."

"ஏர்போர்ட்ல பத்தடிக்கு இருபதடின்னு பெரிசா எழுதிவைக்கறவன் தப்பாவா எழுதியிருப்பான்."

"எனக்கும் புரியலையே. இரு பக்கத்துல கேட்கிறேன்." என்றவன் பக்கத்திலிருந்த தமிழ் இளைஞனிடம் கேட்டான் (சாஃப்ட்வேராயிருக்கும்.). "இது நியூயார்க்தானே."

அவன் ஷங்கரை பூச்சி போல பார்த்து விட்டு சொன்னான். "இது நெவார்க். நியூஜெர்சி. ஆனா நியூயார்க் பக்கம்தான்."

சிறிது நேரத்தில் மாலு ஷங்கரை பின்னி எடுத்துக் கொண்டிருந்தாள். "வந்து இறங்குனது நெவார்க்கா, நியூயார்க்கான்னு கூட தெரியலை. பெரிய துப்பறியும் நிபுணர்."

"டிக்கட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா நெவார்க்னு அடிச்சிட்டாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஹி... ஹி." வழிந்தான். "சரி வா. இங்க எதோ கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட்ல போய் கேட்டா நாமளே ஓட்டற மாதிரி கார் கிடைக்குமாம்."

"ஓக்கே. போய் காரை எடுங்க... ஆமா உங்களுக்கு லைசென்ஸ் ?"

"இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ், இண்டியன் ட்ரைவிங் லைசென்ஸ் இரண்டும் வெச்சிருக்கேன். கார் எடுக்கிறோம். நியூயார்க் லாங் ஐலண்ட்ல நாம தங்கப் போற ஹோம் ஸ்டீட் ஹோட்டல், ஜாக்சன் ஹைட்ஸ் பக்கத்துல இருக்கு. அங்க போறோம்."

"வழி தெரியுமா."

"இங்க ஜிபிஎஸ் சிஸ்டம் இருக்கு. போய்ச்சேர வேண்டிய அட்ரசை கொடுத்தா போதும். சேட்டிலைட் மூலமா கனெக்ட் ஆகி போய் சேர வேண்டிய இடத்துக்கு வழியை அதுவே சொல்லும். மேப் ஸ்கிரீன்ல தெரியும்."

"வாவ்."

----------------------

"பாஸ். ரைட்ல ஓட்டுங்க"

"ரைட்டாதான் ஓட்டுறேன்."

"அய்யோ ரைட் சைட்ல ஓட்டுங்க."

"ஆமால்ல. இந்த ஊருல ரைட் சைடுதான் ரைட் சைடு." ஒரு வழியாக அவர்கள் ஹோட்டலை போய் சேர்ந்தார்கள்.

----

அடுத்த இரண்டு நாட்களும் சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் பில்டிங், மேடம் டுஸாட்ஸ், செண்ட்ரல் பார்க் இன்னும் சில மியூசியங்கள் எல்லாம் சுற்றி பார்த்தார்கள்.

"பாஸ். உண்மைய சொல்லுங்க. சும்மா சுத்தி பார்க்கலாம்னு தான வந்தோம். கிங்பின் எல்லாம் உடான்ஸ் தானே."

"என்ன இப்படி சொல்லிட்டே. நாம வெறுமனே சுத்தி பார்த்தோம்னு நினைச்சியா. நான் கிங்பின்னோட ஆட்களோட நடமாட்டத்தையும் நோட் செஞ்சுட்டுதான் இருந்தேன். நாம தங்கியிருக்கிற ஓட்டல்லதான் கிங்பின்னோட காதலி வெனஸ்ஸா ஃபிஸ்க் தங்கியிருக்கா. அவளுடைய நடமாட்டத்தை நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்.".

"வெனஸ்ஸா பிஸ்க்தான் கிங்பின்னோட காதலி அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும்."

"சும்மாவா எத்தனை ஸ்பைடர்மேன், டேர்டெவில் கதையெல்லாம் படிச்சிருக்கேன்."

"இப்ப என்ன பண்ண போறிங்க."

"ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல். அவளை செட்யூஸ் பண்ணி கிங்பின் பத்தின ரகசியங்களை கேட்டு தெரிஞ்சுக்கப் போறேன்."

"என்னது.."

"பத்தியா என்னை தப்பா நினைச்சிட்டு. சும்மா மயக்க மட்டும்தான் செய்வேன். உண்மைகள் தெரியணும் இல்லையா.."

"சரி எப்படியோ போங்க. இந்த மூஞ்சிக்கு எவளும் மயங்க மாட்டா. நான் ஒருத்தியே உங்களுக்கு அதிகம்..."

ஷங்கர் அந்த ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்த வெனஸ்ஸாவை நோக்கி முன்னேறினான்.

"ஹாய். ஐ யம் ஷங்கர்."

"ஐ யம் வெனஸ்ஸா." வன்னிலா ஐஸ்கிரீமில் செய்தது போல் இருந்தாள்.

"யூ ஆர் பியூட்டிஃபுல். மே ஐ கிவ் யூ கம்பெனி."

"இட் ஈஸ் மை பிளஷர். யூ ஆர் சோ மேன்லி.. குட் யூ ப்ளீஸ் ஆர்டர் வைன் ஃபார் மி."

"ஷ்யூர்." ஷங்கர் மாலுவை பார்த்து கண்ணடித்தான்.

"வாட் யூ வில் ஹாவ்."

"ய கேன் ஆஃப் கோக். ஓப்பன்டு பட் நாட் ஸ்ட்ராவ்டு."

கொஞ்ச நேரத்தில் வெனஸ்ஸாவோடு அவன் அவளது அறைக்கு சென்றான்.

பின்தொடர்ந்த மாலு அந்த அறைக்கதவு சாத்தப்பட்டதால் வெளியே இருந்து பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு திரும்பினாள்.

-------
அரை மணி நேரம் போனது. ஷங்கர் திரும்பாததால் மாலு மீண்டும் அந்த அறைக்கு சென்றாள்.

உள்ளே இருந்து முக்கல் முனகல் ஒலிகள்.

அடப்பாவி. "சும்மாதான்.." அப்படின்னு சொன்னானே.

கதவை திறந்து கொண்டு நுழைந்தவள் ஷங்கரை தேடினாள்.

தரையில் ஷங்கர் கைகால்கள் கட்டப்பட்டு பனியன் ஜட்டியோடு இருந்தான். வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை பிரித்தாள்.

"பாஸ். என்ன இது. செட்யூஸ் பண்றேன்னு கிளம்பி வந்து இப்படி டிரெஸ் எல்லாம் ரெட்யூஸ் ஆகி கிடக்கறீங்க."

"ஆக்சுவலி கோக் ட்ரஸ் மேல ஊத்திக்கிச்சு. அதுக்காகத்தான் ட்ரெஸ்ஸை கழட்டினேன். ஹி.. ஹி."

"நம்பி தொலைக்கிறேன்."

"ஏமாந்த நேரமா பார்த்து கட்டி போட்டுட்டு பாக்கெட்ல இருந்த கேஷ் மொத்தமும் எடுத்துக்கிட்டா. நல்ல வேளை கார்டு எல்லாம் உங்கிட்டதானே இருக்கு."

"இப்படியா ஏமாறுவீங்க."

"இல்லை. நான் கிங் பின்னை பத்தி கேட்டதும் உஷாராயிட்டா. என்ன கட்டி போட்டுட்டு தப்பிச்சிட்டா."

"பாஸ். உங்க ட்ரெஸ் எல்லாம் இதோ இந்த மூலையில இருக்கு."

"தாங்ஸ்" எடுத்து அணிந்தான்.

"பாஸ். இந்த விளையாட்டு நமக்கு வேண்டாம். ஊருக்கு போயிடலாம்."

"முன் வெச்ச காலை பின் வெச்சு ஷங்கருக்கு பழக்கமேயில்லை. கட்டாயம் கிங் பின்னை பிடிப்பேன்."

அப்போது அவள் உள்ளே நுழைந்தாள். வெனஸ்ஸா. உடன் நான்கு தடியர்கள்.

அவர்கள் துப்பாக்கியை நீட்டினார்கள்.

-----------

"பாஸ். இவங்க நம்மை எங்க கொண்டு வந்திருக்காங்க."

"யாருக்கு தெரியும் கண்ணைக் கட்டி கொண்டு வந்திருக்காங்க. கிங் பின்னோட ஆட்களா இருக்கலாம்."

அப்போது அவர்களுக்கு எதிரே இருந்த சுவர் சுற்றியது. மறுபுறம் மேஜை. சுழல் நாற்காலி. அதில் ஒரு மொட்டைத் தலையர் இவர்களுக்கு முதுகு காட்டியபடி.

"வெல்கம் மிஸ்டர் ஷங்கர்."

"யூ... யூ... கிங் பின்."

"எஸ். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே."

"உனக்கு தமிழ் தெரியுமா."

"வேலூர் ஜெயில்ல இரண்டு வருசம் இருந்தேன். தமிழ் கத்துகிட்டேன்."

"அப்படியா.. ரோஜா படத்தில வர்ற காஷ்மீர் தீவிரவாதி தமிழ் நாட்டு ஜெயில்ல தமிழ் கத்துக்க முடியும். ஆனா அமெரிக்க கிங் பின்... எப்படி வேலூர் ஜெயில்ல..."

"ஹா.. ஹா... ஜோக்கடிச்சா நம்பிடறதா... என்னைத் தெரியலை."
கிங்பின் மொட்டைத் தலையில் தாளம் தட்டினார்.

"நீ... நீங்க.."

"ஷிவாஜி. த பாஸ். தி கிரேட் கிங்பின்."
ஷங்கரும் மாலுவும் அதிர்ச்சியானார்கள்.

"நீங்க சாஃப்ட்வேர்ல இருந்து இருநூறு கோடி சம்பாதிச்சு மக்களுக்கு உதவறதா......"

"ஹா.. ஹா.. ஹா.. அதை நீயும் நம்பறியா. நூறு இல்லை இருநூறு வருசம் பொட்டி தட்டுனாலும் இருபது கோடி கூட சாப்ட்வேர்ல சம்பாதிக்க முடியாது. நான் சம்பாதிச்சதெல்லாம் கிங் பின்னா இருந்துதான்."

"இது தப்பில்லையா."

"கண்ணா. தப்பு எதுன்னு நீ பாக்குறே. சரி எதுன்னு நான் பாக்குறேன்."

"என்ன சொல்றீங்க."

"இன்னைக்கு நீ 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்குறதுக்கு பதிலா 39 ரூபாய்கு ஒரு டாலர் வாங்கி ஈஸியா அமெரிக்கா வர முடிஞ்சிருக்கு. காரணம் யாருன்னு யோசிச்சு பார்த்தியா."

ஷங்கர் யோசிக்க ஆரம்பித்தான்.

"இந்திய கருப்பு பணத்தை ஆஃபீஸ் ரூம் போட்டு அங்கிருந்து இங்க கடத்துறேன். அந்த பணத்தை வெச்சு இங்க வீடு குறைஞ்ச விலைக்கு வாங்கி அதை எங்க ஆளுங்களை வெச்சு அதிக விலைக்கு பேங்க் லோன் போட்டு வாங்க வைக்குறேன். லாபத்துக்கு லாபம். கொஞ்ச நாள்ல அவங்க கடன் கட்டாம போக பேங்க் திவால் ஆகுது. அதனால அமெரிக்கா திவால் ஆகுது. அதனால இந்தியா சூப்பர் பவராகுது."

"இது தப்பில்லையா."

"நான் இந்திய தேசத்துக்காக உழைக்கிற ஒரு வீரன். என்னோட வழி உனக்கு தப்பா தெரியலாம். ஆனா அது இந்திய தேசத்தை முன்னேத்துற வழி. என் வழி தனி வழி."

"இருந்தாலும்..."

"கண்ணா இப்ப நான் உனக்கு இரண்டு சாய்ஸ் தர்றேன். நான் பண்றது சரின்னு நினைச்சா உன்னை கூட்டி வந்த மாதிரியே கொண்டு போய் விட்டுடுவாங்க. நான் பண்றது தப்புன்னு நினைச்சின்னா வா என்னோட ஆஃபீஸ் ரூம் போய் பேசலாம்."

"ஆஃபீஸ் ரூமா... நீங்க செய்யறது தப்புன்னு நான் எப்ப சொன்னேன்."

"ஹா... ஹா... ஹா.."

"நாங்க உங்க முகத்தை பார்க்கலாமா."

"ஹா... ஹா.. ஹா.. எனக்கு விளம்பரம் பிடிக்காது. "
அவர் ஸ்டைலாக தன் தலையில் மீண்டும் தாளம் தட்டினார்.
"ஷிவாஜியும் நானே. எம்ஜியாரும் நானே."

"அப்ப வெற்றிமோகன் எழுதினது உங்களை பத்திதானா ?"

"யாரது என்னை பத்தி எழுதறது. அடுத்த தடவை அந்த ஆளை தூக்கிட்டு வாங்க."

"விட்டுடுங்க சார். பாவம். அவர் ஒரு எலக்கியவாதி."

"சரி. நீங்க போகலாம்"
----------

மாலுவும் ஷங்கரும் அதே ஹோட்டலில் இறக்கி விடப்பட்டார்கள்.

"மாலு நாம நாளைக்கு இந்தியா திரும்பறோம்."

"அப்ப கிங்பின்."

"அவர் சட்டப் படி நடக்காம இருக்கலாம். நியாயப்படி நடக்கிறார். அதனால அவரை சட்டத்துல பிடிச்சிக் கொடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை. ஹி ஈஸ் எ கிரேட் பேட்ரியாட். ஜெய் ஹிந்த்."

------

விமானத்தின் ஜன்னலில் கீழே தெரியும் நியூயார்க்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு. (நெவார்க் அல்ல).

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்" என்றான் ஷங்கர்.

--------------


சி.ஐ.டி. ஷங்கர் கதைகள்:

3.
சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."
2. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".
1. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "என்ன எழவுடா இது ?".

12 comments:

said...

முதன் முதலில் அமெரிக்கா வந்த ஆசிரியர் நியூயார்க் என்று நினைத்துக் கொண்டு நெவார்க், நியூஜெர்சியில் இறங்கி விட்டார். அதற்கு காரணமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை இந்த கதைக்களமாக்கி உள்ளார் :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஹா.. ஹா.. ஹா.. அதை நீயும் நம்பறியா. நூறு இல்லை இருநூறு வருசம் பொட்டி தட்டுனாலும் இருபது கோடி கூட சாப்ட்வேர்ல சம்பாதிக்க முடியாது. நான் சம்பாதிச்சதெல்லாம் கிங் பின்னா இருந்துதான்."// அந்த சங்கர்க்கு தான் அது தெரியலை. சி ஐ டி சங்கருக்கும் தெரியாமப்போச்சே.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சின்ன அம்மிணி...

அதுதானே... பதிவுல எழுதுற ஒரு தமாசு கதைக்கே நாம ஆயிரத்தெட்டு லாஜிக் யோசிக்கிறோம். அறுபது கோடி போட்டு படம் எடுக்கிறாங்க.. கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாமா. :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//முதன் முதலில் அமெரிக்கா வந்த ஆசிரியர் நியூயார்க் என்று நினைத்துக் கொண்டு நெவார்க், நியூஜெர்சியில் இறங்கி விட்டார்//
யோவ், இதெல்லாம் டூமச்சு., இறங்கி போவ நீங்க என்ன பல்லவன் பஸ்ஸுல ஃபுட் போர்ட்லயா வந்தீங்க. ??
ஓ. அப்படி நினைச்சுக்கிட்டீங்களாக்கும்.. அப்போ சரி. Newarkஐ நுவார்க்குன்னுதான் சொல்றாங்கப்பா.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இளா...

ஜோக் எல்லாம் அடிக்கலை. நிசமாத்தான் சொல்றேன்.

அலுவலகத்தில நியூயார்க்கில இறங்கி கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட் பிடிக்க சொல்லி இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தார்கள்.

டிராவல் ஏஜென்சி நுவார்க்குக்கு டிக்கெட் எடுத்து கொடுத்திருந்தார்கள்.

நான் நுவார்க்கில் இறங்கும் வரை டிக்கட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைத்திருந்தேன். :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏம்பா கிங் பின் மேல உங்களுக்கு இந்த கொல வெறி???

ஸ்பைடர் மேன் நான்டுகிட்டு தொங்கப்போறார்!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
"அப்ப வெற்றிமோகன் எழுதினது உங்களை பத்திதானா ?"

"யாரது என்னை பத்தி எழுதறது. அடுத்த தடவை அந்த ஆளை தூக்கிட்டு வாங்க."

"விட்டுடுங்க சார். பாவம். அவர் ஒரு எலக்கியவாத
//

;)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்/Karuppan said...
//ஏம்பா கிங் பின் மேல உங்களுக்கு இந்த கொல வெறி???

ஸ்பைடர் மேன் நான்டுகிட்டு தொங்கப்போறார்!!
//

கருப்பன்... ஹி.. ஹி..

ஸ்பைடர் மேன் சினிமா அடுத்த பார்ட்ல கிங்பின் வராறாம். பார்க்கலாம்.
:)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிரிப்பை சிந்தி சென்றமைக்கு நன்றி நெல்லை காந்த் :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அலுவலகத்தில நியூயார்க்கில இறங்கி கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட் பிடிக்க சொல்லி இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தார்கள்.

டிராவல் ஏஜென்சி நுவார்க்குக்கு டிக்கெட் எடுத்து கொடுத்திருந்தார்கள்.

நான் நுவார்க்கில் இறங்கும் வரை டிக்கட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைத்திருந்தேன். :)//

Same Blood :-))

அப்பறம் நுவார்க் டூ மேன்செஸ்டர் :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:))))))))))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெட்டி

//Same Blood :-))//

முத தடவை வர்றப்ப Newark வேற,newyork வேற அப்படின்னு தெரியுமா என்ன. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அமெரிக்கா மேப்பே தெரிஞ்சுது. :)



-------------------------------------------------------------------------------------------------------------